பவள விழாக் காணும் நல்லாசான் !

நகர்ப்புற மாணவனுக்கு ஆசிரியன் தேவையானால் ஒரு வழிகாட்டி என்ற அடிப்படையில் ஏனோதானோ என்ற மதிப்பை மட்டுமே பெறுகின்றான். ஆனால் கிராமப்புற மாணவர்களைப் பொறுத்தவரையில் ஆசிரியனே அவனது நடத்தையின், கற்றலின் நம்பிக்கை நட்சத்திரம்.அவரே அவன் மனதில் பதிந்த முன்மாதிரி. எனவே கிராமப்புற மாணவர்களைத் தேடிச் சென்று கற்பியுங்கள் அவர்களால் தான் நாடு வளமாகும்.எனும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் செயல்வீரர் காமராஜர் சொன்ன வாக்கியத்தை அடிக்கடி குறிப்பிடும் அதிபர் அவர்கள் இந்தக்கூற்றுக்கு முற்று முழுதாகத் தன்னை அர்ப்பணித்தவர். இந்திய,இலங்கைப் பல்கலைக் கழகங்களில் கற்றுத்தேர்ந்த அதிபர் இரா. சின்னத்தம்பி (இராசி) அவர்கள் பெப்ரவரி மாதம் 26 ம் நாள் தன் 75வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார் அன்றைய தினம் அன்னாரின் சேவையை அவரது மாணவர்கள் உலகின் பல்வேறு பிரதேசங்களிலும் நினைவு கூர்ந்தனர், அவ்வடிப்படையில் அவரைக் கொழும்பில் சந்தித்த போதான நேர்காணல்
.மார்ச் மாதம் 1ம் நாள்

No comments:
Post a Comment