
சூதாட்டம்।
ஆண்டுகள் ஆறு
ஓடி மறைந்தும்
அகதி அந்தஸ்த்து
இன்னமும் இல்லை।
முத்தருக்கு......
பனிக்குளிரிலும்
வியர்த்துக் கொட்டியது।
அகதி நிறுவகம்
அங்கீகரித்ததை
அரசாங்கம் மறுதலிக்குமாம்।
அரசாங்கம்
அங்கீகரித்ததை
அகதி நிறுவகம்
மறுதலிக்குமாம்।
பூனைகள் விளையாடுகின்றன
எலிகளுக்கு
நித்திய மரணம்।
இறைச்சிக் கடைக்காரனிடம்
அந்தஸ்த்துக்கோரிக்,
கையேந்தும் - ஓர்
வெள்ளாட்டைப் போல
முழங்கால் மடித்தபடி
முத்தர்।
அடிபட்டு......உதைபட்டு
அகதியாய் வந்த - முத்தரை
கைகட்டி.......வாய்பொத்தி.......
ஊமையாக்கி விட்டு,
அகதி நிறுவகமும்
அரசாங்கமும்
வலிந்து வழக்காடுகின்றன।
உள்ளூர் நீதிமன்று
உயர் நீதிமன்று
உச்ச நீதிமன்று
மேன்முறையீட்டு நீதிமன்று - என
அப்பீல் கட்டுகளும்
கோணல் வக்கீல்களும்
குறுக்கு நீதவான்களுமாய்...
தின்று தீர்க்கின்றார்கள்
அகதிகளின் எச்சங்களை.....
வெற்று வழக்குகளில்
மில்லியன்களைத் தொலைத்துவிட்டு
அகதிகளுக்கு
வெறும் கஞ்சி ஊற்றிய.......
வெற்றுக் களிப்பில்
வீரஉலா வருகின்றார்கள்
இந்தச் சூதாடிகள்।
----------------------
ஆண்டுகள் ஆறு
ஓடி மறைந்தும்
அகதி அந்தஸ்த்து
இன்னமும் இல்லை।
முத்தருக்கு......
பனிக்குளிரிலும்
வியர்த்துக் கொட்டியது।
அகதி நிறுவகம்
அங்கீகரித்ததை
அரசாங்கம் மறுதலிக்குமாம்।
அரசாங்கம்
அங்கீகரித்ததை
அகதி நிறுவகம்
மறுதலிக்குமாம்।
பூனைகள் விளையாடுகின்றன
எலிகளுக்கு
நித்திய மரணம்।
இறைச்சிக் கடைக்காரனிடம்
அந்தஸ்த்துக்கோரிக்,
கையேந்தும் - ஓர்
வெள்ளாட்டைப் போல
முழங்கால் மடித்தபடி
முத்தர்।
அடிபட்டு......உதைபட்டு
அகதியாய் வந்த - முத்தரை
கைகட்டி.......வாய்பொத்தி.......
ஊமையாக்கி விட்டு,
அகதி நிறுவகமும்
அரசாங்கமும்
வலிந்து வழக்காடுகின்றன।
உள்ளூர் நீதிமன்று
உயர் நீதிமன்று
உச்ச நீதிமன்று
மேன்முறையீட்டு நீதிமன்று - என
அப்பீல் கட்டுகளும்
கோணல் வக்கீல்களும்
குறுக்கு நீதவான்களுமாய்...
தின்று தீர்க்கின்றார்கள்
அகதிகளின் எச்சங்களை.....
வெற்று வழக்குகளில்
மில்லியன்களைத் தொலைத்துவிட்டு
அகதிகளுக்கு
வெறும் கஞ்சி ஊற்றிய.......
வெற்றுக் களிப்பில்
வீரஉலா வருகின்றார்கள்
இந்தச் சூதாடிகள்।
----------------------
No comments:
Post a Comment