Saturday, July 12, 2008

உருத்திரபுரம் ஒன்றுகூடல்!

உருத்திர புரத்து 12வது


மாபெரும் ஒன்றுகூடலும்

விளையாட்டுப்போட்டியும்....


வருடா வருடம் மிகச்சிறப்பாக நடந்தேறும் உருத்திரபுர அபிவிருத்திக் கழக ஒன்று கூடல் இம்முறையும் புதிய தலமையின் கீழ் வெகு சிறப்பாக நடந்தேறியது.
உருத்திரபுர உறவுகளின் இனிய ஒன்றுகூடல் கனடாவின் முன்னணி மைதானங்களில் ஒன்றான “டவுண்ஸ்வியூ”ப் பூங்காவில் கொட்டும் மழையினுள்ளும் கூதுகலமாக நடந்தேறியது. சாரி..சாரியாக வந்த மக்களை, சாரை..சாரையாக வந்து விழுந்த பெருமழை திக்குமுக்காட வைத்த போதும் சளைக்காமல் சலிக்காமல் நிகழ்வுகள் அனைத்தும் சொல்லி வைத்தாற்போல் நிகழ்ந்தேறியது. உருத்திரபுர அபிவிருத்தியில் பெரிதும் அக்கறையுடன் செயல்படும் இச்சங்கமானது கடந்த ஒரு தசாப்தங்களுக்கு மேலாக தாயகத்து உறவுகளுக்கு செய்து வரும் அரும்பணி போற்றுதற்குரியது


கொட்டும் மழைநாளில் கூதூகலித்திருந்த

உருத்திரபுரத்து உறவுகள்.




தன் தள்ளாத வயதிலும்,உருத்திரபுர அபிவிருத்தியில் மிகநீண்டகாலமாகவே தன்னை ஈடுபடுத்தி தாயகமக்களுக்காக உழைத்து வருபவர் முன்னைநாள்அதிபரும், கரைச்சிப்பகுதியின் முன்னைநாள் அக்கிராசனருமான திரு கா.நாகலிங்கம் அவர்கள்.அவரும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்திருந்தார்.


மானிடக்குலத்தை மழையிலிருந்து காத்த உறவுகள்





















ஓடிவரும் வெள்ளத்தை உவகை பொங்க நோக்கும் மக்கள்.









அடாத மழையினுள்ளும் விடாது தொடர்ந்தது உருத்திரபுரத்து ஒன்றுகூடல்.



> கைகளால் பந்தற் கால்களை ஏந்தி முல்லைக் கொடிக்கு தேர் கொடுத்த பாரியின் வாரிசுகள்.

.கொத்துரொட்டி,பபிக்கியூ,சிற்றுண்டிவகைகள்,நிலாச்சோறு என வாய்க்கும், சிறுவர் விளையாட்டுக்கள்,ஓட்டம் ,பாடல்கள் எனமனதிற்கும் உடலுக்கும் இதம் தந்ததென்கின்றார்கள் பார்வையாளர்கள்.










“கூளா” மரம்

உறவினர் சூழ்ந்த உருத்திர புரத்துக்
கோபுரக்கலசமாய்
பெருவேர் இறக்கி
உட்கார்ந்திருந்தது
"கூளா மரம்”

வெள்ளைய வெறியரின் வெஞ்சினத்துள்ளும்
முன்னைய நாளில்
நம்பிகை துலங்க
நம் அரும் முன்னோர்
கட்டிக் காத்த
மூத்த “சிவன்”
இன்னமும் சாட்சியாய்..

நினைவுகள் அழித்து
உதை பட்டோடும் பந்தினைப்போல - நான்

வாய்க்காற்கரையின்
வசந்தம் மறந்தும்..
வயற்புறத் தெருவின்
வாழ்வினை ஒழித்தும்..
இன்னமும்... இன்னமும்..
எத்தனை காலம் இங்கு
வாழ்ந்து முடிப்பேன் ???

அன்னிய நாட்டுக்
குடிமகனென்ற {citizen}
மூக்கணாங் கயிற்றுடன்,
நாளும் பொழுதும்
நலமடித்துழைக்கும்
இரட்டைகால் எருது!!

சாவினுக்கஞ்சி
முகவரி தொலைத்து,
வெள்ளைப் புதைகுழிச்
சகதியுள் புதையும்
என் பரம்பரை!!!

அன்னிய நாட்டு
மாநகரங்கள் எங்கள்
அடையாளங்களை
அழிக்குமென்றறிந்தும்..
முகங்களை ஒட்டி - இன்னமும்
அன்னியத் தெருவில்
துயின்றெழும் மனிதன் நான்!!

மேலும்.. மேலும்..
எம்மை நசிக்கிற
குருசேத்திரத்துச்
சூதாட்டக் காய்களுள்
நசிபட்டு நாங்கள்
இறந்து படுவமோ?

எறும்பை கூடக்
கொல்லத் துணியா
எங்கள் குருதியை
எவனோ எங்கோ...
பருகி மகிழ்வதோ???
மருதம் மலர்-2006




ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...
இனிய உள்ளங்களுக்கு!அகதியின் நாட்குறிப்பு உண்மையில் வாசகர் கருத்துக்களை,அவர்களின் பரிந்துரைகளை இரகசியமாகப் பேணிப் பரிசீலித்து வரும்.
ஆனாலும் அண்மையில் வெளியாகிய உருத்திரபுர அபிவிருத்திச்சங்கத்தின் ஒன்றுகூடல் தொடர்பாக வந்த வாசகர் கடிதங்கள் இச்சங்கத்தோடு தொடர்புடையோருக்கும் சென்றடைய வேண்டு மென்னும் நல்நோக்கில் அவற்றை இங்கு பிரசுரிக்கின்றது.அகதியின் நாட்குறிப்பு.

4 Comments
Close this window
Anonymous said...
உருத்திரபுர மக்களை பார்க்கையில்எனக்குப் பொறாமையாக இருக்கிறது. நான் தனித்துப் போய் சூரிச்சில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.சர்வதேச ரீதியாக உருத்திரபுர சங்கம் இயங்க வேண்டும் என்பது எனது அவா.குமார்.
19 July, 2008 04:54

said...
North yorkநீண்ட காலமாக இயங்கும் இச் சங்கம்தன்னை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. தற்செயலாகஇந்த வலைக்குள் நுழைந்த போது இப் பதிவைப் பார்த்தேன்.உருத்திரபுரம்தனியான ஓர் இணைய வலையை உருவாக்கி பல இடங்களில் உள்ளோரையும் ஒன்றிணைக்க வேண்டும்.ஜோதீஸ்வரன்.
20 July, 2008 01:02

Torontoslu .blogspot.comதிக்குகள் மாறி திசைக்கொரு வழியில்செல்லத் துணிந்திருக்கும் செய்திமனம் வருந்தத் தக்கது. உலகில் தீர்க்கமுடியாததென்று எதுவும் இல்லை.மனம் இருந்தால் இடம் உண்டு.மனிதாபிமானம் உள்ளவர்கள் முன்வரவேண்டும்.ரங்கநாதன்.
20 July, 2008 03:12


















































































































































































































































5 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...
This comment has been removed by the author.
Anonymous said...

Hello !!
first time here.. just read this post. very nice.keep it up. Uruththirapuram.

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter