ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இலங்கையின் பிரேரணை வெற்றி பெற்றுள்ளமை வெட்கக்கேடான செயல்:

[ வெள்ளிக்கிழமை, 29 மே 2009, ]
இலங்கை முன்வைத்த பிரேரணை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் வெற்றி பெற்றுள்ளமை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை ஆரம்பிக்கக்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட வெட்கக்கேடான, நோக்கமற்ற செயற்பாடு என சர்வதேச சட்ட பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பிரான்சிஸ் பொய்லே தெரிவித்துள்ளார்.
இது, நாசி படையினரின் இனப்படுகொலையை ஏற்றுக் கொண்டமைக்கு ஒப்பான செயல் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இந்த பிரேரணையை ஏற்றுக் கொண்டு வெற்றிப் பெற செய்துள்ளமை, சிறிலங்காவின் இனப்படுகொலையை மறைத்து, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியதுடன், மனிதாபிமானத்துக்கு எதிராக தமிழர்களை கொன்று குவித்த போர்க் குற்றங்களையும் அங்கீகரித்து, சிறிலங்காவிற்கும் மற்றைய சர்வதேச நாடுகளுக்கும் இவ்வாறான இனவெறி செயல்களுக்கு அங்கீகாரம் வழங்கி பச்சைக் கொடி காட்டியதாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகள் உண்மைக்கு புறம்பான போலித்தன்மையை ஆதரித்து, சிறிலங்கா அரசாங்கத்தின் மனிதாபிமானத்துக்கு எதிரான யுத்தத்திற்கும், போர் குற்றங்களுக்கும் ஊக்குவிப்பு வழங்கியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்..
சிறிலங்கா அரசாங்கம், தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் குற்றங்களுக்கு, மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகள் சிலவும் கூட்டிணைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமைகள் சபையின் நாடுகளின் இந்த செயற்பாட்டை கண்டித்துள்ள சர்வதேச சட்ட பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பிரான்சிஸ் பொய்லே வரலாறு அவர்களுக்கான தீர்ப்பினை வழங்கும் என தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள கனடிய தூதரகம் மீது திட்டமிட்டு இலக்குவைத்த தாக்குதல்: கனடிய அரசு கடும் கண்டனம்[ வியாழக்கிழமை, 28 மே 2009, ]
கனடா புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கொழும்பில் உள்ள கனடிய தூதரகம் மீது மேற்கொண்ட தாக்குதலை கனடிய அரசாங்கம் கண்டித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியும், தூதரகத்தின் சுவர்களில் சில வாசகங்களை எழுதியும், பாதுகாப்பு கமராவுக்கு வர்ணம் பூசியும் தமது எதிர்ப்புக்களை வெளிக்காட்டியமை தொடர்பில் கனடா அதிருப்தி தெரிவித்துள்ளது. இது திட்டமிட்ட இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்துள்ள கனடா இந்த செயல் மிகவும் கண்டித்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இலங்கையில் உள்ள கனடிய தூதரகத்தை பாதுகாக்க இலங்கை பொலிஸார் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கனடா சுட்டிக்காட்டியுள்ளதுடன், இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பூரண விசாரணை நடத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
1 comment:
Post a Comment