Sunday, May 17, 2009

பிரித்தானியாவில் குமுதினி நினவெழுச்சி நாள் !!!

பிரித்தானியாவில்
குமுதினி நினவெழுச்சி நாள் !!!


இந்துமாக் கடலினுள் செருக்கோடு நீட்டி நிமிர்ந்து கிடக்கிற நெடுந்தீவுக்கடலில் வைத்து குமுதினிப்படகை



24 வருடங்களுக்கு முன்னர் அரச கூலிப்படைகள் துவம்சம் செய்தார்கள். அதில் 60 ற்கும் மேற்பட்ட அப்பாவிகளின் உயிர்கள் பறிக்கப்பட்டன.
இக்கொடியநிகழ்வை நினவுபடுத்தி பிரித்தானியா வாழ் நெடுந்தீவு மக்கள்,மற்றும் இதர தமிழ் ஆர்வலர்கள் மே மாதம் 17-திகதி மாலை 5 மணிக்கு பிரித்தானிய ஆலய மண்டபத்தில் அந் நினைவெழுச்சியினை நடாத்த உள்ளார்கள்।



"குமுதினிப் படுகொலை யென்பது ஒரு தனிமனிதப் படுகொலையல்ல.அது ஒரு ஊரின் மரணம். அது ஒரு இனத்தின் மரணம் பூவும் பிஞ்சும் காயுமாய் குதறியெறிந்த ஒரு நந்தவனத்தின் முற்றுப் புள்ளி. பச்சைக் குழந்தையைக்கூட மிச்சம் விடாமல் குதறித் தின்ற கொடிய பேய்களின் கோரத்தாண்டவம்.அதை நினவு கூர வேண்டியது ஒவ்வொரு மானமுள்ள தமிழனதும்கடமை."
சாந்தலிங்கம்

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter