Wednesday, April 15, 2009

உண்ணாவிரதம் முறியடிப்பு!!


கிருஸ்ணாவின் உண்ணாவிரதமும் காவற்துறையின் கெடுபிடியும்....


BREAKING NEWS-
Swiss-Mr.Krishna Ambalavanar forced to terminate the Hungers strike by the authorities(POLICE) this evening at about 20h00 local time..He has started the Hungers strike on 13.04.2009 at 10h30 and from yesterday onwards he was continue in Tamil Hindu Temple in Bern because the authorities has been withdrawn the permission.




காவற்துறையின் தலையீட்டை அடுத்து கிருஸ்ணா அம்பலவாணரின் உண்ணாவிரதம் இடைநிறுத்தம்
வன்னியில் உடனடிப் போர் நிறுத்தம் கோரி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போரட்டத்தை ஆரம்பித்த கிருஸ்ணா அம்பலவாணரின் போராட்டம் காவல்துறையினரின் தலையீட்டை அடுத்து இடைநிறுத்தப்பட்டது. 13.04.2009 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சுவிஸ் தமிழர் பேரவை இணைப்பாளர் கிருஸ்ணா அம்பலவாணர் ஆரம்பித்த போராட்டம் தொடர்ந்து 15.04.2009 இரவு 8 மணிவரை தொடர்ந்தது. கிருஸ்ணா அம்பலவாணர் தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தனது போராட்டத்தை நிறைவு செய்யமாட்டேன் என மறுத்து விட்டார். இதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபரின் அனுமதி பெறப்பட்டு காவற்துறையின் அவசர மருத்துவப் பிரிவினர் அழைக்கப்பட்டனர். இதனையடுத்து காவற்துறையினர் வலுக்கட்டாயமாக நோயாளர் காவு வண்டியில் மருத்துவனைக்குத் தூக்கிச் சென்றனர்.

2 comments:

ttpian said...

இந்தியா ஒரு வல்லரசு....வல்லர்சு என்பது கெட்ட வார்த்தை....இந்தியா தனது அயுதங்கள் கூர்மையானவை என்று,தமிழர்களை கொல்வதின் மூலம் நிறுபித்து உள்ளது!
நான் இந்தியன் என்று சொல்வது கேவலமக உள்ளது!

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

//நான் இந்தியன் என்று சொல்வது கேவலமக உள்ளது!//

மானிட நேயம் என்பது நாட்டையும் எல்லைகளையும் கடந்தது. இந்தியன் ஈழத்தவன் என்றெல்லாம் பிரித்துப்பேசுகிற நேரம் அல்ல இது.
உங்கள் உணர்விற்கும், வருகைக்கும் நன்றி.
தமிழ்சித்தன்

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter