Monday, May 18, 2009

பிரபாகரன் இன்னமும் உயிருடன் ...

பிரபாகரன் இன்னமும் உயிருடன்....

பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருப்பதாகப் புலிக்குப் பேச வல்ல அதிகாரிகள் கூறுகின்ற இவ்வேளை அரச மற்றும் சர்வதேச ஊடகங்கள் புலியினது பேரிழப்புப் பற்றி ஊர்ஜிதமான செய்திகளை வெளியிட்டுள்ளதாகச் சொல்கின்றனர்.எது எப்படியோ 60 வருட தமிழரின் கனவும் திட்டமிடப்படாத தன்னாதிகாரச் சக்திகளால் அழித்தொழிக்கப்பட்டு நட்டநடு வீதியில் திசையறியாது கொண்டுவந்து நிறுத்தப் பட்டிருக்கிறது என்பது கண்கூடு.




வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன், இன்று இலங்கை ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும்,. அப்போது, விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் இறந்துவிட்டார் என்றும் உறுதிப்படுத்தியதாக விஷ்ணுபிரகாஷ் தெரிவித்தார்.

''இந்தச் சண்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க, இடம்பெயர்ந்த மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க, அவர்களது வாழ்க்கையில் இயல்பு நிலையைக் கொண்டுவர, இந்திய அரசு, இலங்கை அரசுடனும் மக்களுடனும் இணைந்து செயல்படும்'' என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், அதிகாரப்பரவல் திட்டத்தை இலங்கை அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.



பிரபாகரனின் மரணம் தொடர்பாக இலங்கையின் உள்ளூர் ஊடகங்கள்
சிங்களம் மற்றும் தமிழில் ஒளிபரப்பிய செய்திகள் இவை:






3 comments:

Anonymous said...

செய்திகள் பொய்யானவை என்று பல பதிவுகளில் எழுதிக் கொண்டிருந்தார்கள். பார்க்கப் போனால் பயங்கரவாதம் என்ற பெயரில் பொதுமக்களையும், எந்த பாவமும் அறியாதவர்களையும் கொன்று குவிப்பதை விடுதலைப் புலிகள் செய்ததே இல்லை என்றுதான் தெரிகிறது. வன்முறையும் பயங்கரவாதமும் கண்டிக்கப்பட வேண்டும் என்றால் சிங்கள ராணுவத்தின் இந்திய ராணுவத்தின் பயங்கரவாதத்துக்கு மிகப் பிற்பாடுதான் விடுதலைப்புலிகளின் உயிர்க் கொலைகள் வரும். அவர்களால் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் ஆயுதம் ஏந்திய சிங்கள ராணுவத்தினர், தமக்கு எதிராக செயல்படுவதாக அவர்கள் நினைத்த அரசியல் தலைவர்கள். பொது இடங்களில் குண்டு வைத்து கண்மண் தெரியாமல் கொன்று குவிப்பது போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதாகத் தெரியவில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் அவர்களுக்குக் கிடைத்திருந்த ஆயுத வசதிகளைப் பயன்படுத்தி தென் இலங்கையில் பல பயங்கரவாதச் செயல்களை நிறைவேற்றியிருக்கலாம். தமது விமானத்தில் பறந்து போய் கூட இலங்கை அரசின் விமானப்படைத் தளத்தைத்தான் தாக்கினார்களே தவிர பொதுக் கட்டிடங்களுக்கு சேதம் விளைவிக்க முனையவில்லை. மனித நெறிகளும், மக்களபிமானமும் இது வரை இருந்த எந்த சிங்களத் தலைமையையும் விட புலிகளிடம் அதிகமாகவே இருந்திருக்கிறது.

superlinks said...

vanakkam

Anonymous said...

எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில் புலிகள் போர் நிறுத்தத்திற்கு தயாரானதும், இலங்கை அரசு அவர் களை நம்பவில்லை. காரணம் புலிகளின் கடந்தகால செயல்பாடுகள் அப்படி!


ஆனால், போரி னால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உண வின்றியும், மருந்து களின்றி யும் அவதிப் பட்ட துயரத்தை சர்வதேச சமூகம் வேடிக்கைப் பார்த் தது கொடூரமானது.


இப்போது மே 18 அன்று விடுதலைப் புலிகள் அழிக்கப் பட்டதாகவும், பிரபாகரன், அவர் மகன் சார்லஸ் ஆன்டனி, அரசியல் பிரிவு தலைவர் நடேசன், ரமேஷ் உள்ளிட்டோர் கொல்லப்பட்ட தாகவும் இலங்கை அரசு அறிவித்திருக் கிறது.


போர் முனையில் இவர்கள் கொல்லப் பட்டிருப்பது உலகமெங்கும் வாழும் தமிழர்களை மிகப்பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.


30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஒரு விடுதலைப் போராட்டம் தோல்வி யில் முடிந்தது ஒரு பெரும் சோகமாகும்.


பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு (பி.எல்.ஓ) பிறகு உலகில் கவனத்திற்குரிய போராளிக் குழுவாக எல்.டி.டி.ஈ. அமைப்பு அடையாளம் காணப்பட்டது.


இவர்களின் சிறப்பு அம்சம் தரைப் படையைத் தவிர கடற்படையையும், விமானப் படையையும் உருவாக்கிய தாகும். இது புலிகளின் மீதான மதிப்பீடு களை உயர்த்தியது.


இன்று பிரபாகரன் கொல்லப்பட்டிருக் கலாம். உலகமெங்கும் வாழும் ஈழத் தமிழர்களுக்கு இது ஒரு கறுப்பு வாரமாக இருக்கும். தமிழகத்தில் ஒரு மிகப்பெரும் சோகம் பரவும்.


ஈழத் தமிழர்களின் தமிழ் ஈழ கனவுகள் உடைக்கப்பட்டிருக்கிறது. அவர் களுக்கு பிரபாகரன் ஒரு யாசர் அராஃபத்தாகவும், ஒரு சேகுவேரா ஆகவும் திகழ்ந்தார்.


இனி அவர்களது அரசியல், வாழ் வுரிமை, சமூக நீதி எல்லாம் என்னவாகும் என்று தெரியவில்லை.


பிரபாகரன் மீது நமக்கு மாற்றுக் கருத்து உண்டு. விமர்சனங்கள் உண்டு. புலிகளின் அரசியல் தவறுகள் மீது மாறாத கோபம் உண்டு.


ஆனால், அவர்கள் நடத்தியது ஒரு விடுதலைப் போராட்டம் என்பதில் ஐயமில்லை. ஒரு இன மக்களின் விடுத லைப் போராட்டம் ஏகாதிபத்திய சக்தி களின் கொடூரக் கரங்களால் ஒழிக்கப் பட்டிருப்பது எதிர்பார்க்காத ஒன்று. ஆனால் இது முற்றுப்புள்ளி அல்ல...

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter