Saturday, May 31, 2008

மல்கம் எக்ஸ்!!!



மல்கம் எக்ஸ்






இந்தப் புரட்சியாளனைத் தமிழினத்தவர்கள் அண்மைகாலங்களில் அதிகம் புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதற்கு அண்மைக்காலங்களில் வெளியான தமிழியல் நூல்கள் பல சான்றாயிருக்கின்றன. விடியல், காலச்சுவடு போன்ற பதிப்பகங்கள் இவரது வாழ்வியலை பல்வித கோணங்களில்ப் பதிப்பாக்கியிருந்தன.






பருந்துப் பள்ளியில் கோழியின் குஞ்சுகள் !!

பனிப்பூச்சிதறி.....
நடைபாதை விரித்திருக்கும்
அதிகாலைப் பொழுது !

பாதை நெடுகப்
பகலிரவு பாராமல்
நின்று குடை விரிக்கும்
வள்ர்ந்த பனிமரங்கள் !!

உச்சி வகிடெடுத்து
ஊரைப்பிரித்தெறியும்......
"எக்கிலின்டன்" தெருவில் தான்
என் இனிய பள்ளி !!

என் தன் வகுப்பில்
எல்லோரும் வெள்ளை நிறம்.
என்னைத்தவிர.........

தேவர்களும்,
தேவகன்னியரும் புடைசூழ - என்
12 ம் வயதில்
தனித்த கறுவலெனத்
தடம் புரண்ட நாட்கள் அது !!

யாழ்ப்பாணப் பதுங்குகுழியினிலும்,
பாழுற்ற தெருக்களிலும்,
கண்ணயர நேரமற்றுப்
படித்திருந்த எந்தனுக்கே,
எப்போதும், என்வகுப்பில்
முதல் தரத்தில் சித்தி !!

ஆங்கில ஆசான் "அகஸ்டீன்"
என்னில் அளவில்லாத
அன்பைச் சொரிந்தார்.

அகஸ்டீன் ஒருநாள்
என்னிடம் கேள்வி தொடுத்தார்.
நீ எதுவாய் வர விரும்புகின்றாய்???

நான் சொன்னேன்"சட்டத்தரணி"

நான் சொன்னதில் அர்த்தமிருந்தது !
வெளிநாட்டுத் தெருவில்,
எங்கள் அப்பன்
கோப்பை கழுவினான்..........
குப்பை பொறுக்கினான்.........
இயந்திரங்களுக்குச் சேவகம்,
பார்த்தான்.............

நான்..நான்.....
படிக்க விளைந்தேன்.
என்னுடன் படித்த வெள்ளை
நண்பர்கள்,
ஆசானாக....
மருத்துவராக.....
விஞ்ஞானியாக.....
விருப்பம் யாவும்
அங்கீகரிகப்பட்டது.

அகஸ்டீன் சொன்னார்,
“நாங்கள் கொள்கையுடையவர்.
உன்னை நேசிக்கின்றோம்,
அரவணைக்கின்றோம்.
ஆயினும் - நீ ஒரு
வந்தேறு குடிதான்!!!

நியாயமாய்ப் பார்த்தால்
உன் நிறமும் ஒரு குறை.

நீ வரக் கூடியதையே
சிந்தித்துச் சொல்க !!

உனது கரங்கள் வலுவானவைகள் !!
தச்சுத் தொழிலிற்கு
ஏற்ற உடற்பலம் !!
அந்தத் தொழிலில்
அதிக பணம் வரும் !!
பங்களா,காரெனெ
நிலமைக்கு மேலாய்
நீயோ உயரலாம்...

அந்தத் தொழிலையே
தேர்ந்திடு !!

நல்லது !!!!

என்னுள் நான்
தேர்ந்தேன் – இந்தப்
பள்ளிச் சுவர்கள்
பொல்லாதவையென......

மா.சித்திவினாயகம்.

{ஒரு இருப்பின் தொலைவு-2001}





மல்கம் எக்ஸ் !!!!!!!!




புரட்சி என்பது இரத்தம் சிந்துவது, புரட்சி என்பது சமரசமற்றது. புரட்சி என்பது தனது பாதையில் எதிர்ப்படும் அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போடுவது’


"மெய்யாகவே உங்களுக்கு கூறுகிறேன் இந்த உலகத்திலேயே மிக மோசமான கொலைகாரர்கள் வெள்ளையர்கள் தான்”

மெய்யாகவே நான் குற்றஞ் சுமத்துகிறேன் இந்த உலகத்திலேயே மிக மோசமான கடத்தல்காரர்கள் வெள்ளையர்கள் தான்”









“அந்த மனிதர்கள் போகாத ஓரிடமும் இந்த உலகத்தில் இல்லை. எல்லா இடங்களுக்கும் சென்று அவர்கள் கூறுகிறார்கள் தாங்கள் சமாதானத்தையும் இணக்கப்பாட்டையும் கொண்டு வருவதாக. ஆனால் அவர்கள் மிக மோசமான நாசகாரர்கள். அடிமை வணிகம் செய்பவர்களும், கொள்ளைக்காரர்களும் வெள்ளையர்கள் தான். அவர்கள் இதனை மறுக்க முடியாதபடி வாழும் சாட்சியங்களாக நாங்கள் உள்ளோம். நீ அமெரிக்கன் இல்லை. அமெரிக்கனால் பழிவாங்கப்பட்டவன். நீயும் நானுமே அதற்குச் சாட்சிகள்.”



''எனது அம்மா கர்வமிக்க, படித்த, ஆளுமையுள்ள பெண். அவருடைய அம்மா வெள்ளையனால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதால் அவர் வெள்ளையாக இருந்தார். வெள்ளைத்தோலை வெறுத்த அவர் தனது பிள்ளைகள் கறுப்பாகப் பிறக்க வேண்டுமென விரும்பினார். எனது அப்பாவை அவர் திருமணம் செய்ததன் காரணமே அப்பா மிகவும் கறுப்பாக இருந்தார் என்பதே.''
malcomx அல்லது Malcolm believed in by whatever means necessary to accomplish a separate nation. .
Malcolm was originally born in Omaha. His family picked up and moved later to Lansing, Michigan were Malcolm�s father was murdered by members of the Ku Klux Klan after number of death threats were made to the family. From his father�s death and the poverty that the family was facing g the mother of eight suffered a nervous breakdown, and the welfare department took her eight children away from her. After the separation Malcolm was sent first to a foster home and later to a reform school. Malcolm moved to Boston after his eighth grade year in school. In Boston he became involved with criminal activity while working various jobs for cash. In the mid 1940�s Malcolm was sentenced to jail for theft. During his stay as a prisoner, Malcolm became infatuated with the believes and teachings of Elijah Muhammad.




இவ்வாறு காட்சிப் படிமங்களினூடு செல்லும் ஸ்பைக் லீயின் கமெரா ஒரு கறுப்பு இளைஞனை வெள்ளையினப் பொலிஸ் அடித்து நொறுக்குவதையும் அதன் காரணமாக பற்றியெரியும் நெருப்பில் அமெரிக்கக் கொடி பொசுங்கிப் போவதனையும், கொழுந்து விட்டெரியும் அந்த நெருப்பு எக்ஸ் எனும் எழுத்தாக உருமாறுவதனூடாகவும் வாழும் சாட்சியாக இருந்து தனது மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பி விட்டுப் போன மாபெரும் கறுப்பினத் தலைவனான மல்கம் எக்ஸை உயிர்பெற வைக்கின்றது.
அலெக்ஸ் ஹெலி எழுதிய மல்கம் எக்ஸின் வாழ்க்கைக் காவியத்தைப் திரைக்காவியமாக சில காலங்களுக்குமுன்[1992] பெரும் பொருட் செலவில் எமக்குத் தந்திருந்தார் ஸ்பைக் லீ. இவருடைய பல படங்கள் கறுப்பர்கள் மீதான வெள்ளையர்களின் இனவெறி மற்றும் நிறவெறி பற்றியே பேசுகின்றன. இவருடைய மிக முக்கியமான திரைப்படங்களிலொன்று மல்கம் எக்ஸ். இத்திரைப்படத்தின் மூலம் பலத்த சர்ச்சைகளுக்கும் ஆளானவர். அந்த வகையில் மல்கம் எக்ஸ் திரைப்படம் மூலம் கறுப்பர்களை,அமெரிக்கர்களை மட்டுமல்லாமல் எம்மையும் வரலாற்றை ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைக்கிறார் ஸ்பைக் லீ. இந்தப்படத்தின் பின்னால் பலமொழிகளிலும் மல்கமின் வாழ்க்கை வரலாறாக்கப்பட்டது.கறுப்பின மக்களின் விடிவுக்காகப்போராடி அவர்கள் கண்முன்னாலேயே கோரமாகக் கொன்றொழிக்கப்பட்டவர் மல்கம் எக்ஸ்.அவருக்கு முன்னதாக
கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய மல்கமின் தந்தை ஏர்ல் லிட்டில் வெள்ளையர்களின் கொலைவெறிப் படையால் கொலை செய்யப்படுகிறார். அப்போது மல்கமுக்கு ஆறு வயது.
ஒரு சந்தர்ப்பத்தில் பாடசாலையில் ஆசிரியர் ஒவ்வொரு மாணவர்களாக, நீங்கள் அனைவரும் எதிர்காலத்தில் என்னவாக வர விரும்புகிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார். அதற்கு வெள்ளையின மாணவர்கள் கூறும் பதிலால் திருப்தியடையும் ஆசிரியர், மல்கமைப் பார்த்து நீ என்னவாக வர விரும்புகிறாய் எனக் கேட்க, நான் ஒரு வழக்கறிஞராக வர விரும்புகிறேன் எனக் கூறும் மல்கமை நோக்கிய ஆசிரியர் வெறுப்பும், சினமும் கொள்கிறார். அதனைக் காட்டிக் கொள்ளாதவாறு "நீ ஒரு தச்சுத் தொழிலாளியாக வரலாமே'' என்று கூறுகிறார். இந்தப் பதில் மல்கமின் பிஞ்சு மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மாணவர்களிலேயே திறமைசாலியான மாணவனாக இருந்தும் கறுப்பன் என்ற காரணத்திற்காக அவன் ஒதுக்கப்படுகிறான். பிஞ்சு மனங்களிலே நஞ்சு விதைக்கப்படுகிறது. இதன் பின்

மல்கம் குற்றச் செயல்களில் சரளமாக ஈடுபட்டு சிறை சென்று போராளியாக, யுகவிடுதலையின் புரட்சியாளானாக திரும்புகின்றான். இவனைப்பற்றிய

பலவிமர்சனங்களுள்ளும் இவன் தன் இனத்துக் கொடுமைகளுக்காய் உளம்

நொந்து கொதித்த இவனது தீரமே விஞ்சி நிற்கிறது.



No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter