Saturday, September 05, 2009

எரிக் சொல்கெய்மின் காலத்திற்கேற்ற ஞானம்!!

எரிக் சொல்கெய்மின் காலத்திற்கேற்ற ஞானம்!


Solheim accepts Channel 4 concocted
The Channel 4 telecast of Sri Lankan soldiers allegedly shooting civilians has now been accepted by the international community as a concocted story to bring disrepute to Sri Lanka, Defence Secretary Gotabhaya Rajapaksa said yesterday.

He told The Island that Eric Solheim, former Norwegian peace envoy and Norwegian Minister of International Affairs, too, had said that this was a concocted scene. The UN too had dismissed the report as false, the Defence Secretary said.

"It is not our business to hold an inquiry into the Channel 4 telecast but international organizations should conduct an investigation into it" the Defence Secretary said.

He said that out of sheer vindictiveness against Sri Lanka for defeating the LTTE terrorists certain interested parties have resorted to this type of mud slinging


செனல்4 ஊடகத்தின் காட்சிகள் போலியானவை என எரிக் சொல்ஹெய்ம் ஒப்புக் கொண்டுள்ளார் - கோதபாய
[ சனிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2009, ]
செனல் 4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட காட்சிகள் போலியானவை என்பதனை நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், முன்னாள் இலங்கை சமாதான ஏற்பாட்டாளருமான எரிக் சொல்ஹெய்ம் ஒப்புக்கொண்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.


இந்த படுகொலைக் காட்சிகள் குறித்து பான் கீ மூனுடன் தான் பேச இருப்பதாகவும், இது ஒரு போர்க் குற்றம் எனவும் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்துவந்த எரிக் சொல்ஹெய்ம் இன்று,உண்மை அரசிடமே புதைந்து கிடப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார்.இராணுவப் படையினர் சித்திரவதை மேற்கொள்வதாக வெளியான செய்திகள் ஜோடிக்கப்பட்டவை என்பதனை சர்வதேச சமூகம் நன்கு புரிந்துகொண்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் போலியானவை என ஐக்கிய நாடுகள் அமைப்பும் குறிப்பிட்டுள்ளதென கோதபாய சுட்டிக்காட்டியுள்ளார்.

செனல்4 தொலைக்காட்சி சேவையின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை எனவும், சர்வதேச அமைப்புக்கள் அது குறித்து விசாரணை நடத்தும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சில அமைப்புக்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு சேறு பூசும் பணிகளை தொடர்வதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய தெரிவித்துள்ளார்.


4 comments:

ரமா கிருஸ்ணன் said...

தமிழர்களுக்காகப் பேச வல்லவர் எனக்கருதிய எரிச் சொல்கேமிற்கும், தமிழர்களின் கூட இருந்தே கழுத்தறுக்கிற குணம் தொற்றிக் கொண்டதில் வியப்பில்லையல்லவா???
ரமா கிருஸ்ணன்

சுவாமிநாதன் said...

விடுதலைப் புலிகளின் ஆயுத பலம்தான்
தமிழர்களின் உரிமைக்கான அளவுகோல்
என்ற மாயையிலிருந்து தமிழர் விடுபட்டிருக்கிறார்கள். எரிச் பேசியதில் எந்தத் தப்பும் இல்லை. தமிழர்களுக்குச் சுய நிர்ணய உரிமை வேண்டுமென்பதில் புலிகள் என்றைக்கும் கண்ணாக இருந்ததில்லை. தனி நாடு ஒன்று வேண்டும் என்பதில் தான் அவர்களின் கண். அப்போ தான் அவர்கள் மக்களை எடுபிடியாக்கி காலாகாலமாக தலைவர்களாக இருக்கலாம். அந்தப் படங்கள் உணமையில் முன்னரே இணையங்களில் உலவினது தான். இப்போ வைகோ ஏன் பெரிது படித்தினார் என்றால் அவரைத்தமிழர் எவரும் வெளிநாடுகளுக்கு இலவசமாக இந்த மாதங்களில் அழைக்கவில்லை என்பதற்காக இருக்கலாம்.
போரூர் சுவாமினாதன்

நலன் விரும்பி said...

ஆகா, என்ன கண்டு பிடிப்பு.புலி தனிநாடு கேட்காமல் சுய நிர்ணய உரிமை கேட்டிருந்தால் சிங்கள அரசு கொடுத்திருக்கும் போல பின்னூட்டம் விட்டிருக்கும் போரூர்காரரே உமக்கு ஈழவரசியல் தெரியவில்லை எனில் பொத்திக் கொண்டு போங்காணும்.
போட்டுக் குழப்ப வேண்டாம்.
நலன் விரும்பி(உமது நலன் விரும்பி)

kumanan said...

hello....
He told Eric Solheim, former Norwegian peace envoy and Norwegian Minister of International Affairs, too, had said that this was a concocted scene. The UN too had dismissed the report as false, the Defence Secretary said.
this is not true. this news is a story
kumanan

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter