Monday, April 06, 2009

பிரித்தானிய பாராளுமன்றம் !!!

பிரித்தானிய பாராளுமன்றம் முன்பாக திரண்ட மக்கள், பேரழிவை தடுத்து நிறுத்தும்படி கோரி ஆர்ப்பாட்டம்


திங்கட்கிழமை,

போர் நிறுத்தம் என்ற அறிவிப்பு வரும் வரை ஓய்வு ஒளிச்சலற்ற, தொய்வு அற்ற போராட்டங்கள் பல நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.அந்த வகையில் இலண்டனில் பாராளுமன்றத்தை சூழ பல்லாயிரக்கணக்கான தழிழ் மக்கள் அலை அலையாக திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று வன்னி மண் என்றுமே கண்டிராத ஒரு அவலம் நடந்து விடுமோ என்ற நிலையில் இருக்கின்றது. பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்களை அழித்து தமது இராணுவ வெற்றியை அடையும் வெறியில் கர்ச்சிக்கிறது இந்திய, சிங்கள அரசுகள்.
இதனை தடுத்து நிறுத்தி , ஒரு போர் நிறுத்தம் என்ற அறிவிப்பு வரும் வரை ஓய்வு ஒளிச்சலற்ற, தொய்வு அற்ற போராட்டங்கள் பல நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.அந்த வகையில் லண்டனில் பாராளுமன்றத்தை சூழ பல்லாயிரக்கணக்கான தழிழ் மக்கள் அலை அலையாக திரண்ட வண்ணமுள்ளனர்.
இப் பாரிய மனித அவலத்தை தடுக்க நிறுத்த வேண்டிய பாரிய பொறுப்பு ஒவ்வொரு தமிழனினதும் கைகளில் இருப்பதாகக் கூறும் மக்கள் பிரித்தானியாவில் வாழும் அனைத்து மக்களும் இதில் கலந்து கொண்டு, இப்பேரழிவை தடுத்து நிறுத்தும்படி பிரித்தானியா அரசை வலியுறுத்த வேண்டுமெனவும் கேட்டு நிற்கின்றனர்.
அங்கு கூடியுள்ள மக்கள் மத்தியில் ஒருவகை அச்ச உணர்வு காணப்படுகின்றது, வன்னியில் தம் உறவுகள் கூண்டோடு அழிக்கப்பட்டு விடுவார்களோ என அஞ்சும் அம் மக்கள் தாம் பிரித்தானிய அரசு இவ்விடயத்தில் தலையிடும் வரை அவ்விடத்தை நகரப்போவது இல்லை என்றும் உறுதி கொண்டுள்ளனர்.
எழுச்சியுடன் கூடிய மக்கள் தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் இலண்டனின் மையப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வன்னியின் அவலம் தடுக்கப்படும் வரை தாம் சாலைகளை நிரப்பி மறியலை

தொடரப் போவதாக உறுதி கொண்டுள்ளனர்.

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter