Monday, October 04, 2010

நாட்குறிப்பு!


நாட்குறிப்பு
19 ம் நூற்றாண்டில்
மனிதர்களுக்கு
நலமடிக்க
மனிதர்களே
விதித்துகொண்ட
வருடத்தின்
முதலாவது மாதத்தின்
1 ம் நாள்.

விளக்குக் கம்பங்கள் இருந்தன
விளக்குகள்
இல்லை
வேகமாய்
உறுமிச் சென்றன
சொகுசு
வாகனங்கள்.
அதைவிட
வேகமாக வௌவால்கள்
இருள்
இரவை புணர்கிற மாலை நேரம்
மனிதர்களோடு
துப்பாக்கிகளும் நடந்தன.
வெடிச்சத்தம்
கேட்டவிடங்களிலெல்லாம்
மனிதர்கள்
விழ விழ துப்பாக்கிகள் மிடுக்கோடு நடந்தன
தெருநாய்கள்
மனித இரத்தத்தை முகர்ந்து ருசித்தது.

2 ம் நாள்.
கறுப்புக்காக்கிகள்
அங்குமிங்குமாய
சுட்டவனைச் சுடவும்
சுடாதவனைச்
சுடவுமாக
முகாந்தரமிட்டார்கள்
இறந்த
மனிதர்களின் தலைக்கு காவலாக வந்தவர்கள்
இருந்த மனிதரைக் கொல்லத் தொடங்கினார்கள்.
வானம்பாடி கீறிச்சிடவும்
அஞ்சும் பொழுதுகளாய்
பொழுதுகள்
இறங்கின.

3ம் நாள்.
உயிர்தெழுந்தார்
பரமபிதா என்று எழுதப்பட்ட
மூன்றாம்
நாளில் உரிமைக்காகக் கொடிதூக்கு
என்று
ஏவப்பட்ட கட்டளைகளின் பின்னால்
ஆயிரமாயிரமாய்
கொன்றவர்களைக் கொல்வதாய்
சபதமெடுத்தவர்கள்
துப்பாக்கிகள் பள பளக்க
ஊரை வலம் வந்தார்கள்.
கண்மூDஇ
விழிப்பதற்குள் மரத்தில் பாய்கிறது குரங்கு,
சுதந்திரத்தோடு
உறங்குகிறது உன் நாய்
கோழிகூட
சிறகடித்துப்பாடுகிறது
உன்னால்
எது முடிகிறது இங்கு???
கேள்விகளை
அடுக்கி அடுக்கி ஆள்ச்சேர்த்தார்கள்.
மௌனமொழிகுழைத்து
துணிவோடு எழுவதாக எழுந்தவர்கள்
வஞ்சிதோரை
வஞ்சிக்கப்போவதாக வலிந்து கட்டிக்கொண்டார்கள்.

4ம் நாள்.
தேவாலயத்
திருமணி
அடித்தோய்ந்தது
மீண்டும
சிலர் மரணித்திருக்கலாம்.
அல்லது
அதற்கும் மேலாய்....
தூசிக்காற்றைச
சுழற்றியபடியே
உலங்கு
வானூர்திகள் குண்டுகள் வீசுகின்றன
துப்பாக்கிகள்
சடசடத்தன.
மனித
வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறுகின்றன.
கடலும்
மண்ணும் ,வானமும்
ஒரு
சேரப் புகையாயிற்று. எனினும்
இவற்றிற்குமிடையே
வாழ்வதற்குத்துடிப்பு
இலையெல்லாம்
கருகிப் போய்
தண்டில
மட்டுமே ஈரம் தெரிந்த ஓர்
இளம்
நாற்றுக்கு நீர் ஊற்றுகின்றான்
நம்பிக்கையோடு
ஒருவன்.

5ம் நாள்.
நில்
நீ நடப்பதற்கு
முன்
முடிவெடித்துக்கொள்
உனக்கும்
உன் மனைவிக்குமாய் என
நீ
நினைத்திருக்கிற
பிள்ளை
உனக்கில்லையென்ற
விதியெழுதப்பட்டிருக்கிற பொழுது இது
தோளோட
தோள் சேர்க்கவே
ஆட்கள்
அவதரிப்பதாகப் பிரகடனப்படுத்துகின்றோம்.
நவீன
ஆயுதங்களோடு நம்பிக்கையும் நாம் ஊட்டுகின்றோம்.
வல்லமையுள்ள
நாடுகள் எம்மை வதைபொருளாகவே
பார்த்தல்
கண்டும் வாழாவிருத்தல் தகுமோ??
மக்கள
கலவரமடைந்தார்கள்.
இறுகப்பற்றிய
சறத்தோடும்
இனம்
புரியாத ஏக்கத்தோடும்
தப்புவதெப்படி
என்பதை எண்ணிச் எண்ணி
சோர்ந்து
கிடந்தனர்.
துப்பாக்கிகளின்
நீண்ட நிழல்கள்
தோழர்களுக்குள்
சிண்டுமுடியவும் ,
எதிரிகளை
சீண்டிப்பார்க்கவும்
அடுத்தவன்
வீட்டுக் கணக்குப் பார்க்கவும்,
கணக்கைத் தீர்க்கவும்
மட்டுமே
பிறந்தன
என்பதே மிகப்பெரிய
பீதியான
உண்மையாயிருந்தது..

6ம் நாள்.
வசதி மனிதர்கள்
தங்கள் முகங்களை மறைத்து
முண்டியடுத்து
உலகம் எங்கணும்
தப்ப
முனைகையில்
அகதியென்னும
சொல் அவரைத்துரத்தி ஒட்டிக்கொண்டது.
எதிரிக்கும்
,நண்பனுக்கும்
மனிதர்
அகதிகளாதல் நல்லது போலவும்
கெட்டது
போலவும் இருந்தது.

7 ம் நாள்
மண்மேடாய்போயிற்று
மனிதம்

எதிரியும்
நண்பனும் எல்லோரையும் கொன்று புதைத்தார்கள்.
வியூகங்கள்
வகுக்கப்பட்ட மண்மேடுகளில்
தேர்களாள்
மக்கள் நசிக்க விடப்பட்டார்கள்.
மணி
மகுடங்கள் தலைகவிழ்ந்தன.
நிலம்
பிரளயமானது.
பழைய
கருமங்களைக் கைவிட்டபடியே
பூமி
மறுபடி
புதிய
நாளுக்காகச் சுற்றிற்று
புதிய
நாளில்
என்
எல்லாப் பாடுகளும்,
என்
எல்லா முகவரிகளும்,
அழிந்து
போயிருந்தது.

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter