Friday, July 18, 2008

(Susumu Ōno, பேராசிரியர் சுசுமு காலமானார்


ஜப்பானிய தமிழ் கல்விமான் பேராசிரியர் சுசுமு காலமானார் !!!

Tamil, passed away on Monday in Tokyo at the age of 89, reported The Japan Times. He was working on the relationship between Tamil and Japanese languages for the last 30 years and even last year came out with a publication, reasserting to his theories. A 1999 book of him on Japanese language sold nearly 2 million copies.


ஜப்பானிய தமிழ் கல்விமான் பேராசிரியர் சுசுமு காலமானார்
[18 - July - 2008]

ஜப்பானிய தமிழ் மொழியியல் துறை கல்விமானான பேராசிரியர் சுசுமு ஓனோ (89 வயது) கடந்த திங்கட்கிழமை டோக்கியோவில் காலமானார்.
பேராசிரியர் சுசுமு தமிழ் ஜப்பானிய மொழிகளுக்கிடையிலான தொடர்புகள் குறித்து கடந்த 30 ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். தமது கருத்தியல் கொள்கைகளை கடந்த வருடம் நூலாகவும் அவர் பிரசுரித்திருந்தார்.
ஜப்பானிய மொழியில் 1999 இல் அவர்வெளியிட்ட நூலின் 20 இலட்சம் பிரதிகள் விற்பனையாகின.
1919 ஆகஸ்ட் 23 இல் பிறந்த சுசுமு 1930 களின் பிற்பகுதியில் மொழியியல் துறைக்குள் பிரவேசித்தார். இரண்டாம் உலக மகா யுத்த காலகட்டத்தில் கல்வித்துறைக்கு அவர் அளப்பரிய பங்களிப்புகளை செய்திருந்தார்.
ரோக்கியோவிலுள்ள கக்கு சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய சுசுமு ஓனோ, மொழிக் கல்வி உட்பட பல aar மேற்கொண்டார்.
1970 களின் பிற்பகுதியில் தமிழ் மொழிக்கும் ஜப்பான் மொழிக்கும் இடையிலான பிணைப்புகள் தொடர்பான அவரது முதலாவது ஆக்கங்கள் வெளிவந்தன. இந்த ஆய்வை மேற்கொண்ட முதலாவது ஆளாக அவர் இல்லாவிடினும் இத்துறையில் முக்கியமானவராக அவர் இடம்பிடித்துக் கொண்டார்.
சுசுமுவின் தமிழ் ஜப்பானிய மொழி ஆய்வுகள் தனியாக மொழியியல் துறையுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஒலிகளுக்கிடையிலான ஒத்த தனிமை, சொற்கள், இலக்கணம், இலக்கியம் மற்றும் தொல்பொருளியல் துறை, நாட்டார் இலக்கியம் என்பவற்றையும் உள்ளடக்கியதாக அது காணப்பட்டது.
ஜப்பானின் யாயோய்கல்லறைகளுடன் தென்னிந்தியா மற்றும் இலங்கையிலுள்ள (கி.மு. 1300300) காலப்பகுதி கல்லறைகளுடன் ஒப்பிட்டு அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
1990 களின் முற்பகுதியில் வெளியிடப்பட்ட அவரின் ஆய்வுகள் இரு கலாசாரங்களுக்குமிடையில் கவிதை, இறுதிக்கிரியை நடை முறைகள் போன்றவற்றுக்கிடையிலான ஒற்றுமைத்தன்மைகளை அதிசயிக்கத்தக்க வகையில் வெளிப்படுத்தியிருந்தன. தமிழ்ச்சமூகத்தின் மீதும்,
தமிழ்க் கல்வி நிறுவனங்கள், தமிழ்க் கல்விமான்களுடனும் பேராசிரியர் சுசுமு ஓனோ நீண்ட தொடர்புகளை பேணிவந்தார்எனவும், ஜப்பானிய மாணவர்கள் பலரை தமிழ் மொழியைக் கற்குமாறு அவர் ஊக்குவித்தார் எனவும்,ஜப்பான் சென்று வந்த சமூகவியல் அறிஞர் மா,கணபதிப்பிள்ளை அவர்கள் அவரை நினைவு கூர்ந்தார்.
இலங்கைத் தமிழ் கல்விமான்களான பேராசிரியர் ஆ.சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ் ஆகிய இருவரும் பேராசிரியர் சுசுமுவுடன் நீண்டகாலம் இணைந்து பணியாற்றியவர்களாவர். யாயோய் கல்லறைகள் பற்றிய ஆய்வை கலாநிதி பி.ரகுபதி சுசுமுவுடன் இணைந்து மேற்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Susumu OHNO

Introduction

In search of languages genetically related to Japanese, linguists over the last one hundred years have compared Japanese with almost every other language in the world-not only those of neighbouring peoples such as Ainu, Korean and Indonesian, but even Greek; yet none of these efforts have succeeded in establishing any kind of kinship.

It was more than ten years ago that interest in the Dravidian languages of South Indian began to spread among some Japanese researchers. Similarities between Japanese and Dravidian had been first pointed out in the mid-nineteenth century. In his major work, A Co~nparative Grammar of the Dravidian or South-Indian Family of Language, the English missionary R. Caidwell, cites resemblances and discusses the connection between the two languages.

The Japanese-Dravidian connection was studied in Japan for the first time by Susumu Shiba, who approached the subject from the point of view of religion. His findings were presented in “Kodai ni okeru Nihonjin no shikO” (Ways of Thinking of Ancient Japanese), which appeared in 1970 in the journal Jinbun ronsã (No.18, Kyoto Women’s University), and in a later study, “Dravida-go to Nihongo” (Dravidian Languages and Japanese), published in the same journal (No.22-23, 1973-74).

Comparative linguist Akira Fujiwara, began publishing the results of his research on Dravidian in 1974. In 1981 he put out a book entitled Nihongo wa doko kara kita ka (Whence the Japanese Language? Tokyo: Kodansha). His extensive comparisons of lexical items, comparing a number of words, including some particles and auxiliaries, were impressive. However, bececaue he took on the Dravidian family as a whole, his methodology was rather clumsy, and he failed to sufficiently demonstrate a kinship with Japanese. Another problem was that he did not take ancient Dravidian languages into consideration.

I travelled to South India in 1980 to continue my research, receiving invaluable aid from Ms. Rama Lakshmi and Ms. V.N. Balambal. On New Year’s Day the following year, I showed Prof. Jaroslav Vacek of Charles University in Prague a list of the word correspondences I had collected for Tamil and Japanese. He kindly took time out of his busy schedule to check over the list with great care. For one year beginning in the fall of the same year, I studied the reading of classical Tamil at the University of Madras under Prof. Pon. Kothandaraman. During the winter break I visited the Trichi district, his home village, and was able to observe the old Tam ii New Year’s celebrations.


In March 1983, Prof. Arunasalam Sanmugadas, linguist at the University of Jaffna in Sri Lanka, and his wife Manonmani, came to Japan on a Japan Foundation grant, one of their purposes being to assist me in my research. They had grown interested in the Tam il-Japanese connection after hearing a lecture I gave at the 5th International Conference/Seminar on Tamil Studies held at Madurai in the Tamil state of India in
1981.

As guest researchers here at Gakushuin University, Mr. and Mrs. Sanmugadas studied classical Japanese literature and are now working on a translation of the Man ‘yoshu into Tamil. They have meanwhile continued to give me invaluable assistance in my study of the Tamil language. They themselves are Tamils, and have taught me much not only about their language but about Tam ii customs as well.



சுசுமு ஓனோ (Susumu Ōno, ஜப்பானியம்: 大野 晋, Ōno Susumu; ஆகஸ்ட் 23, 1919-ஜூலை 14, 2008) என்பவர் டோக்கியோவில் பிறந்த மொழியியல் ஆராய்ச்சி நிபுணர். இவர் பழங்கால ஜப்பானிய மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக் கொணர்ந்தவர். 1943ம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் டோக்கியோவில் கக்குசியூவின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1999 இல் இவர் வெளியிட்ட ஜப்பான் மொழி பற்றிய ஆய்வு நூல் 2 மில்லியன் பிரதிகள் விற்பனையாகின 1970களின் பிற்பகுதியில் இவர் தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் இடையேயான தொடர்புகள் குறித்த தனது கருதுகோள்களை வெளியிட்டார். ஓனோவின் ஆய்வுகள் ஒலி, சொற்கள், இலக்கணம், மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் மட்டுமல்லாமல், தொல்பொருள் ஆய்வு, நாட்டுப்ப்பாடல்கள் போன்றவற்றிலும் ஆய்வுகளை மேற்கொண்டார்.ஆதிகால ஜப்பானிய மொழி பொலினேசிய மொழிகளின் குடும்பத்தைச் சேர்ந்த தில் வந்ததென்பதை பேராசிரியர் ஓனோ ஏற்றுக் கொண்டாலும், திராவிட மொழிகளின் தாக்கமும் நிறைந்து கிடப்பதை அறிந்தார். குறிப்பாக கிமு 500 - கிபி 300 களில் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட விவசாயம், கப்பல் போக்குவரத்து, வர்த்தகம் போன்றவற்றினால் இப்படியான தாக்கங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்பது இவரது வாதம்.சுசுமு ஓனோ தமிழ் அமைப்புகள், மற்றும் தமிழாய்வாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். பல ஜப்பானிய மாணவர்கள் தமிழ் கற்க ஊக்கப்படுத்தினார்.

1 comment:

Anonymous said...

Adhu sari, Innoru padhivar thooya thamizhil ezhudhukiraen endru Japanai Sappan endhru ezhigiraar. Adhai paarthu verththu ingae vandhaal Tokyovai Rokiyo endru neengal ezhudhukireergal.

Romba kashttam

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter