Monday, June 30, 2008

தசாவதாரம்

நாயைக் கண்டால் கல்லைக் காணோம் !

கல்லைக்கண்டால் நாயைக் காணோம் ! நாமறிந்த பழமொழி தான் இது।

ஆனால் இதன் கருத்தைத் தான் பலரும் பலவிதமாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

கல்லில் செதுக்கியிருக்கிற நாயின் உருவம் கல்லென்று நீங்கள் பார்த்தால் வெறும் கல்லாகவும், நாய் என்று நீங்கள் பார்த்தால் நாயாகவும் தெரிவது போல்..............

Kallai mattum parthal kadavul தெரியாது
screenai mattum parthal kathayum puriyathu” என்கின்றார்கள் கமலின் தீவிரபக்தர்கள்..


கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது
எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்ஐந்தில் எட்டு எண் கழியாதுஅஷ்ட அட்சரம் ஏற்கும் நெஞ்சுபஞ்ச அட்சரம் பார்க்காது
ஊன கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான்ஞானக்கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம்தான்
இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாதுதொல்லை தந்தபோதும் எங்கள் தில்லை மாறாது
வீரசைவர்கள் முன்னால் எங்கள் வீரவைணவம் தோற்காதுமன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கில் சூரியன் உதிக்காது
ராஜலக்ஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன்தான்ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜர்தான்ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்
நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாதுநெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது
வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்வெண்ணிலாவை அது அணைத்திடுமா
கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா
சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாதுதெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது

தசாவதாரம்: தடை கோரி வழக்கு
பிரபல தமிழ் நடிகர் கமலஹாசன் நடித்து வெளிவந்த ‘தசாவதாரம்’ என்கிற தமிழ் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடைவிதிக்கும்படி,செந்திகுமார் என்பவரும், மற்றும் உலகளாவிய ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ரக்ஷண சங்கம் என்கிற அமைப்பை சேர்ந்த கோவிந்த ராமானுஜதாசா அவர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அத்தகு தடைகள்

தகர்த்து வந்த தசாவதாரம் உண்மையில் நல்ல செய்திகளைக் கொடுத்ததா? ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா?
கதை 12ம் நூற்றாண்டில் ஆரம்பித்துத்
தற்காலத்தில் முடிகிறது. 12 நூற்றாண்டுகளுக்கு முன் கடலில் தள்ளப்பட்டட ரங்கநாதரின்சிலையும்அப்போது பிரிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கமலும்
அசினும் (நம்பியும்,மனைவியும்)சுனாமியால் தற்காலத்தில் கரையேறிய அதே ரங்கநாதருக்குப் பக்கத்தில் ஒன்று சேர்கின்றார்கள்। இத்தகு வெற்றுப் புனைவைச் சுற்றியே படம் பலமாகப் பின்னப்பட்டிருக்கிறது। படத்தில் பத்துப்
பாத்திரம் ஏற்றுக் கமல் நடித்திருகின்றார் என்பதை விடவும் பத்து வேடங்களுக்காகவும் சிரத்தையுடன் உழைத்திருக்கின்றார் என்பது சாலப் பொருத்தம்।வந்து போன குரங்கு ,யானை எல்லாமே கமல் மாமா தானோ
என்று படம் பார்த்தபின் கேட்ட குழந்தகள் ஏராளம்।
மதுரையில் எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றியதாகச் சொல்கிறது புராணம்। மதுரை அருகே ஒரு ஊரைக்காட்டி இங்குதான் எண்ணாயிரம் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டார்கள் என்று சொல்வதுண்டு। அந்த சாம்பலும் எலும்புகளும் அங்கே கிடப்பதைப் பார்த்துவிட்டு வந்ததாக்க கூட பலர் எழுதியிருக்கிறார்கள். ஆயிரம் வருடம் கழித்து! கடந்த முப்பதாண்டுகளில் படிப்படியாக தமிழ்நாட்டுச் சமணர்கள் கொன்றே அழிக்கப்பட்டதாகவும், சமண ஆலயங்கள் இடித்தே இல்லாமலாக்கப்பட்டதாகவும் எந்த விவாதமும் இல்லாமல், எந்த ஆதாரமும் அளிக்கப்படாமல் ‘நிறுவ’ப்பட்டுவிட்டிருக்கிறது. ‘தீராநதி’ அல்லது ‘புதியபார்வை’ யை படித்தால் நாலைந்து இதழ்களுக்கு ஒருமுறை ஒருவர் இந்த ‘வரலாற்று உண்மை’யை சொல்வதைக் காணலாம். இதை மறுப்பவர் இந்துவெறியர் என்பதே அவர்களின் ஒரே வாத உத்தியாக இருக்கும். என்கின்றார் ஜெயமோகன்.புராணம் பொய்யாக இருக்காது என்பதே என் எண்ணம். அது ஒருவகை வரலாறு. கண்டிப்பாக சைவ சமண மதப்போர் உக்கிரமாகவே நிகழ்ந்திருக்கும். சமணர்கள் கழுவில் ஏறியிருப்பார்கள். ஆனால் அது பிடித்து கழுவில் ஏற்றி அழித்தொழிக்கும் ஐரோப்பிய அல்லது அரேபிய மதப்போர் அல்ல. அது ஒரு மரபு. மதங்களுக்குள் பொதுவிவாதம் நிகழ்வது என்பது மீண்டும் மீண்டும் நம் மரபில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதவிவாதத்தில் தோற்றவர் கழுவிலேறுவதைப் பற்றியும் நாம் காண்கிறோம். என்கின்ற ஜெயமோகன் தன் பிள்ளைகளோடு இப்படத்தைமகிழ்வோடு பார்த்ததாகப் பதிவு செய்கின்றார்.
வேறொருவர், சில கொலை நடக்கும் காட்சிகள் சிறுவர்களுடன் பார்க்க தகுந்தது என்று நான் நினைக்கவில்லை. ஆகவே சிறுவர்களை அழைத்துச் செல்வதானால் யோசித்துச் செல்லுங்கள். என்று பதிவு செய்கின்றார். சுனாமி இத்தனை ஆயிரம் பேரையும் கொன்றது இவரின் சாமி கரையில் வந்து சேரவா ? நல்லா கதைவுடுராரு।

தசாவாதாரம் தமிழ்ப்பெயரா? என்ற சிலரின் வாதத்திற்கு
ஒன்பது ரூபா "நோட்டு", சிவாஜி எல்லாம் தமிழ் பேருன்னா தசாவதாரமும் தமிழ் பேருதான்:-) என்று பல பதிவுகள்.
எது சரி என நீங்கள் ஒரு தடைவை பார்த்து முடிவு செய்யுங்கள்.

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter