Wednesday, June 17, 2009

தமிழரை எரிக்கிற நெருப்பில் எண்ணையூற்றத் துடிக்கிற துட்டகைமுனுக்கள்.

தமிழரை எரிக்கிற நெருப்பில் எண்ணையூற்றத் துடிக்கிற துட்டகைமுனுக்கள்.
எந்த நெருப்பில் தமிழர் எரிந்துகிடந்தார்களோ அந்தச் சுடுகாட்டுச் சாம்பலை தம்மீது பூசிக்கொண்டு
தாமே அவர்கள் எனத் தம்பட்டம் எடுத்தபடி வாக்கு வேட்டையில் இறங்குகின்றார்கள் மக்களை ஏமாற்றி
ஏமாற்றியே காரியம் பார்த்த கயவர்கள்.இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்கவுள்ளதாக மத்திய வங்கி உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவரின் கருத்தை ஆதாரமாக வைத்துக் நாக்கைதொங்கவிட்டபடி அலைகின்றாராம் ஆனந்த சங்கரி.
யாழ்ப்பாணத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எனத் தெரிவித்த ஆனந்தசங்கரி
யாழ். மாநகரசபைக்கான தேர்தலில் தாங்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாகஉறுதியாகத் தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈபிஆர்எல்எப் பத்மநாபா அணி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஆகிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுச்சின்னமாகிய குத்துவிளக்கு சின்னத்தில் வவுனியாவில் போட்டியிடுவது என்று முன்னர் தீர்மானித்திருந்தன. எனினும் தற்போது, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களில் தாங்கள் தனித்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப்போவதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியாப் புலி வியாபாரியென வருணிக்கப்படும் திருமாவளவன் இலங்கையில் விரைவில் 5வது ஈழப் போர் தொடங்கும் என்று தெரிவித்தார்.வாய்ச் சவடால்களில் வல்லமையுள்ள இவர்கள் மக்கள் படுகின்ற அல்லல்களை தங்கள் வயிற்றுக்காக்கிக் கொண்டுள்ளவர்கள் என்று தெரிந்திருந்த போதிலும் இன்னமும் இவர்கள் பின்னே சுற்றுகிறது ஏமாந்த தமிழர் கூட்டம்.

3 comments:

Anonymous said...

தமிழரை எரிக்கிற நெருப்பில் எண்ணையூற்றத் துடிக்கிற துட்டகைமுனுக்கள்

பாரதி said...

அண்ணே நான் நல்லதும் சொல்லேலாது
கெட்டதும் சொல்லேலாமப் போயிற்றன் அண்ணே. எல்லாப்பயலுகளும் என்னைப் புலிக்கெதிரான ஆளாய்ப் பார்க்கிறாங்கண்ணே.நிலாப்பாட்டு என்னைப் போலிசில பிடித்துக்கொடுத்திடுவாரோ எண்டு பயமாயிருக்கண்ணே.திருமாவளவன்
தான் நம்ப குருவண்ணே. கூடாம எழுத வேண்டாம்.
பாரதி

Unknown said...

உண்மை ஒருநாள் வெல்லும்.
தமிழரை எரிக்கிற நெருப்பில் எண்ணையூற்றத் துடிக்கிற துட்டகைமுனுக்கள் அப்போ தாங்களும் எரிவார்கள்
ராஜி

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter