சிறுகதை:மெத்தை...




சிறுகதை:
மெத்தை...
மா.சித்திவினாயகம்

இன்று நத்தார்.உலகைமீட்கும் இரட்சகர் புவிப்பிறந்த நாள். இந்த மகத்தான நாளை மார்கழி மாதம் முழுவதுமே நினைவுகூருமாப்போல முன்கூட்டியே வண்ண விளக்கு அலங்காரங்களும்,பைன் மரங்களில் தோரண மாலைகளும் குடும்பங்கள் யாவும் ஒன்று கூடி கலகலப்பும், கும்மாளமுமாய் ஊரே அமர்க்களப்பட்டது. இந்த நாட்களில்த் தான் வடதுருவக் கோடியில் இருந்து கலைமான் பூட்டிய சறுக்குவண்டியில் வெண்பனித்தாடியுடன் "சாந்தா கிள்வ்ஸ்" எனப்படும் நத்தார்ப்பாப்பா எங்களுக்கு வேண்டும் பரிசு கொணர்ந்து வீட்டின் புகைபோக்கியினூடாகப் போடுகிற நாள் என்று பேசிக்கொள்வார்கள். ஆனால் இது வரையில் நானோ, ஆடம்பரமான மோல்களில் பிள்ளைகளை மடிமீது இருத்தி போட்டோ எடுத்த பின் அதனை விற்பனை செய்கிற வியாபார நத்தார்ப் பாப்பாக்களைத்தான் கண்டிருக்கின்றேன்.

வெளியே இவ்வளவு அல்லோலகல்லோலங்கள் நடைபெறுகிற நத்தார்த் திருநாளில் நான் இப்போது தானெழுந்து உட்காருகின்றேன். வழமை போலவே இந்தக் கட்டில்,நான்கு சுவர்கள், டிக்..டிக்..கென்று நேரத்தை நிமிடமாய், மணியாய்,நாளாய்த் தொலைத்துக் கொண்டிருக்கிற பாழாய்ப்போன பழைய கடிகாரம்,பியர்ப்போத்தல்கள்,சாப்பிட்டுவிட்டுக் கழுவாதிருக்கிற கோப்பைகள், இவற்றைத்தான் இன்றைக்கும் பார்க்கின்றேன். இவற்றை எத்தனை நாழி பார்த்து தொலைப்பது? எழுந்து ஜன்னல்க் கரையோரம் செல்கின்றேன். வெளியே பைன் மரங்களிலும், நிலத்திலுமாய் விழுந்து படியும் பனித்திரள்கள். அங்குமிங்குமாய் ஓடுகிற கார்கள், விசுக்..விசுக்..கென்று நடைபோடும் மனிதர்கள் எல்லாமே உற்சாகமாய்த்தானிருக்கிறது. ஆனால் நான்????
யன்னல் கதவினால் நான் வெளியே பார்ப்பதை எவரும் சட்டை செய்யவில்லை. அதைப்போலவே நான் இன்றைக்கில்லாவிட்டாலும் என்றைக்காவது இந்த அறைக்குள் செத்து விழுந்து கிடந்தாலும் எவனும் சட்டை செய்யப் போவதில்லை. என்பதை நான் நன்கு அறிவேன். கதிரையில் உட்கார்ந்த போது அகப்பட்டிறந்த ஓர் "கொக்குறோச்" பூச்சிபோல அல்லது மழை பெய்யப் புறப்பட்டுக் காலடியினுள் நசிபட்டுச் செத்த மண்புழுப்போல யாருமே கணக்கிலெடுக்காத ஓர் மனிதப்படைப்பு. சீ.. என்ன.. வாழ்க்கை!!!

மாதத் தொடக்கத்தில் சமூக நலப்பிரிவிடம் இருந்து தபாலில் வந்து விழும் 400 டொலர்களையும் வீட்டடியில் உள்ள வங்கியில் மாற்றி பக்கத்து 'எடிக்கா"மோலில் (Edika mall) சாமான் சக்கட்டுகளை வாங்கி, கைவலிக்க வீட்டுக்குக் கொணர்ந்து சேர்த்துவிட்டால் இனி அடுத்த கிழமையோ, அல்லது அடுத்த மாதமோ தான் கீழிறங்க வேண்டிவரும். இதில் பியர்க்கேஸ் முடிந்தால் அதற்கு விதிவிலக்கு. எப்போ அது முடிகிறதோ அப்போது மதுக்கடை நோக்கி என் பயணம். வேலைதாருங்கள்...வேலைதாருங்கள்... என்று எத்தனை இடங்களில் நடையாய் நடந்து பார்த்தேன். காலில் கொஞ்சாத குறையாய் கெஞ்சினேன். எவரும் செவிசாய்க்கவிலை. எனது நிறவித்தியாசமா?? அல்லது மொழி வித்தியாசமா?? எதுவும் எனக்குப் புரியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிநாட்டவர்கள் அடிக்கப்படுவதும், நீச்சல் குளங்களில் செத்துக்கிடப்பதும், அயலில் உள்ள வெள்ளையர்களின் விபரீதமான பார்வைகளும், பத்திரிகைச் செய்திகளும் எங்களுக்குச் சாதகமில்லை என்பதை நான் ஓரளவு புரிந்து கொண்டாலும் எங்களின் சிற்றியில் எதுவும் நடவாது என்று திடமாக நான் நம்பிக்கைகொண்டிருந்தேன்.


சமர்காலங்களில் குளத்துக் கரையின் புற்களை வெட்டி,குப்பைகள் பொறுக்கிச் சுத்தமாக்க சமூக நலத்திணைக்களம் ஆணை பிறப்பிக்கும். மணித்தியாலம் 2 டொலர்கள். கொட்டிக் கிடக்கும் குப்பைகள் தேடித் துப்பரவாக்கும் தடிதண்டுகளுடன் போர்த்து இழுத்துக் கட்டி கொண்டு நான் போகிற போது, குளத்துக்கரைகளில் திறந்த மேனியாய் நீட்டி நிமிர்ந்து எந்தக் கவலையும் அற்றுக்கிடக்கும் வெள்ளைச்சடலங்கள்.
பார்க்கப் பிடிக்காதவனைபோல் பாசாங்கு செய்து செய்து கொண்டே ஒற்றைக்கண்ணால் பார்த்து உளம் குளிப்பேன். இந்தக்கண்கொள்ளாக் காட்சியைப் பார்க்க ஓராயிரம் கண்களும் போதாது என்று மனம் துள்ளலடிக்கும். இலவசமாய் இக்காட்சியை காணவைத்த சமூக நலத் திணைக்களத்திற்கு நன்றியப்பனே.
சமர் வேலைமுடிந்து விட்டது. இனி வின்ரர்..... வின்ரருக்குப் பூ விற்கலாமாம். இப்படி எண்ணித்தான் பூவிற்கப்போன என் நண்பன் சண்முகலிங்கம் எனப்படும் சண்ணைப் பார்த்துக் குடிவெறியில் இருந்த ஒருவெள்ளையன் கூப்பிட்டிருக்கின்றான்.கூப்பிட்ட வெள்ளையனுடன் இரு யூகோசிலாவிய அழகிகள் கொஞ்சிகொண்டிருந்தனர். பூ வாங்குவான் என்ற நம்பிக்கையோடு அவனை நோக்கிப் போன சண்ணைப் பார்த்துக் கறுத்த றோசாப்பூ வேண்டுமென்றிருக்கின்றான் நக்கலாக. சண்ணிற்குப் பற்றிக் கொண்டு வந்தது. சும்மா சொல்லக் கூடாது.
சண் என்னைப்போல வாயில்லாப் பிராணியில்லை. நன்றாகக் கதைக்கக் கூடிய மனிசன்.வெள்ளை ரோசா இரண்டை நீ வைச்சிருக்கிறாய். இவைக்கு கறுப்பு றோசா ஒத்து வராது. வேண்டுமென்றால் குண்டூசி தாறன் குத்தி அவையளைச் சிவப்பு றோசாவாக்கு என்றிருக்குது மனிசன்.. இவ்வளவுதான் வெள்ளையனுக்கு அவமானம் தாங்க முடியவில்லை.கோபமாக வெளிநாட்டுப் பாக்கிக்கு இந்தளவு தடிப்போ...உன்ர பூக்களைக்கொண்டுபோய் உன்ர ஆசிற்குள் வையடா..என்று பூவைப் பறித்தெறிந்திருக்கின்றான்.அதோட அந்தாள் சீவியத்தில இந்தப் பரிசுகெட்ட தொழிலுக்குப் போகமாட்டன் எண்டு அந்த வேலையையும் விட்டுப் போட்டுது.. ஆனானப்பட்ட வாயாடியான சண்ணிற்கே இந்தக் கதியென்றால் எனக்கு......
மணித்தியாலத்திற்கு ஒரு பஸ் தான் இந்தப் பாதையில பயணிக்கும். காருள்ளவன் காரில் போவான்.ஆனால் நான் காத்திருப்புத்தான்.எதற்கும் எல்லாவற்றிற்கும் காத்திருப்புத்தான். வீட்டைதாண்டி பென்ஸ் காரில் வீறிட்டபடி போவது அப்பாஸ் போலிருக்கிறது.யன்னலால் உற்று நோக்குகின்றேன் அவன் தான். இவன் அப்பாஸ் லெபனானில இருந்து அகதியாய் வந்து தன்ர மகளை நேர்சுக்குப்படிக்க வைக்க, அவள் யாரோ ஒரு டொக்டரைக்
காதலிச்சு திருமணமும் முடிஞ்சு போச்சு.அப்பாஸும்,நானும் முந்தி ஒரு காலம் ஒரே வீட்டில் குடியிருந்தனாங்கள்.அதேபோல அவனும் நானும் குளத்தங்கரையில ஒன்றாய்ப் புல்வெட்டி, அதைக் கூட்டியள்ளிக், குப்பை பொறுக்கி ஒருகாலம் அன்னியோன்யமாக வாழ்ந்தோம். அப்பாஸ் தன் குலக் கருமாந்திரங்களை ஒரு காலத்திலயும் கைவிடமாட்டேன் எண்டு, என்னோடு சோசல் வேலை செய்கிற போது சொல்லிக்கொண்டேயிருப்பான்.அவனது குடும்பம் மொட்டாக்கோடு திரிந்த குடும்பம். முழுக்க நனைந்தவனுக்கு மொட்டாக்கு எதற்கு? என்று இப்போ அவர்கள் எவரும் மொட்டாக்கு அணிவதில்லை.காலம் அவன் கொள்கைகளையெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டது. இப்போ என்னையும் , மற்றும் எல்லாவற்றையும் மறந்தது போலப் போகின்றான்அவன்.. இப்படித்தான் இங்கு கனபேர்...கையில் கொஞ்சம் பிடிபட்டவுடன் வந்த பாதையைமறந்து தலைகீழாய் மாறி..என்ன மாதிரிக் குதியாட்டம் போடுகினம். இந்தச் சந்தர்ப்பத்தில் "பெஞ்சமின் விட்கோட்" அவர்களின் பழமொழி ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. "ஏறிச் சென்ற ஏணியை எட்டி உதைத்து விடாதே. என்றாவது ஒரு நாள் நீ கீழே இறங்க நேரிடும்" இதை இவர்களில் எத்தனை பேர் உணர்ந்து நடக்கிறார்கள்.அப்பாஸ்..இப்போ புது அப்பாஸ்.இந்த நாட்டுக்குடிமகன். நான்.. நான் பழைய குறுடிதான். என்பியர்ப் போத்தல், ஆஸ்ரேக்குப் பதிலாக
பியர்ப் போத்தல் மூடியில் தட்டிய சாம்பல், இந்தக்கட்டில்,நான்கு சுவர்கள்,கடிகாரம்,யன்னல், சிலோன் சூட்கேஸ் இவைகளைத்தவிர என்னுடையதென்று சொல்வதற்கும் என் இருப்பை முக்கியப்படுத்துவதற்கும் வேறு என்ன இருக்கு.
பக்கத்துச் சிற்றியில் உள்ளூரில் கூட்டுறவுச்சங்க மனேஜராய் இருந்த கணேசன் இப்படித்தான் என்னைபோன்று அகதியாய் வந்திருந்தவன். அவனைக் காட்டு வேலைக்கென்று சமுக நலத்திணைக்களம் அனுப்பிப் போட்டாங்கள். காட்டு வேலையென்றால் நாங்கள் நினைக்கிற மாதிரிச் சாமான்யமான வேலையில்லை.விறைச்சு நிற்கிற மரத்தைப் பெரிய மெசின் பொருத்திய வாளால் அறுத்து வீழ்த்திப் பட்டை களற்றி விட வேண்டும்.பிறகு அவங்கள் அதைவிறகுக்கோ அல்லது என்ன இழவுக்கோ அதைப்பாவிக்கிறாங்கள். யாருக்குத்தெரியும். ஒரு கிழமை செய்து போட்டுக் கையெல்லாம் காய்ச்சுப்போய் வீங்கிச் சோறு கூட அள்ளிச் சாப்பிட முடியாமல் திண்டாடி... வேண்டாமினிமேல் இந்த விபரம் கெட்ட வெளிநாடு என்று எழுதிக் கொடுத்துப் போட்டு திரும்பி ஊருக்குப்போய்விட்டானாம். ஆள் அங்கு செத்துதோ? பிழைச்சுதோ? ஆனால் என்ன? எங்கட மண்ணில எது நடந்தாலும் மனதிற்கு நிம்மதி.
எனக்கும் ஊருக்குப்போக ஆசைதான். ஆனால் மானம் என்று நாம் நினைக்கிற செட்டை கிடந்து போகாதே..போகாதே... என்று அடிக்கிறதே. 20 வருடங்களாக வெளிநாட்டில் இருந்தவன் பரதேசி மாதிரி ஊரில போயிறங்கினால்....அங்குள்ள நாய் பூனைகூட மதியாது. இதுதவிர வெளிநாட்டுக்கு வந்த புதிதில் நான் ரோட்டில நிற்கிற புதிசு புதிசான பென்ஸ்,B.M.W,அவுடி என்று நல்ல நல்ல காராய்ப் பார்த்துப் பக்கத்தில போய் நின்று போட்டோ எடுத்து அனுப்பினன். பொடியன் நாளொரு காரில திரியிறான் என்று வீட்டுக்காரர் ஒருபக்கம்,போட்டோவைப்பார்க்கிற ஊர்க்காரன்கள் ஒரு பக்கம் எத்தனை கதைகளைச் சுமந்து புலம்பியிருப்பர்.அந்த நல்லெண்ணங்களை முறியடிச்சு நான் வெறுவிலியாக வீடு திரும்பினால்...இப்போ வீட்டுக்கொருபிள்ளை வெளிநாடென்று வந்திற்றுதுகள்.இப்போ எல்லாருக்கும் எல்லாம் தெரியும். ஆனால் இப்பவும் உள்ளதை உள்ளபடி சொல்ல எல்லோருக்கும் தயக்கம்தான்.
மூலையில் சிறிய அசைவு. திரும்பிப் பார்க்கின்றேன். அடா அதுதானே பார்த்தேன்.இந்தப்பொல்லாத "கொக்குறோச்' பூச்சிகள் இது நான் வந்த காலம் தொட்டு அறைக்குள்ளே தடுமாறித் திரியும். ஈழத் தமிழரின் உளவாளிகளாக இந்த அரசால் விடப்பட்ட ஒற்றர்கள் போல நான் இல்லாத பொழுதுகளில் வந்து திரியும் இப்பூச்சிகள் இப்போ.... நான் இருக்கிற போதே வரத்தொடங்கிவிட்டன. அத்துணை இளக்காரமாக நான் ஆகிப்போனேன்.
எப்போதாவது இவன் சக்கரவர்த்திதான் என் அறைக்கு வருவான்.அவனுக்கும், பெயருக்கும் ஒருவித சம்பந்தமுமில்லை. மொட்டை அடித்திருப்பான்.ஆனால் குறுந்தாடி கீழே தொங்கும். ஹரே ராமா...ஹரே கிருஸ்ணா.. என்று வாய் ஓயாமல் சொல்லுவான். நன்றாகப் பாடுவான். வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் ஐந்து நாட்களுக்குமாக ஒரே நாளில் இறைச்சியை அவித்து வைத்திருப்பான். ஹரே ராமா..ஹரே கிருஸ்ணா....இயக்கம் என்கின்றாய்.
நீ மச்சம்,மாமிசம் சாப்பிடலாமா? விரதமல்லவா இருக்கவேண்டும் என்று கேட்டால் அது அவரவர் விருப்பம்,எம்மில் மரக்கறி சாப்பிடுவோரும் உண்டு.மாடு சாப்பிடுவோரும் உண்டு. சிற்றின்பம் மூலமும் பேரின்ப வீடு அடையலாம்.சன்னியாசி மூலமும் பேரின்ப வீட்டையடையலாமே அது போலவே இங்கு எதுவும் சரியென்பான்.அவனுடன் கதைக்கிற பொழுதுகளில் நானே என் தலைமுடியை பிய்த்துக் கொள்ளலாம் போலிருக்கும்.
காலம் எவ்வளவு வேகமாய், வெகு சூட்சுமமாய், வெளிநாடுகளில் போகிறது.சுள்ளித்தடியாய் வரும் போது வந்த நான் இந்த மடிப்பு விழுந்த தொந்தி,மயிர்கொட்டி மொட்டையாகி சுற்றிவர நரைத்த தலை, பார்வை மங்கும் கண்கள், என் நேரமும் கசிந்து கொண்டிருக்கும் மூக்கு என்று எல்லாம் வெளிநாட்டுப் பரிசுகள் தான். நேற்றுத் தை இன்று மார்கழி என்ற மாதிரிப் போகிறது வருடங்கள். ஞாபகசக்தியோ வரவரக் குறைந்து கொண்டே போகிறது. எல்லாவற்றையும் எழுதித்தான் வைக வேண்டும் என்பது போல மனம் ஏவும். ஆனால் எழுதிவைக்கப் பேப்பர் இருக்கிற நேரம் பேனா இருக்காது..பேனா இருக்கிறவேளை பேப்பர் கிடையாது. எல்லாவிவகாரங்களும் தட்டுப் பட்டுக்கொண்டே போகிறது. நான் படுக்கிற மெத்தையைத்
திரும்பிப் பார்க்கின்றேன். பாறங்கல்லினுள் அகப்பட்டு நசுங்கிப் போய்க் கிடந்த பற்றைக் குவியலைப்போல அலுங்கி,நசுங்கிக்கிடந்தது அது..வருடமொருமுறை சமூக நலத்திணைக்களம் புதிய கட்டில்களை மாற்றும் என்று சொல்லப்பட்டாலும் மெத்தையே கதியென்று உட்கார்ந்த எனது கட்டில் நடுவே பதிந்து நாளும் என்னைப் படாத பாடுபடுத்தி வைக்கின்றது.இதை விரைவில் மாற்றச் சொல்லவேண்டும்.ஆனாலும் சமூகநலத் திணக்களம் வருடம் ஒரு தடைவைதானென்று பல்லவி பாடி என் வாயை அடைத்து விடுவார்கள். அவர்கள் சொலவதிலும் நியாயம் இல்லாமலில்லை. வேலையில் அரைவாசிநாள் ,கடைகளில் அரைவாசி நாள், குளத்தங்கரைகளிலும், கடற்கரை ஓரங்களிலும் மீதிநாளென்று வாழ்கிற, உழைக்கத்தெரிந்த இந்தமனிதர்கள் படுக்கிற நேரம் மிகக் குறைவு. ஆனால் நான்.... ஒரு நாளில் இருக்கின்ற 24 மணி நேரமும் மெத்தைக்குப் பாரமாய் உட்கார்ந்திருப்பதை எப்படி சமூக நலத்திணைக்களத்திடம் விளங்கப்படுத்துவது. குளி விழுந்த மெத்தையினுள் குப்புறப்படுத்துக் குலுங்க்கிக் குலுங்கி அழவேண்டும் போலிருக்கும். ஆனாலும் நான் ஆண்மகன். அழக்கூடாது....
மனம் வைராக்கியமாய் ஒத்து ஊதும்.
கிறிங்.. கிறிங்... மூலையில் உயிரற்றுச் சவமாய்க் கிடந்த தொலைபேசி காக்கா வலி கண்டதுபோல் விட்டுவிட்டுக் கீறீச்சிட்டது. ஓடிச்சென்று காதில் பொருத்துகின்றேன் பேச்சுவருவதற்குள் மறுமுனையில் இருமல். ஓ..நடேசண்ணை.....யானை வரும் பின்னே..மணியோசை வரும் முன்னே என்பது போல இருமல் என்றால் நடேசண்ணைதான் என்று இங்குள்ள எல்லோர்க்கும் தெரியும்.இந்த மனிதன் வாரத்தில் ஒரு தடைவை எண்டாலும் போன் எடுக்கும்.காசு கொடுத்துவிட்டால் ஆசியன் கடைமீன்,நண்டு,கணவாய் என்று வாங்கிக் கொண்டு வரும். சமையற் கலையின் சுளுவான நுட்பங்களையெல்லாம் அந்தாளுக்கு அத்துபடி. வாய்க்கு ருசியாய்,காப்புக் கையினாலே சாப்பிடுவது போல நடேசண்ணை சமைக்கிற நாட்களில தான் என்று அவரோடு இருக்கிற பொடியள் பெருமையோடு சொல்லும் போது மகிழ்ச்சி தாங்காது நடேசண்ணை மேலும் மேலுமாய் இருமுவார்.
வெளியே காற்று ஊ...ஊ.. என்று பலமாக வீசித் திறந்திருந்த யன்னல் வழியாகப் பேயின் இரைச்சலை உள்ளே தள்ளியது. பொறுங்க நடேசண்ணை யன்னலைச்சாத்தி விட்டு வாறன் என்று போன எனக்கு ஏதோ எரிந்து மணப்பது போல மூக்கு நுகர்ந்தது.அண்ணை ஏதோ எரிந்து மணக்குதண்ண...கொஞ்சம் நில்லுங்கோ..தொலைபேசியைவத்துவிட்டுக் கதவைத் திறக்கின்றேன்.வெளியே ஒரே புகைமண்டலம்.
கீழ்ப்படிகளில் தாவி இறங்குகின்றேன்.கீழ்ப்பக்கம் பெரும் நெருப்புச் சுவாலைகள் மிளாசி எரிந்து கொண்டிருந்தது. நான் பயத்துடன் ஐயோ எனக்கத்தியபடிமேலேஓடுகின்றேன்.அண்ண வீடு எரியுதண்ண... உடன வாங்கோ..துண்டிக்காதிருந்த தொலைபேசியில் சொல்லிவிட்டு வெளியே ஓடி வந்தேன். மூச்சு முட்டியது.



நின்று நிதானிக்க நேரமில்லை. எந்த நிமிடமும் இந்த அறையினுள்ளும் தீயின் நாக்குகள் தாவிப் பஸ்பமாக்கிவிடப்போகின்றது. .. அனல் கங்கின் கொடு பயத்தினால் கண்கள் உறைந்து போயிற்று. இந்த அனல் கங்கின் கொடுமையினுள் வெந்து அன்னிய பூமியில் அகதியாய்ச் சாகவா நான் பிறந்தேன்... இல்லை.. இல்லவே இல்லை.. உணர்வு நெற்றியில் இடிக்க பக்கவாட்டுச் சரிவுக் கரையோரமாக குசினிப்பக்கம் ஓடுகின்றேன். கதிரையை இழுத்துவிட்டு புகைபோக்கிக்கு அண்மையில் உள்ள பலகையை உடைத்து மேலேறுகின்றேன்.
தட்டுத்தடுமாறி கூரைக்கு வந்தாயிற்று. கூரை ஓடுகள் கால்வைக்க கால்வைக்க சரசரத்துக் கீழேவிழுகின்றன.மேலிருந்து கீழே விழுந்தால் எலும்பு கூட மிஞ்சாது.எல்லாம் பொடிப்பொடியாகிப் பஸ்பமாகிப் போய்விடும். நத்தாரும் அதுவுமாய் எல்லாம் வல்ல கர்த்தர் என்னைக் கைவிட்டு விட்டாரா????
கண்கள் குளமாகின.."சாந்தா கிளாஸ்" எனப்படும் நத்தார்ப்பாப்பா வரும் புகைபோக்கிப் பக்கமாய் கண்ணைத் திருப்புகின்றேன். ஏதும் அதிசயம் நிகழ்ந்து என்னை யாராவது காப்பாற்ற இயலுமா??
நம்பிக்கைகள் யாவும் செத்துப் போயின.கண்ணைமூடித்திறக்கின்றேன். என்ன அதிசயம்!!!.புகை போக்கியை அண்மித்து நிலம் வரைக்கும்போகக்கூடிய பெரிய குழாய் ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. நல்ல வேளை தவழ்ந்து தவழ்ந்து புகை போக்கியை அடைந்து
குழாயைக் கட்டிபிடித்தபடியே ஒரு வழுக்குக்கம்பத்தில் வந்தது போல நிலத்தையடைகின்றேன்.கையிற் சிறிய சிராய்ப்புகள்.கர்த்தர் என்னைக்கப்பாற்றிவிட்டார். நான் கீழே போகவும்,அம்புலன்ஸ் , தீயணக்கும் வாகனங்கள்,நடேசண்ணை, நகர்காவலர்கள் என்று யாவரும் வரவும் சரியாயிருந்தது. இதற்குள் வீட்டின் கூரை சரிந்து வீழ்ந்து தரைமட்டமாயிற்று. வீட்டுக்காரன் காப்புறுதியில் பணத்தை அறவிடுவான்...நாங்கள்??..அவுஸ்லான்டர் றவுஸ் எண்டு நினைக்கிற நாஜிகள் செய்த வேலை இது... நடேசண்ணை தளுதளுத்த குரலில் குமுறினார்.சமூக நலத்திணக்களம் எனக்கு இதோடு புதிய கட்டில், மெத்தை தந்துவிடும் என்பாடும் கொண்டாட்டமே.. என்னைக்காப்பற்றிய கர்த்தருக்கும்,எனை எரிக்கத் துடிக்கும் நாஜிகளுக்கும் தோத்திரம்.... நான் சிரிக்கின்றேன்....

நிறைவு

Read More...

Nine charged under new identity theft law!


நாடுதளுவிய மோசடியில் சில தமிழர்கள் ஈடுபடுவது கவலைக்குரியது. அவர்களின் பெயர்கள் அடங்கிய விபரங்களைத் தாங்கிய
கீழ்வரும் செய்தி கனடிய முன்னணிப்பத்திரிகைகளில் வெளியான செய்தியின் பின்னிணைப்பு
:

Nine charged under new identity theft law
January 27 2010
Three Brampton men are among nine people charged with province-wide point-of-sale “pin pad” tampering following a joint forces investigation led by the OPP Organized Crime Enforcement Bureau.

The investigation started in Parry Sound last November and a group of suspects was soon identified. They were believed responsible for numerous incidents of tampering with credit card terminals across the GTA and Ontario. Investigators said the various retailer targeted were unaware of the fraud, and the illegally-collected debit card information was used.

On Thursday, nine search warrants were executed and police seized stolen “pin pads”, hundreds of forged debit cards encoded with stolen debit card data, computer equipment used to encode magnetic stripes, and more than $100,000 in cash.

Charges were laid under the new Identity Theft Legislation, brought into law on Jan. 8.

Police are also cautioning the public to always be alert and aware when using bank debit cards.

Charged are:

Thijeepan Thirugnanasambantham, 19, of Brampton— fraud over $5,000, theft under $5,000, possession of stolen property, unauthorized use of credit card data, participating in a criminal organization, conspiracy to commit an offence, unauthorized possession of credit card data, possession of instruments for forging credit cards, theft of a credit car and purposely possessing identification information;

Thayalan Sinnarasa, 31, of Brampton— fraud over $5,000, theft under $5,000, participating in a criminal organization, unlawful possession of credit card data and purposely possessing identification information;

Selvaruban Markandu, 36, of Brampton— fraud over $5,000, possession of stolen property, participating in a criminal organization, conspiracy to commit an indictable offence and breach of probation;

Sanjeevan Balachandrasri, 22, of Toronto— fraud over $5,000, theft under $5,000, possession of stolen property, unauthorized use of credit card data, participating in a criminal organization, conspiracy to commit an offence, unauthorized possession of credit card data, possession of instruments for forging credit cards, theft of a credit car, purposely possessing identification information and breach of an undertaking;

Yokeswaran Subramanium, 23, of Toronto— fraud over $5,000, theft under $5,000, participating in a criminal organization, conspiracy to commit an indictable offence, unauthorized possession of credit card data and purposely possessing identification information;

• Dhwani Mukund Patel, 19, of Toronto— fraud over $5,000, theft under $5,000, participating in a criminal organization, conspiracy to commit an indictable offence;

Sanraj Balachandrasri, 21, of Toronto— fraud over $5,000, participate in a criminal organization and conspiracy to commit an offence;

Balasubramaniam Balachandrasri, 33, of Toronto— participate in a criminal organization and conspiracy to commit an offence;

• Thayalan Kaayathiri, 19, of Toronto— fraud over $5,000, participate in a criminal organization and conspiracy to commit an offence, unlawful possession of credit card data and possessing instruments for forging credit cards.

Anyone with information is asked to contact Det. Sgt. of the OPP Identity Crimes Unit at 1-905-671-6883.

Read More...

ஜனாதிபதியாகவுள்ள மகிந்த ராஜபக்ச !!!


கூட்டுச்சேர்ந்து தமிழனைக்கூறுபோட்ட பேய்களின் தலையில் மறுபடி மகுடம்.

யாராண்டால் என்ன???
அவர்கள் வைப்பார்கள் தமிழனுக்குக் கொள்ளி!!!


இலங்கையின் 6வது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!!
இதுவரை முடிவுகளின்படி மகிந்தவுக்கு 531,922 மேலதிக வாக்குகள்
[ புதன்கிழமை, 27 சனவரி 2010, 02:57.54 AM GMT +05:30 ]
இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆறாவது ஜனாதிபதி தோ்தலின் இதுவரை வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் படி தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள மகிந்த ராஜபக்ச எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவை விட 531,922 மேலதிக வாக்குகள் பெற்று முன்னணியிலுள்ளார்.
இதன்படி சற்று நேரத்திற்கு முன்னர் வெளியிட்ட முடிவுகளின் பிரகாரம் மகிந்த ராஜபக்சவுக்கு 1,514,944 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு 983,022 வாக்குகளும் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைவரங்களின் படி மகிந்த ராஜபக்ச 531,922 அதிகப்படியான வாக்குகள் பெற்று முன்னணியிலுள்ளார்.
இதேவேளை இதுவரை கிடைத்த முடிவுகளின் நிலையில் இலங்கையின் ஆறாவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்பது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் சரத் பொன்சேகா தங்கியுள்ள கொழும்பின் மத்தியிலுள்ள பிரபல ட்ரானஸ் ஏசியா ஹோட்டல் இன்று புதன்கிழமை அதிகாலை முதல் சிறிலங்கா இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.


மேற்படி ஹோட்டலில், பொன்சேகாவுடன் எதிர்க்கட்சிகளின் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவும், உடனிருந்து தேர்தல் முடிவுகளை அவதானித்து வருகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் தமக்குப் பாதகமாக அமையும் பட்சத்தில், தன்னை உடனடியாக கைது செய்யும் முயற்சியின் முதற்படியாக இந்தச்சுற்றி வளைப்பு இருக்கலாம் எனச் சரத் பொன்சேகா சந்தேகம் தெரிவித்துள்ளார் எனக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை சரத் பொன்சேகாவின் சொந்தத் தொகுதியில் அவர் தோல்வி அடைந்திருப்பதாகவும் அறியப்படுகிறது.


காலி மாவட்டம அம்பலாங்கொட
சரத் பொன்சேகா 19191
மகிந்த ராஜபக்ஷ 33488
கண்டி மாவட்டம்
சரத் பொன்சேகா 15338
மகிந்த ராஜபக்ஷ 22703
பதுளை மாவட்டம ஹாலி
சரத் பொன்சேகா 21946
மகிந்த ராஜபக்ஷ 23758
காலி மாவட்டம பலபிட்டிய
மகிந்த ராஜபக்ஷ 23634
சரத் பொன்சேகா 12198
காலி
சரத் பொன்சேகா 27625
மகிந்த ராஜபக்ஷ 25797
மாத்தறை
மகிந்த ராஜபக்ஷ 36428
சரத் பொன்சேகா 17219
யாழ்ப்பாணம்
சரத் பொன்சேகா 7914
மகிந்த ராஜபக்ச 3296
சிவாஜிலிங்கம் 126

சம்மாந்துறை
சரத் பொன்சேகா 27003
மஹிந்த ராஜபக்ச 19931
மூதூர்
சரத் பொன்சேகா 32631
மகிந்த ராஜபக்ச 21002
ஊர்காவற்றுறை
மகிந்த ராஜபக்ச 4611
சரத் பொன்சேகா 3976

நுவரெலியா மாவட்டம்
சரத் பொன்சேகா 180 ஆயிரத்து 586 வாக்குகள்
மகிந்த ராஜபக்ச 151 ஆயிரத்து 594 வாக்குகள்
பருத்தித்துறை
சரத் பொன்சேகா 8585
மகிந்த ராஜபக்ச 2361

Read More...

யாதுமாகி நிற்கிறது உலகு !!




யாதுமாகி நிற்கிறது உலகு !!

எல்லாம் இழந்து
ஏதிலி ஆனது - என்
தமிழ்சாதி !!

நாட்டையளித்தவனே நடுநிலமை பேசுகின்றான்
கொலஞனே இன்று தீர்ப்பாளியாகின்றான்
அகதியாக்கிய உலகே - இன்று
அகதியந்தஸ்து கொடுக்கிறதாம் !

தமிழர்க்கு முதுகுத்தோலையும்...
வேண்டும் போதெல்லாம் - அதில்
விளாசவென....
உலகத்தின் கைகளில் சாட்டையையும்
கொடுத்துப் போயிற்றுக் கடவுள்.

பிறகு பசாசுகள்
நிலவையுடைத்துச்
சூரியனைச் சிறைப்பிடித்தன.

இருள் சூழ நிலம் தவித்தது !
பச்சைவயல்களும் நீலவானும்
குண்டுகளால் சிதிலமாக்கப்பட்டன !
நிலங்களிருந்து நிறங்கள் சிதைந்தது !
எங்கும் எதிலும் சிவப்பு மட்டுமே
மீதமாய் ஒட்டப்பட்டது……..

வழியெங்கும் நிணவாடை
மூக்கைத்துளைக்கும்…..
பிணங்கள் இடறுப்படும்…...
முண்டங்கள் முனகும்…….




பாதுகாப்பென்று
மூடிவைத்த பிணத்தையும்
இழுத்தெடுத்தன குறுநரிக்கூட்டம்.

குட்டிகளைக் காப்பாற்றத்
தங்களையே பலியாக்கின
பாசத்தாய்மைகள் !!
செத்துக்கிடக்கிற தாயின்
அசைவறியாது,
அசைத்தாட்டிக் கொண்டது
பச்சிளம் பிஞ்சு !!

அம்மா, அப்பா, அண்ணா, தங்கை
சித்தப்பன், பெரியப்பன்
என்று திரும்புகிற
பக்கமெல்லாம் உறவுகள் விழவிழ
ஊர் அழிகிறது.

துப்பாக்கிச் சனியனும்
இலக்கில்லா எறிகணைகளும்
மிஞ்சிக்கிடக்கிற அபலைகளைக்
குறிபார்த்து நெருப்புமிழும்.

அச்சக்கூண்டிற்குள்
அசையாது உட்கார்ந்திருக்கிறது உடல்.
பேதலித்த உடம்பை பேய்கள்
புரட்டிப் புரட்டிப் புணர்கின்றன !

கால், கையிழந்து
இரத்தச்சேற்றுள் அமிழ்கிற சனங்களுள்,
தங்களின் விறைத்த குறியைப் புதைக்கத்
துடிக்கின்றன - தன்
இனத்தையே சூறையிடும் இரத்தக்காட்டேரிகள்.

பூக்களற்ற அப்பூமியில்
நெருப்பே மண்ணாயிருந்தது!!
குழந்தைகளையும்,
குற்றுயிராய் கிடந்தோரையும்
மிதித்து, மிதித்து
இலக்கில்லாமல் ஓடின உயிர்
எஞ்சியிருந்த ஜடங்கள்.

கால்கள் இரண்டும் போன
கர்ப்பிணியின்
"என்னைக் கொன்றுவிட்டுப் போங்கள்"
என்கிற குரல் ஒலியை
எவரும் சட்டை செய்யாமலேயே ஓடினார்கள்.
உணவில்லை, உடையில்லை
மருந்தில்லை, உறவில்லை
உறங்க ஒரு இடமில்லை.
ஓடினார்கள்.ஓடினார்கள்.
இலக்கின்றி ஓடினார்கள்

பிறகு
ஓடியவர்களுக்காக
கம்பிகளுக்குள் எல்லை போட்டார்கள்.
கால் விறைக்க நிற்க வைத்தார்கள்.
துப்பாக்கிகள், தொண்டைகளுக்குக் காவலாயிருந்தது

“மனிக் பாமில்” நின்ற படியே
சாமாதானம் வருமென்றான்
சமாதானகாலச் சூத்திரன்.

இது சரியான பாடம் எனச் சாப்பாடின்றிப்
பட்டினி கிடந்து பரிதவித்தவர்க்குப்
பத்திரம் காட்டினான்
நலன் புரித்தொண்டன்.

கதிர்காமர்
முகாம்
அப்பாவிகளை வதைத்தது.

குழந்தைகளினதும்
முடமானோரினதும்
தலைகளில்
அவர்கள் போர் வெற்றியைக்
குத்தினார்கள்.

குரல்களைப்பிடுங்கி
அவர்கள் ஊமையாய்ப்போக
இலவச மருந்தளிக்கப்பட்டது.

இனத்தை அழித்தவன்,ஒருபுறமும்....
அழிக்கத்துணைபோனவன் ம‌றுபுற‌முமாய்....தமிழர்
க‌ண்ணீரைத் துடைப்ப‌தாய் க‌தைவிடும் நாளில்
த‌ர்ம‌த்தைக் குடைகிற‌து க‌ழுகு!


உலகில் மனிதரைப் புதைக்க
மனித உரிமைகள் சபையே
முண்டியடிக்கிற
நாட்கள் இது.

இன்று
யாதுமாகி நிற்கிறது உலகு !!

எல்லாம் இழந்து
ஏதிலி ஆனது - என்
தமிழ்சாதி !!

Read More...

தலைவன் இருக்கிறான்?! உயிர்த்தெழும் பிரபாகரன்


தலைவன் இருக்கிறான்?! உயிர்த்தெழும் பிரபாகரன்

இல்லை என்கின்றனர் பலர். இருக்கிறார் என்கின்றனர் சிலர். ஈழத்துக் காடுகளில், தமிழகத்தின் தெருக்களில், கனடாவில், அமெரிக்காவில் என இன உணர்வுத் தமிழர்கள் கூடினாலே, இருக்காருல்ல..? என்ற கேள்வி எழுப்பாமல் பிரிவதில்லை. ஏழுமாதங் களாக எட்ட முடியாத விடையாக விரிந்துகொண்டே இருக்கிறது பிரபாகரன் மர்மம்!புதிதாகக் கிளம்பியிருக்கும் தமிழ்மாறன் என்பவர் தன் பங்குக்கு ஒரு வெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிறார். தைத் திருநாள் கொண்டாட்டத்தின்போது, புதிய இணைய தளமாக உதித்த எல்.டி.டி.இ. பிரஸ் என்பதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத் துறை சார்பில் ஓர் அறிக்கை வெளியானது. தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பற்றி இலங்கை அரசாங் கத்தாலும் சில சர்வதேசச் சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கிறது. தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார். தேசியத் தலைவர்பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர். தேசியத் தலைவர் அவர்கள் விரைவில் மக்கள் முன் தோன்றி, உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார் என்று அறிவித்திருக்கிறார் ச.தமிழ்மாறன். தன்னை விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வச் செய்தித் தொடர்பாளராக அறிவித்துக்கொண்டுள்ளார். புலிகளின் இலச்சினையை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்பதும் இவரது உத்தரவு. தமிழ்மாறன் யார், இதற்கு முன்னால் இவருக்கு என்ன பெயர், இந்தப் பொறுப்பில் இவரை நியமித் தது யார் என்ற கேள்விகளுக்கு இப்போதைக்கு விடை கிடைக்காது. ஆனால், பிரபாகரன் மர்மத் திரை மெள்ள விலகுவதாகவே தெரிகிறது.தம்பி இருக்கிறார் என்று நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் உறுதியாகச் சொல்லி வருகிறார்கள். பிரபாகரனின் அம்மா பார்வதியை திருமாவளவன் கடந்த வாரத்தில் சந்தித்தபோது, தம்பி நலமாக இருக்கிறார். என்னைக் கனடாவில் சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறார் என்று சொல்லியிருப்பது ஆர்வத்தை இன்னும் அதிகமாகத் தூண்டியிருக்கிறது. இவர்கள் கர்ஜிப்பதைவிட, சிங்கள அரசியல்வாதிகளின் மௌனம்தான் கூடுதலாகக் குழப்புகிறது. பிரபாகரனை அழித்துவிட்டேன் என்பதுதான் மகிந்தாவின் செல்வாக்கை சிங்களவர் மத்தியில் உயர்த்தியது. 85 சதவிகித மக்களுக்குச் சந்தோஷம் தரக்கூடிய செய்தியைச் சொல்லி வாக்குகள் தேட மகிந்தா ராஜபக்ஷே ஏன் முயற்சிக்கவில்லை? புலிகளின் அச்சுறுத்தல் இன்னமும் முழுமையாக ஓயவில்லை என்று மகிந்தா சொன்னதாக சிங்களப் பத்திரிகையான திவயின தெரிவிக்கிறது. ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரின் மரணச் சான்றிதழ்களை ஒப்படைப்பதாக பல்நோக்குக் கண்காணிப்புக் குழு சொன்னது. ஆனால், இன்னமும் தரவில்லை. எதுவும் முற்றாக முடிந்துவிடவில்லை என்பதையே இந்தச் செய்திகள் காட்டுகின்றன. தமிழ்மாறன் வெளியிட்டுள்ள அறிக்கைக்குக் கூடுதல் முக்கியத்துவத்தை இந்தத் தகவல்கள்தான் தருகின்றன. பிரபாகரன் குறித்து கொழும்பு பத்திரிகையாளர்கள் ஒரு புதுத் தகவல் தருகிறார்கள்.மே 17-ம் தேதி இன்னும் சில மணி நேரத்தில் அனைவரையும் முடித்துவிடுவார்கள் என்று சேட்டிலைட் தொலைபேசியில் அறிவித்த கடற்படைத் தளபதி சூசையிடம் எதிர்த் தரப்பில் இருந்து பேசியவர், தலைவர் என்ன ஆனார்? என்று கேட்கிறார். அந்த நேரத்திலும் சூசை, தலைவர் பத்திரமாகத்தான் இருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார். தலைவரைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுபோக நாங்கள் அனைவரும் சொன்னபோது அவர் மறுத்துவிட்டார். அவர் சம்மதிக்கவில்லையானால், மயக்க மருந்து கொடுத்தாவது கடத்திச் சென்றுவிடுவோம் என்று பொட்டு அம்மான் அப்போது சொன்னார் என்று அங்கிருந்து தப்பி வந்த போராளி ஒருவர் இணைய தளம் ஒன்றில் எழுதி இருக்கிறார். நாங்கள் கடைசியாகப் பார்த்த அன்று, தலைவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். தலைவரும் பொட்டுவும் ஜீப்பில் வந்தார்கள் என்று சொல்கிறார் அவர். ஜீப்பில் வந்தார் என்றால் இரண்டு மூன்று கிலோ மீட்டருக்குள் குறுக்கப்பட்ட காலமாக அது இருக்க வாய்ப்பில்லை. சிலபல மாதங்களுக்கு முன்பாகவே இருக்க முடியும். இதற்கு மத்தியில் வீடியோ ஒன்று இரண்டு வாரங்களுக்கு முன் பரவியது. வீட்டுக்கு ஒருவரைப் போராட்டத்துக்குத் தர வேண்டும் என்ற அடிப்படையில் தன்னைப் பலியிடவே தலைவர் தயாரானார். ஆனால், போராட்டச் சூழ்நிலை மாறி, போரைத் தொடங்க நீங்கள் அவசியம் இருந்தாக வேண்டும் என்று மற்றவர்கள் சொன்னார்கள். எனவே, அதுவரை கிழக்கு மாகாணக் காடுகளில் இருந்த மகன் சார்லஸ் ஆன்டனி முல்லைத் தீவுக்கு அழைத்து வரப்பட்டார். அதன் பிறகுதான் தலைவரை அங்கிருந்து வெளியேற்றத் திட்டமிட்டோம் என்று செய்தி சொல்லப்பட்டது. அப்படியானால், சிங்கள அரசாங்கம் காட்டும் பிரபாகரன் சடலம் யார்? அதற்கும் அந்த வீடியோவில் பதில் இருக்கிறது. பிரபாகரனின் தோற்றத்தைப்போலவே இருப்பவர் போராளி விமலன். தலைவருக்கும் அவருக்குமான உருவ ஒற்றுமை அனைவரும் அறிந்ததுதான். அதைவைத்து சிங்கள அரசாங்கம் வேடிக்கை காட்டுகிறது என்று பதில் சொல்லப்படுகிறது. பொட்டு அம்மானே இது போன்ற திசை திருப்பும் காரியங்களை அழகாகச் செய்வார் என்பதால், அவரது வேலையாகக்கூட இந்தச் சடலம் இருக்கலாம் என்று சொல்பவர்களும் உண்டு.தலைவர் பிரபாகரன் விரைவில் உயிர்த்தெழுவார் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்வதைஅலட்சி யப்படுத்த முடியவில்லை!
தலைவன் இருக்கிறான்?! உயிர்த்தெழும் பிரபாகரன் இல்லை என்கின்றனர் பலர். இருக்கிறார் என்கின்றனர் சிலர். ஈழத்துக் காடுகளில், தமிழகத்தின் தெருக்களில், கனடாவில், அமெரிக்காவில் என இன உணர்வுத் தமிழர்கள் கூடினாலே, இருக்காருல்ல..? என்ற கேள்வி எழுப்பாமல் பிரிவதில்லை. ஏழுமாதங் களாக எட்ட முடியாத விடையாக விரிந்துகொண்டே இருக்கிறது பிரபாகரன் மர்மம்!புதிதாகக் கிளம்பியிருக்கும் தமிழ்மாறன் என்பவர் தன் பங்குக்கு ஒரு வெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிறார். தைத் திருநாள் கொண்டாட்டத்தின்போது, புதிய இணைய தளமாக உதித்த எல்.டி.டி.இ. பிரஸ் என்பதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத் துறை சார்பில் ஓர் அறிக்கை வெளியானது. தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பற்றி இலங்கை அரசாங் கத்தாலும் சில சர்வதேசச் சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கிறது. தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார். தேசியத் தலைவர்பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர். தேசியத் தலைவர் அவர்கள் விரைவில் மக்கள் முன் தோன்றி, உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார் என்று அறிவித்திருக்கிறார் ச.தமிழ்மாறன். தன்னை விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வச் செய்தித் தொடர்பாளராக அறிவித்துக்கொண்டுள்ளார். புலிகளின் இலச்சினையை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்பதும் இவரது உத்தரவு. தமிழ்மாறன் யார், இதற்கு முன்னால் இவருக்கு என்ன பெயர், இந்தப் பொறுப்பில் இவரை நியமித் தது யார் என்ற கேள்விகளுக்கு இப்போதைக்கு விடை கிடைக்காது. ஆனால், பிரபாகரன் மர்மத் திரை மெள்ள விலகுவதாகவே தெரிகிறது.தம்பி இருக்கிறார் என்று நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் உறுதியாகச் சொல்லி வருகிறார்கள். பிரபாகரனின் அம்மா பார்வதியை திருமாவளவன் கடந்த வாரத்தில் சந்தித்தபோது, தம்பி நலமாக இருக்கிறார். என்னைக் கனடாவில் சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறார் என்று சொல்லியிருப்பது ஆர்வத்தை இன்னும் அதிகமாகத் தூண்டியிருக்கிறது. இவர்கள் கர்ஜிப்பதைவிட, சிங்கள அரசியல்வாதிகளின் மௌனம்தான் கூடுதலாகக் குழப்புகிறது. பிரபாகரனை அழித்துவிட்டேன் என்பதுதான் மகிந்தாவின் செல்வாக்கை சிங்களவர் மத்தியில் உயர்த்தியது. 85 சதவிகித மக்களுக்குச் சந்தோஷம் தரக்கூடிய செய்தியைச் சொல்லி வாக்குகள் தேட மகிந்தா ராஜபக்ஷே ஏன் முயற்சிக்கவில்லை? புலிகளின் அச்சுறுத்தல் இன்னமும் முழுமையாக ஓயவில்லை என்று மகிந்தா சொன்னதாக சிங்களப் பத்திரிகையான திவயின தெரிவிக்கிறது. ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரின் மரணச் சான்றிதழ்களை ஒப்படைப்பதாக பல்நோக்குக் கண்காணிப்புக் குழு சொன்னது. ஆனால், இன்னமும் தரவில்லை. எதுவும் முற்றாக முடிந்துவிடவில்லை என்பதையே இந்தச் செய்திகள் காட்டுகின்றன. தமிழ்மாறன் வெளியிட்டுள்ள அறிக்கைக்குக் கூடுதல் முக்கியத்துவத்தை இந்தத் தகவல்கள்தான் தருகின்றன. பிரபாகரன் குறித்து கொழும்பு பத்திரிகையாளர்கள் ஒரு புதுத் தகவல் தருகிறார்கள்.மே 17-ம் தேதி இன்னும் சில மணி நேரத்தில் அனைவரையும் முடித்துவிடுவார்கள் என்று சேட்டிலைட் தொலைபேசியில் அறிவித்த கடற்படைத் தளபதி சூசையிடம் எதிர்த் தரப்பில் இருந்து பேசியவர், தலைவர் என்ன ஆனார்? என்று கேட்கிறார். அந்த நேரத்திலும் சூசை, தலைவர் பத்திரமாகத்தான் இருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார். தலைவரைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுபோக நாங்கள் அனைவரும் சொன்னபோது அவர் மறுத்துவிட்டார். அவர் சம்மதிக்கவில்லையானால், மயக்க மருந்து கொடுத்தாவது கடத்திச் சென்றுவிடுவோம் என்று பொட்டு அம்மான் அப்போது சொன்னார் என்று அங்கிருந்து தப்பி வந்த போராளி ஒருவர் இணைய தளம் ஒன்றில் எழுதி இருக்கிறார். நாங்கள் கடைசியாகப் பார்த்த அன்று, தலைவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். தலைவரும் பொட்டுவும் ஜீப்பில் வந்தார்கள் என்று சொல்கிறார் அவர். ஜீப்பில் வந்தார் என்றால் இரண்டு மூன்று கிலோ மீட்டருக்குள் குறுக்கப்பட்ட காலமாக அது இருக்க வாய்ப்பில்லை. சிலபல மாதங்களுக்கு முன்பாகவே இருக்க முடியும். இதற்கு மத்தியில் வீடியோ ஒன்று இரண்டு வாரங்களுக்கு முன் பரவியது. வீட்டுக்கு ஒருவரைப் போராட்டத்துக்குத் தர வேண்டும் என்ற அடிப்படையில் தன்னைப் பலியிடவே தலைவர் தயாரானார். ஆனால், போராட்டச் சூழ்நிலை மாறி, போரைத் தொடங்க நீங்கள் அவசியம் இருந்தாக வேண்டும் என்று மற்றவர்கள் சொன்னார்கள். எனவே, அதுவரை கிழக்கு மாகாணக் காடுகளில் இருந்த மகன் சார்லஸ் ஆன்டனி முல்லைத் தீவுக்கு அழைத்து வரப்பட்டார். அதன் பிறகுதான் தலைவரை அங்கிருந்து வெளியேற்றத் திட்டமிட்டோம் என்று செய்தி சொல்லப்பட்டது. அப்படியானால், சிங்கள அரசாங்கம் காட்டும் பிரபாகரன் சடலம் யார்? அதற்கும் அந்த வீடியோவில் பதில் இருக்கிறது. பிரபாகரனின் தோற்றத்தைப்போலவே இருப்பவர் போராளி விமலன். தலைவருக்கும் அவருக்குமான உருவ ஒற்றுமை அனைவரும் அறிந்ததுதான். அதைவைத்து சிங்கள அரசாங்கம் வேடிக்கை காட்டுகிறது என்று பதில் சொல்லப்படுகிறது. பொட்டு அம்மானே இது போன்ற திசை திருப்பும் காரியங்களை அழகாகச் செய்வார் என்பதால், அவரது வேலையாகக்கூட இந்தச் சடலம் இருக்கலாம் என்று சொல்பவர்களும் உண்டு.தலைவர் பிரபாகரன் விரைவில் உயிர்த்தெழுவார் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்வதைஅலட்சி யப்படுத்த முடியவில்லை!


div>
pirabakaran news @ Yahoo! Video


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் உடல் என்று காட்டியது, கொல்லப்பட்ட சிங்கள இராணுவத்தை சேர்ந்த ஒருவருடையதா????...


இந்தக் காணொளியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட தொப்பி போட்ட இலங்கை இராணுவ வீரரை மட்டும் உற்று நோக்குங்கள்.. இலங்கை இராணுவமும் அரசும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலமென்று காட்டிய உருவத்துடன் இவர் பொருந்துகிறாரா இல்லையா?? ... என்பதை சிந்திக்கவே இந்தக் காணொளி , மிகவும் அவதானமாக பாருங்கள்.







Read More...

Panic, Looting And Triage After Major Haiti Quake


கெயிட்டித்தீவையை உலுக்கிய பூகம்பம்: ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் பலி!

புதைகுழியில் சிக்கி அவலக்குரல் எழுப்பும் 11 வயதுச் சிறுமியின் குரல் உங்கள் காதில் விழுகிறதா!?!!!!!!!!!!!!!!!
http://www.youtube.com/watch?v=rzcc95zJIaU

Panic, Looting And Triage After Major Haiti Quake


People walk and sit in the street after an earthquake struck Port au Prince, Haiti, Tuesday, Jan. 12, 2010. A 7.0-magnitude earthquake, the largest ever recorded in the area, rocked Haiti on Tuesday.


People gather in the street after an earthquake in Port-au-Prince, Haiti, Tuesday, Jan. 12, 2010. A 7.0-magnitude earthquake, the largest ever recorded in the area, rocked Haiti on Tuesday.


Debris lays in the street after an earthquake along the Delmas road in Port-au-Prince, Haiti, Wednesday, Jan. 13, 2010. A 7.0-magnitude earthquake, the largest ever recorded in the area, rocked Haiti on Tuesday.

An earthquake victim is carried from a vehicle to a funeral home in Port-au-Prince, Haiti, Wednesday, Jan. 13, 2010. The 7.0-magnitude earthquake that hit Haiti on Tuesday flattened the president's palace, the cathedral, hospitals, schools, the main prison and whole neighborhoods.




This Jan. 12, 2010 photo shows injured people being tended to at Hotel Villa Creole in Port-au-Prince, Haiti after a 7.0-magnitude earthquake hit the Caribbean nation. The International Red Cross says a third of Haiti's 9 million people may need emergency aid and that it would take a day or two for a clear picture of the damage to emerge from Tuesday's earthquake.

APTN shows an injured boy in Port-au-Prince, Wednesday Jan. 13, 2010. Haitians piled bodies along the devastated streets of their capital on Wednesday after a powerful earthquake flattened the president's palace, the cathedral, hospitals, schools, the main prison and whole neighborhoods.


SIN TV shows a young child sitting in the street as people walk past in Port-au-Prince, Wednesday Jan. 13, 2010, after the devastating earthquake that flattened the president's palace, the cathedral, hospitals, schools, the main prison and whole neighborhoods.

A woman lies on the ground as others stand outside a market that collapsed after a powerful earthquake struck Port-au-Prince, Haiti, Tuesday Jan. 12, 2010.


Survivors walk next to a body lying in the rubble along Delmas road in Port-au-Prince, Wednesday, Jan. 13, 2010. A powerful earthquake struck Haiti on Tuesday.


Bodies lie in the rubble along Delmas road the day after an earthquake struck Port-au-Prince, Haiti, Wednesday, Jan. 13, 2010. A 7.0-magnitude earthquake, the largest ever recorded in the area, rocked Haiti on Tuesday.

Injured people are carried away in a truck after an earthquake in Delmas, Haiti, Wednesday, Jan. 13, 2010. A 7.0-magnitude earthquake, the largest ever recorded in the area, rocked Haiti on Tuesday.

An injured person is seen after an earthquake hit Port-au-Prince, Haiti, Tuesday, Jan. 12, 2010. A 7.0-magnitude earthquake, the largest ever recorded in the area, rocked Haiti on Tuesday.
Injured people sit along Delmas road the day after an earthquake struck Port-au-Prince, Haiti, Wednesday, Jan. 13, 2010. A 7.0-magnitude earthquake hit Haiti on Tuesday.
PORT-AU-PRINCE, Haiti January 13, 2010, 06:42 pm ET
The tiny bodies of children lay in piles next to the ruins of their collapsed school. People with faces covered by white dust and the blood of open wounds roamed the streets. Frantic doctors wrapped heads and stitched up sliced limbs in a hotel parking lot.
The poorest country in the Western Hemisphere, still struggling to recover from the relentless strikes of four catastrophic storms in 2008, was a picture of heartbreaking devastation Wednesday after a magnitude-7 earthquake.
Tuesday's quake left a landscape of collapsed buildings — hospitals, schools, churches, ramshackle homes, even the gleaming national palace — the rubble sending up a white cloud that shrouded the entire capital.
On Wednesday, ambulances weaved in and out of crowds, swerving to miss the bodies lying in street and the men on foot who lugged stretchers bearing some of the injured.
Shocked survivors wandered about in a daze, some wailing the names of loved ones, praying or calling for help. Others with injuries fast growing into infections sat by the roadside, waiting for doctors who were not sure to come.
Search-and-rescue helicopters buzzed over the bodies of partially clothed victims who lay face-down in mounds of rubble and twisted steel.
Everywhere, there was panic, urgency, pleas for help.
"Thousands of people poured out into the streets, crying, carrying bloody bodies, looking for anyone who could help them," Bob Poff, divisional director of disaster services in Haiti for the Salvation Army, said in a posting on the agency's Web site.
Poff wrote that he was driving down the mountain from Petionville, a hillside city bordering the capital, when the earthquake struck.
"Our truck was being tossed to and fro like a toy, and when it stopped, I looked out the windows to see buildings 'pancaking' down," he wrote.
Poff said he and others piled bodies into the back of his truck and took them down the hill, hoping to get them medical attention.
There was no reliable count, but officials feared thousands, maybe tens of thousands, had died in the quake. Some Haitian leaders suggested the figure could be higher than 100,000. In the chaos, doctors rushed to tend to the countless injured.
The parking lot of Port-au-Prince's Hotel Villa Creole became a triage center. Under tents fashioned from bloody sheets, dozens lay moaning from the pain of cuts in their heads, broken bones and crushed ribs.
"I can't take it any more. My back hurts too much," said Alex Georges, 28, who had lain on the parking lot's sloping blacktop for more than a day waiting for help. Just a few feet away lay the dead body of another man who appeared to be about his age.
When the quake struck just before 5 p.m. Tuesday, Georges he was in a meeting with about 30 other students at a school in the neighborhood of Morne Hercule. The roof fell in, he said, killing 11 of his classmates instantly and critically injuring him and others.
Several thousand Haitian police and international peacekeepers poured into the streets Wednesday to clear debris, direct traffic and maintain security. But there was only so much they could do: Looters prowled through shops, then blended into crowds of desperate refugees lugging salvaged possessions. The main prison in the capital fell, and there were reports of escaped inmates, U.N. humanitarian spokeswoman Elisabeth Byrs said in Geneva.
Haitians who could still walk were streaming out of the capital by the hundreds, many of them balancing suitcases and other belongings on their heads as they headed down one of the capital's main streets. Police shouted orders to keep traffic moving at congested intersections as ambulances and United Nations trucks raced toward downtown Port-au-Prince.
In Petionville, people used sledgehammers and their bare hands to excavate a collapsed commercial center, scampering across the rubble as they tossed aside mattresses and office supplies. More than a dozen cars and a U.N. truck were buried underneath.
Up the hill, about 200 victims, including many small children, huddled together in a theater parking lot and rigged tarps out of bed sheets to protect themselves from the scorching sun.
"The immediate need is to rescue people trapped in the rubble, then to get people food and water," Sophie Perez, Haiti director of the U.S.-based humanitarian organization CARE, told her colleagues in an e-mail.
"Everything is urgent."

Read More...

சூடுபிடிக்கிற தேர்தலும், சூத்திரதாரிகளின் கூத்துக்களும்....


சிவாஜிலிங்கம் எம்பி அவர்களின் அவர்களின் முண்டுகொடுப்பும்,மகிந்தவின் மகுடி ஊதலும்.......
யாழ்ப்பாணத்தில் கோலாகலம்!!

சூடுபிடிக்கிற தேர்தலும், சூத்திரதாரிகளின் கூத்துக்களும்....




மரணவீட்டைச் தங்களின் வாக்குச்சாவடியாக்கியிருக்கிற இலங்கை இந்‍‍திய அரசியல் அகாய சூரர்கள்!!!

தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழகத்தின் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறனின் பிரதிநிதிகளான வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், பிரபு ஆகியோர் வல்வெட்டியில் வாய்வீச்சு

ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ அவர்கள், "பிரபாகரனின் தாயாரை இந்தியாவுக்கு அனுப்ப இலங்கை அரசு அனுமதி கொடுக்கவேண்டும் என்றும்,அனுப்பினால் அவரை தனது வீட்டில் வைத்துப் பராமரிப்பேன்" அறைகூவல்
இப்படிக் குழம்பிப்போய்க் கிடக்கிறது யாழ்ந‍கர். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கத் துடிக்கிறார்கள். அரசியல் பஞ்சைகள்.


Read More...

புனித பீட்டர் தேவாலயத்தில் பெரும் பரபரப்பு


புனித பீட்டர் தேவாலயத்தில் பெரும் பரபரப்பு

போப்பாண்டவர் பெனடிக்ட் நிலை குலைந்து கீழே விழுந்தார். போப்பாண்டவரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த மதகுருக்களும் கீழே விழுந்தனர். கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் புனித பீட்டர் தேவாலயத்திற்குள் பரபரப்பு எற்பட்டது.

பாதுகாவலர்கள் ஓடி வந்து அந்த பெண்ணை பிடித்துச் சென்றனர். கீழே விழுந்து கிடந்த போப்பாண்டவரை தூக்கி விட்டனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.


Read More...

"உயிர்காப்போம்" நத்தார் கலையிரவு


நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவில் நடத்திய "உயிர்காப்போம்" நத்தார் கலையிரவு

Tuesday, 29 December 2009 17:35 ஈழநேசன் ரொறன்ரோ நிருபர் .



நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவில் நடத்திய "உயிர்காப்போம்" நத்தார் நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டார்கள். வவுனியாவில் இருந்து நெடுந்தீவுக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவியளிக்கும் பொருட்டும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. மக்கள் அன்பளிப்பின் மூலம் நெடுந்தீவு மக்கள் நலன்கருதி பல செயல்திட்டங்களை நிறைவேற்றும் ஒன்றியத்தின் இந்தக் கலையிரவு, பல நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக அமைந்தது.

மங்கள விளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்ட இவ்விழாவில், தமிழ்த்தாய்வாழ்த்து, கனடியத் தேசிய கீதம், அகவணக்கம் எனும் நிகழ்வுகள் முதலில் நடைபெற்றன. அதன்பின்னர், வரவேற்பு நடனம், பரதமும் தற்கால நடன அமைப்புகளும் சேர்ந்த நிகழ்வுகள், வன்னி மண்ணில் புதுக்கலையாக பரிணமித்த சிலம்பாட்டம், இங்கும் பல சிறுவர், சிறுமி, இளைஞர் யுவதிகளால் பயிலப்பட்டு வியக்க வைக்கும் விதத்தில் அரங்கேறிய போது பார்வையாளர்களைப் பிரமிக்க வைத்தது.

கவிஞர் மா.சித்திவிநாயகம் தலைமையில் "நெஞ்சம் மறக்குமா" என்ற கவியரங்குமாக களைகட்டிய நிகழ்வில், கவிஞர்கள், சித்திவிநாயகம், ஆனந்தன், துரை, மோகன், பரா, தீ.வே.இராசலிங்கம் அனைவரும் தமது கவிதைகளில் வாழ்ந்த பூமியின் நினைவுகளை எடுத்து வந்தார்கள்.

சிறந்த தம்பதியருக்கான போட்டியும் பார்வையாளர்களைக் கவர்ந்தது. ஒன்றியத்தை வளர்த்த வணிகப் பெருந்தகைகள் கௌரவிக்கப்பட்டார்கள். ஒன்றியச் செயலாளரின் நன்றி உரையோடு விழா நிறைவடைந்தது.
படங்கள்: ஈழநேசன் ரொரான்ரோ செய்தியாளர்

Read More...

வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான மீள்வாக்கெடுப்பு!கொட்டைப் பாக்கு அளவுக்குக் கூட பெறுமதி அற்றது.


வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான மீ்ள் வாக்கெடுப்பு: ஒரு வரலாற்று அவமானம்
[ வெள்ளிக்கிழமை, 18 டிசெம்பர் 2009, 07:43 GMT ]நன்றி புதினப்பார்வை ]

இலங்கைத் தமிழ்ச் சமூகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது குழப்பத்தில் சிக்கித் தவிக்கின்றது.

இந்தக் குழப்பத்தின் உச்சமாக இப்போது தேர்தல்கள் விளங்குகின்றன.

சிறிலங்காவுக்கான அரச அதிபர் தேர்தலில் தமிழர்கள் என்ன செய்வது என்ற சிக்கலை இப்போதைக்கு ஒர் ஓரத்தில் வைத்துவிடுவோம்.

இலங்கைத் தீவி்ற்கு வெளியே - நாடு நாடாக - இப்போது 'வட்டுக்கோட்டைத் தீ்ர்மானம்' மீதான மீள் வாக்குப் பதிவு ஆரவாரத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' என்பது - தமிழ் மக்களின் தேசியத் தன்மையையும், தாயகக் கோட்பாட்டினையும், தன்னாட்சி உரிமையையும் அங்கீகரித்து - ஏற்றுக்கொண்டு - தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைவர்கள் தமக்குள் எடுத்த ஒரு தீ்ர்மானம்.

1976 இல் அரசியல் தலைவர்களால் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் - அதற்கு முன்னைய 28 ஆண்டு கால சிங்கள அடக்கு முறையின் விளைவாக - தமது அரசியல் அவா என்ன என்பதைத் தமிழர்கள் தமக்குள் தீர்மானித்த ஒரு வரலாற்று நிகழ்வு.

அந்தத் தீர்மானத்தின் அடிப்படைகளான - தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகளின் ஒட்டுமொத்தமான வடிவமாகவே 'தமிழீழம்' என்ற கருத்துரு பிறப்பெடுத்தது.

தமது அரசியல் தலைவர்களால் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தினைத் தாமும் அங்கீகரிப்பதாக 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்களித்த தமிழ் மக்கள் - அந்தத் தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒர் ஆணையை அந்தத் தேர்தலில் வழங்கியிருந்தனர்.

அந்த ஆணை தான் 'தமிழீழம்' நோக்கிய போராட்டம்.

அந்த வரலாற்று ஆணை - அகவயப்பட்டதாக - இயல்பானதாக கடந்த 30 வருடங்களாக எமது இனத்தின் அரசியலுக்குள் ஊறிப்போய் உள்ளது.

கடந்த 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டம், நாம் சந்தித்த அழிவுகள், செய்த தியாகங்கள், கொடுத்த விலைகள், இழந்து போன 100,000-ற்கும் மேற்பட்ட உயிர்கள் - எல்லாமே - 30 ஆண்டுகளுக்கு முன்னைய அந்த 'மக்கள் ஆணை'க்கு உரமூட்டின.

இவ்வளவு ஆழிவுக்கும் பின்பு - 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீது மீள்வாக்குப் பதிவு செய்வது என்பது - அவ்வளவு தியாகங்களையும் அவமதிப்பது போன்றது; 30 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் தந்துவிட்ட அந்த அரசியல் ஆணையைச் சிறுமைப்படுத்துவது போன்றது.

அவ்வளவு தியாகங்களுக்கும் அடிப்படையான அந்த ஆணையை மறு-கேள்விக்கு உள்ளாக்குவது என்பது, அவ்வளவு தியாகங்களையுமே கேள்விக்கு உள்ளாக்குவது போன்றது.

அதிலும் - 99 வீதம் பேர் மட்டுமே "ஆம்" என வாக்களித்தார்கள் எனச் சொல்லுவது அவ்வளவு தியாகங்களையும் இழிவுபடுத்துவது போன்றது.

'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீது இப்போது மீள்வாக்குப் பதிவு செய்வது என்பது, "தமிமீழம்" என்பது இவ்வளவு காலமும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கோரிக்கையாக மட்டுமே இருந்தது என்று இந்த உலகம் சொல்லுவதை தமிழர்களாகிய நாமும் ஏற்றுக்கொள்ளுவது போன்றது.

'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீது இப்போது மீள்வாக்குப் பதிவு செய்வது என்பது - அந்தத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்ட 'தமிழீழம்' என்ற இலட்சியத்திற்காகப் போராடிய - விடுதலைப் புலிகளை எமது ஏக பிரதிநிதிகள் என்று கூறி உலக வீதிகளில் இறங்கி நாம் நடத்திய போராட்டங்கள் எல்லாவற்றையும் நாமே கொச்சைப்படுத்துவது போன்றது.

2009 மே மாதத்திற்கு முன்னால் இந்த மீள்வாக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால் அது வேறு கதை:

விடுதலைப் புலிகள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தின் இலக்கான 'தமிழீழம்' எனப்படுவது தான் தமிழ் மக்களின் அரசியல் அவாவும் கூட என்பதை இந்த உலகிற்கு வலியுறுத்த அது உதவியிருக்கலாம்.

அத்தோடு - விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்; 'தமிழீழம்' எனப்படுவது ஒர் அரசியலற்ற கோட்பாடு அல்ல; அது ஆயுத ஆளுமைக்கு முன்னானது போன்றவற்றை இந்த உலகிற்கு நிரூபிப்பதற்கும் துணை புரிந்திருக்கலாம்.

அந்த வகையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் கூட அழிவிலிருந்து காப்பாற்றி - தமிழர்களுக்கான தலைமையையும் தக்கவைத்துக்கொள்ள அது உதவியிருக்கலாம்.

ஆனால் - இப்போது கதை வேறு; ஆயுத ஆளுமை முடிவுக்கு வந்துவிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவோடு - தமிழர்களின் அரசியல் கோரிக்கை மீது படிந்திருந்த அவர்கள் கூறும் 'பயங்கரவாதச் சாயமும்' கரைய ஆரம்பித்துவிட்டது.

ஆதலால் - 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான மீள்வாக்கெடுப்பு என்பது இப்போது அவசியமற்றது; பயனற்றது.

'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' என்பது தமிழ் தேசிய இனம் தனது ஆன்மாவில் வரித்துக்கொண்டுள்ள ஒரு வாழ்வு நெறி; அது எப்போதுமே உயிர்ப்புடன் இருக்கின்றது. அதற்கு மீள உயிர் அளிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை.

இந்த வாக்கெடுப்பு என்பது உயிர்கள் காற்றைச் சுவாசிக்கின்றனவா இல்லையா என வாக்கெடுப்பு நடாத்துவது போன்றது.

இன்னொரு பக்கத்தில் 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான இந்த மீ்ள் வாக்கெடுப்பை - நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சியுடன் சிலர் குழப்பப் பார்க்கின்றார்கள்.

'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான மீள் வாக்கெடுப்பு எனப்படுவது 'நாடு கடந்த தமிழீழ அரசு' அமைக்கும் முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கும் என்றும் கற்பிதம் செய்யப்படுகின்றது.

ஆனால் - உண்மையில், சில தனிப்பட்ட ஆட்கள் இந்த இரண்டு முயற்சிகளிலும் தொடர்புபட்டுள்ளார்கள் என்பதைத் தவிர - நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கும் முயற்சிக்கும் 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான மீள்வாக்குப் பதிவுக்கும் கோட்பாட்டு ரீதியான எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

நாடு கடந்த தமிழீழ அரசு எனப்படுவது அனைத்துலக சமூகத்ததின் அங்கீகாரத்தைப் பெறும் நோக்கத்தைக் கொண்ட ஒரு முயற்சி.

சிறிலங்கா என்ற நாட்டை இரண்டாகப் பிரிப்பது என்பதோ, அல்லது இலங்கைத் தீவில் இன்னொரு நாட்டை உருவாக்குவது என்பதோ நாடு கடந்த அரசு உருவாக்கும் செயற்குழுவின் நோக்கம் அல்ல.

அந்த நோக்கங்களோடு இந்த முயற்சியை எடுத்தால் உலக அங்கீகாரத்தைப் பெறவும் முடியாது.

இது வேறு; அது வேறு.

'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' இலங்கைத் தீவிற்கு உள்ளே வாழும் தமி்ழ் தேசிய இனம் தொடர்பானது; நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எனப்படுவது ஒரு "நாடு கடந்த" ( இலங்கைத் தீவு கடந்த) அரசாங்கம் தொடர்பிலானது. இது வேறு; அது வேறு.

உண்மையில் - 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்'தை நாடு கடந்த தமிழீழ அரசுடன் தொடர்புபடுத்துவது - உபத்திரவமாக அமையுமே அல்லாமல் உதவிகள் புரியாது.

இன்னொரு பக்கத்தில் - 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான இந்த மீள் வாக்கெடுப்பு எமது போராட்டத்திற்கு அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுத்தரப் போகின்றது என்ற ஒரு பிரமையும் பரவவிடப்படுகின்றது.

உண்மை என்னவென்றால் - இந்த உலகத்தில் எவருக்குமே - அது அமெரிக்காவாய் இருந்தால் என்ன, ஜரோப்பிய ஒன்றியமாய் இருந்தால் என்ன, இந்தியாவாய் இருந்தால் என்ன - எவருக்குமே இந்த வாக்கெடுப்பில் எந்த அக்கறையும் இல்லை.

அவர்கள் இதனை ஒரு பொருட்டாக மதிக்கப்போவதும் இல்லை.

இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் என்ன விதமாக வந்தாலும் - இந்தப் பெரிய வல்லரசுகளின் இலங்கைத் தீவு மீதான கொள்கையில் அது எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதும் இல்லை.

ஒட்டுமொத்தத்தில் 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' மீதான மீள்வாக்கெடுப்பு என்பது -

1) கொட்டைப் பாக்கு அளவுக்குக் கூட பெறுமதி அற்றது.
2) எமது முகத்தில் நாமே பூசும் கரி.
3) தமிழினம் தனக்குத் தானே இழைக்கும் ஒரு வரலாற்று அவமானம்.


Read More...

பாதங்கழுவுதலும் விருந்துபசாரமும்.......




பாதங்கழுவுதலும் விருந்துபசாரமும்.......


சீடர்கள் சூழச் சிரித்தபடியே
விருந்து நாயகனின்,
பாதம் கழுவிப் பணிந்து தொழுவதாய்
பாசாங்கு செய்து
விழுந்து கிடக்குமென்
யூதாஸ் கரியோத்து...

எழுந்திரு !!!

காட்டிக்கொடுக்கும்
காரியம் முடிந்துமேன்
காலில் கிடக்கிறாய்?? எழுக நீ

எழுந்துன் முப்பது வெள்ளி
முடிச்சினைப் பெறுக!!

நீ காட்டிக் கொடுத்த
கடவுளாம் அவனக் கல்லால் அடித்தோ
கத்தியால் சிதைத்தோ, வாளால் அறுத்தோ
கொல்வதாய் இல்லையாம்...
நல்ல இனத்துத் தேக்கின் சிலுவையில்
அறைந்து கொல்வதாய் அரசனின் செய்தி

அதுவுமுனக்கு நன்மையாய்ப் போனது
எழுந்திரு யூதாஸ்

சுரணையே இல்லா மனிதர்கள் எங்கும்
எதற்கும் தலையினை ஆட்டுவர் என்பதால்
சிலுவையில் அவனை அறைந்து கொன்றபின்
இரத்தம் சிந்த இரும்பாணிகளுடன்
இறைவன் இருத்தல் தகாதெனச் சொல்லி
இறைவனை இறக்கித் தெருவினில் போட்டுச்
சில்லறைக்காக சிலுவையை விற்குக!!

தேக்கு மரத்துச் சிலுவை என்பதால்
நல்ல விலை பெறும் .

இன்றைய நாளில்
விண்ணக வேந்தனை வெற்றுடலாக்கினர்
வீதியில் போட்டுச் சிலுவையை விற்றனர்.
காணுகின்ற கண்களைத் தோண்டினர்.
தேவன் தெரு வீதியில் கிடந்தான்.
மனிதர்கள் அவனை மிதித்து
ஆளுக்கொரு திசையில்
விரைந்து மறைந்தனர்.

- ரமோனா




Read More...

இலங்கையில் தமிழர்களாக இருப்பது பாவத்திற்குரிய விடயமா?


இலங்கையில் தமிழர்களாக இருப்பது பாவத்திற்குரிய விடயமா?

sunantha


பம்பலப்பிட்டி கடலில் சிறிலங்கா காவல்துறையினரால் அடித்து மூழ்கடிக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட பாலவர்மன் சிவகுமார் படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதமாகியுள்ளது. அவரது படுகொலை தொடர்பாக சிறிலங்கா சுதந்திர ஊடகவியலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுனந்த தேசப்பிரிய எழுதிய பத்தி வருமாறு:-

பாலவர்ணம் சிவகுமார் தற்போது எம்மிடையே இல்லை. இனரீதியாக முரண்பாடுகளைக் கொண்டுள்ள எமது சமுகத்தில் பலர் இவர் மற்றுமொரு தமிழர் என்றே கணக்கில் கொள்வர். எனினும், அவரின் குடும்ப உறுப்பினர்களும் தமிழ் சமூகமும், அவர் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு தமிழ் இனத்தவர் எனக் கொள்வர் என்பதில் சந்தேகமில்லை.

பாலவர்ணம் சிவகுமார் கொழும்பு இரத்மலான பிரதேசத்தில் வாழ்ந்துவந்தார். ஊவாவில் பிறந்த அவரை பாதுகாப்புத் தரப்பினர் ஒருபோதும் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டவர் என சந்தேகிக்கவில்லை. கொழும்பில் வாழும் தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் யுத்தம் நடைபெற்ற போது அடிக்கடி சோதனைகளைச் சந்தித்த போதிலும், அவர் எவ்வித இடையூறுகளும் இன்றி வாழ்ந்துவந்தார்.பாலவர்ணம் சிவகுமார் மனநோயினால் பாதிக்கப்பட்டவர், இதனால் அவர் அடிக்கடி, மனநோய் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற நேர்ந்தது.

2006ம் ஆண்டு ஏற்பட்ட காதல் முறிவே இந்த மனநோய்க்கான காரணம் என அவரின் சகோதரர் தெரிவித்திருந்தார். அன்பு முறியும் அல்லது அன்பை இழக்க நேரிடும் நம்மில் பெரும்பாலானோர் இவ்வாறான மனநிலைப் பாதிப்பை எதிர்நோக்கியிருப்போம். இவ்வாறான மனநிலையிலிருந்து முழுமையாக சுகமடையக் கூடிய சூழல் பாலவர்ணம் சிவகுமாருக்கு இல்லாமையானது மற்றுமொரு காரணமாகும்.

கடந்த இரண்டு வருட காலங்களுக்குள் இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய சமூக பாதிப்புக்கள் காரணமாக இருக்கக் கூடும். அவர் சுகமடைந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுவந்தார். கடந்த ஒக்டோபர் 26ம் திகதி அவரது சுகவீனம் மீண்டும் அதிகரித்ததுடன், குழப்பம் விளைவிக்கக் கூடிய அறிகுறிகள் தென்பட ஆரம்பித்ததன. 27ம் திகதி தனது அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார். இதன்பின்னர் கடந்த 28ம் திகதி அவரது சடலம் கொழும்பு கொள்ளுப்பிட்டி கடற்கரையோரத்தில் ஒதுக்கியிருந்தபோதே நாம் அவரை கண்டோம் என அவரது சகோதரர் தெரிவித்தார்.

காவல்துறை எவ்வாறு படுகொலை செய்தது?

அவர் கொலை செய்யப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பிய ரி.என்.எல், சிரச தொலைக்காட்சிகளுக்கு நன்றி பாராட்டும் வகையில் அந்தக் காட்சியை முழு நாடும் கண்டது. இரண்டு கைகளையும் கூப்பி வணங்கி உயிர்ப் பிச்சைக் கேட்டபோதும், அவர் பொல்லுகளால் தாக்கப்பட்டு பம்பலப்பிட்டி கடலில் மூழ்கடித்து கொலை செய்தவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் காவல்துறையினரே.

'டெய்லி மிரர்' வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், பாலவர்ணம் சிவகுமார் அன்றைய தினம் அதிகாலையிலிருந்தே பம்பலப்பிட்டி தொடரூந்து வீதிக்கருகிலிருந்து வாகனங்கள் மீது கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டிருந்துள்ளார். இந்தத் தாக்குதல் காரணமாக தொடரூந்து ஓட்டுநர் ஒருவரும் படைச் சிப்பாய் ஒருவரும் காயமடைந்துள்ளனர். அப்போது இவர் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துள்ளதாக அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது. பல மணித்தியாலங்களுக்குப் பின்னரே அவரது செயற்பாடுகளைத் தடுப்பதற்காக காவல்துறையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

அதுவரை அவரின் இந்த செயற்பாடுகளை பயங்கரமான செயற்பாடுகள் என எவரும் கருதவில்லை. அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்லது தமிழ் இளைஞர் என அருகிலுள்ள மக்கள் அறிந்துகொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காவல்துறையினர் சென்றதும் அவர் கடலில் குதித்தார். அதன் பின்னர் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கடலில் குதித்தனர். கூடியிருந்த மக்கள் நீண்ட இரண்டு பொல்லுகளை காவல்துறையினரிடம் கொடுத்தனர். துப்பாக்கியினால் சுடுமாறும் சத்தமிட்டனர். (பெரஹரவில் மதம் பிடிக்கும் யானையை சுட்டுக் கொல்லுமாறு மக்கள் கூச்சலிடுவதில்லை.)

பாலவர்ணம் சிவகுமார் கைகூப்பி வணங்கி தன்னைத் தாக்க வேண்டாம் எனக் கூறும்போது மக்கள் கொடுத்த பொல்லுகளினால் காவல்துறையினர் தொடர்ந்தும் தாக்கினர். கூடியிருந்த மக்கள் சண்டைக் காட்சி அடங்கிய சினிமாவைப் பார்ப்பது போன்று கண்சிமிட்டாது இந்த வீர நிகழ்வைக் கண்டுகளித்தனர். பாலவர்ணம் சிவகுமார் நீரில் மூழ்கி இறுதி மூச்சை விட்ட பின்னர் கருணையுள்ளம் கொண்ட கடல் அலைகள் குடும்பத்தினருக்கு இறுதிக் கிரியைகளை நடத்துவதற்காக பாலவர்ணம் என்ற தமிழரின் சடலத்தை மறுநாள் கரையொதுக்கியது.

எனக்கு நடந்த அனுபவம்

26 வயதான பாலவர்ணம் சிவகுமார் 1983 அல்லது 1984 ஆண்டு பிறந்திருப்பார். அவர் 1983ம் ஆண்டு பிறந்திருப்பாரானால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைக் கண்டிருக்கமாட்டார். காரணம் தமிழ் மக்கள் கொரூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டது 1983ம் ஆண்டாகும். கறுப்பு வெள்ளியென பிற்காலத்தில் கூறப்பட்ட 1983ம் ஆண்டு ஜூலை 29ம் திகதி நாம் இருவர் கால் நடையாக கோட்டையிலிருந்து பொரல்லை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். கொழும்பிற்கு புலிகள் வந்திருப்பதாக கதைகள் பரவியதை அடுத்து ஏற்பட்ட அச்சத்தில் வாகனங்கள் ஒன்றேனும் கிடைக்காத நிலையிலேயே நாங்கள் நடந்துசென்று கொண்டிருந்தோம். இந்தக் கதையின் பாதகமான முடிவாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொடூரமான முறையில் வெட்டிக்கொல்லப்பட்டனர். புஞ்சி பொரல்லைப் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டதுடன் சிலர் கைகட்டி, சிலர் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது அமைதியாக இருந்தனர்.

பொல்லுகளினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிவகுமாரைப் பார்த்தபோது அந்த புஞ்சி பொரல்லைச் சந்தியில் இடம்பெற்ற சம்பவமே எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. கடந்த 28ம் திகதி பம்பலப்பிட்டி கடலோரத்தில் இடம்பெற்ற இந்த துரதிஷ்டவசமான தலைவிதி, பாலவர்ணம் சிவகுமார் சிங்களவராக இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமா? அப்படி இருந்திருக்கவும் கூடும் அல்லது அவ்வாறு இல்லாதிருந்திருக்கவும் கூடும்.

அங்குலானவில் நடந்தது என்ன?

கடந்த ஓகஸ்ட் 12ம் திகதி இரவில் இரத்மலான அங்குலான காவல்துறையினரால் தினேஷ் தரங்க, தனுஷ்க உதய என்ற சிங்கள இளைஞர்கள் இருவர் சித்திரவதை செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி, இதற்கு ஈடான மனித படுகொலைகளாகும். தமக்கு இடையூறுகளை ஏற்படுத்தியதாக கரையோரப் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்தே அந்த இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கரையோரத்தில் பந்து விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களின் பந்து இந்தப் பெண்ணின் வீட்டிற்குள் விழுந்ததே இந்தச் சிக்கலுக்கான அடிப்படையெனக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணின் முறைப்பாட்டை அடுத்து இளைஞர்களைத் தேடுவதற்காக சாதாரண உடையில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற காவல்துறை அதிகாரிகள் இந்த இளைஞர்களைக் கைதுசெய்திருந்தனர்.

இரவு முழுவதும் சித்திரவதை செய்யப்பட்டு அவர்கள் கொலை செய்யப்பட்டனர். இதன்பின்னர், ஆத்திரமடைந்த அங்குலான பிரதேச மக்கள் காவல்துறை நிலையத்தைச் சுற்றிவளைத்துத் தாக்கினர். இந்தக் காட்சிகள் ஒளிப்படங்களாக பிரசாரப்படுத்தப்பட்டது.

பாரியளவில் மரணச் சடங்குகள் இடம்பெற்றன. பத்திரிகைகள் ஆசிரியர் தலையங்கங்களை எழுதின. காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டதுடன் முழு காவல்துறை அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேற்குறிப்பிட்ட பெண் மற்றுமொரு குற்றச்செயலுக்காக கைதுசெய்யப்பட்டார்.

இந்த இளைஞர்களின் மரணத்தில் கவலையடைந்த அதிமேதகு ஜனாதிபதி அந்த இளைஞர்களின் பெற்றோர்களைத் தேற்றுவதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து அதனை முழு நாட்டிற்கும் வெளிக்காட்டினார். கொல்லப்பட்ட பிள்ளைகளுக்காக பெற்றோருக்குத் தலா 5 லட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்கினார்.

எனினும், பாலவர்ணம் சிவகுமார் தொடர்பாக எவ்வித கருணையும் காட்டப்படவில்லை. ஆத்திரமும் ஏற்படவில்லை. பசில் ராஜபக்ச கொடுத்த 2 லட்சம் ரூபாவுடன் அவரது மரணம் அமைதியான மரணமாகியது. இலங்கையில் தமிழர்களாக இருப்பது பாவத்திற்குரிய விடயமா?

Read More...

Stop The Vanni Genocide

About Me

My Photo
ஒரு அகதியின் நாட்குறிப்பு !!!
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.
View my complete profile

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter