Saturday, May 16, 2009

யேர்மனியில் தொடருந்துப் பாதைகள் தமிழ்மக்களால் முடக்கம்!!

யேர்மனியில் டுசில்டோவ் பிரதான,மற்றும் தொடருந்துப் பாதைகள் தமிழ்மக்களால் முடக்கம்.

வன்னியில் தமிழ்மக்கள் கொடூரமாக கொல்லப்படுவதையடுத்து யேர்மனியில் நேற்று முன் தினம் உக்கிரமடைந்த தமிழ்மக்களின் கவனயீர்ப்புப் போராட்டத்தின் தொடர்ச்சியாக நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் டுசில்டோவ் பிரதான புகையிரதநிலையத்தில் கூடியதமிழ்மக்கள் திடீரென கடுகதி தொடருந்துகள் சேவையில் ஈடுபடும் தொடருந்துப் பாதையில் பாய்ந்து தொடருந்துப் பாதையை முடக்கினர். இதனையடுத்து டுசில்டோவ் ஊடான சகல தொடருந்துப் போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டன. அதிவிரைவு தொடருந்துகள் மற்றும் சாதாரண தொடருந்துகளுமாக 46 தொடருந்துகள் இப்பாதை ஊடாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தொடருந்து மறியல் போராட்டத்தினால் பிராங்போட் விமானநிலைம், டுசில்டோவ் விமான நிலையம் மற்றும் அம்ஸரடாம் விமான நிலையத்திற்கு பயணிக்கச் சென்றோர் தங்களது விமானத்தை தறவிட்டனர். ஊடகங்கள்,மற்றும் உரியவர்கள் இவ்விடத்திற்கு வருகை தந்தால் அன்றி அகலமாட்டோம் என தெரிவித்து சுமார் 1:30 மணி நேரத்திற்கு மேலாக இப்போராட்டம் தொடர்ந்தது.
யேர்மனியின் முன்ணணி ஊடகங்கள் மறியல் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. யேர்மனிய ஊடகங்கள் தமிழ்மக்களுடன் உரையாடியதுடன் மக்களின் நேர்காணல்களை ஒளிப்பதிவாக்கிக் கொண்டனர். தமிழ்மக்களின் பிரச்சினையை தங்களின் ஊடகங்களில் வெளிவரச் செய்வதாகத் தெரிவித்தனர். இதனை அடுத்து தமிழ்மக்கள் அமைதியாக தொடருந்துப் பாதையில் இருந்து விலகி தொடருந்துகள் செல்லும் மேடைக்கு வந்தனர் தொடருந்து மேடையில் ஒன்றுகூடிய மக்கள் தொடருந்துநிலையத்தில் இருந்து ஊர்வலமாக டுசில்டோவ் மாநிலப்பாராளுமன்றம் நோக்கிச் சென்றனர் சிறீலங்காஅரசின் இனப்படுகொலையில் இருந்து தமிழ்மக்களை காப்பாற்றுங்கள்! ஊடகங்களே தமிழ்மக்கள் அழிக்கப்படுவதை வெளிக்கொண்டு வாருங்கள்!
போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்று டுசில்டோவ் பாராளுமன்றத்ததைச் சென்றடைந்தனர்.

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter