Monday, October 20, 2008

“அரவணைப்போம்”



'அரவணைப்போம்'


கனேடியத் தமிழ்ப் பிரதேச அமைப்புக்களின் அனைத்து நிர்வாகங்களும் ஒன்றிணைந்து"அரவணைப்போம்” என்ற பெயரில் தாய் மண்ணில் போரினால் இடம்பெயர்ந்து அல்லலுறுகின்ற மக்களது துயர் போக்குவதற்கான அவசர உதவி வேண்டி முன்னெடுக்கப்படுகின்ற மாபெரும் கவன ஈர்ப்புப் போராட்டம்!!

காலம்: நவம்பர் 01,2008 (November 01, 2008)

நேரம்: 5:00 PM

இடம்: ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம். (Sri Iyappan Hindu Temple) -

635 Middlefield Road Toronto, ON



தாய் மண்ணில் போரினால் இடம்பெயர்ந்து அல்லலுறுகின்ற மக்களது துயர் போக்குவதற்கான அவசர உதவி வேண்டி முன்னெடுக்கப்படுகின்ற “அரவணைப்போம்” நிகழ்வானது கார்த்திகை மாதம் 1ம் திகதி ஸ்ரீ ஐயப்பன் கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கனடாவில் வாழ்கின்ற மண்ணின் உறவுகளாகிய நாங்கள் தாய்மண்ணில் அல்லலுறுகின்ற எங்கள் தமிழ் உறவுகளை அரவணைத்து உதவி செய்ய கனடாவில் இயங்குகின்ற எங்கள் ஊர் அமைப்புக்களையும், பாடசாலை மன்றங்களையும் ஒன்றிணையுமாறு அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம். இணைந்து கொள்ள விரும்புகின்ற அமைப்புக்கள் காலந்தாழ்த்தாது கீழ் உள்ள இலக்கங்களை அழைப்பதுடன் எதிர்வரும் 19 ஐப்பசி(oct) 2008 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு 2929 லோரன்ஸ் அவனியு கிழக்கு அறை இலக்கம் 203ல் நடைபெறவிருக்கும் ஒருங்கிணைப்புக் கூட்டத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.


மேற்படி நிகழ்வின் மூலமாகத் திரட்டப்படுகின்ற நிதியானது கெயர் (Care) அமைப்பினூடாக தாயகத்தில் அல்லலுறும் மக்களது துயர் துடைக்க அனுப்பிவைக்கப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.

ஓன்றிணைந்து கொள்ள அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:
1. சிவா (நெடுந்தீவு மக்கள் ஒன்றியம்)

416-277-9471 .

2. சத்தியா (துன்னாலை கரவை மக்கள் மன்றம்)
416-505-3194 .

3. சிவா (வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையம்)
416-520-1214

4. லோகன் (வேலணை மத்திய மகாவித்தியாலய ப. மா)
416-450-3984 .

5. சந்திரன் ( உருத்திரபுரம் அபிவிருத்திக் கழகம்)
416 -402-4545

பதிவு செய்யப்பட்ட தகவலைப் பெறவும், தகவல் பதிவுக்குமாக அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 416-623-9558


குறிப்பு: ஊடகங்களுக்கு மட்டும்: 416-520-1214 இத்தகவலை மிக விரைவாக விளம்பரப்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்!


No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter