Friday, May 22, 2009

யுத்த வெற்றிகள் பிரச்சினைகளுக்கு தீர்வை தராது: கொபி அனான்!



யுத்த வெற்றிகள் பிரச்சினைகளுக்கு தீர்வை தராது:

கொபி அனான்

மோதல்களால் இடம்பெயர்ந்தவர்களை துரிதமாக குடியமர்த்துவதன் மூலம் 25 வருடகால யுத்தத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை சரிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் கொபி அனான் இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கொபி அனான் நேற்று வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூன் இலங்கைகு செல்வதற்கு ஒருநாளைக்கு முன்னரே கொபி அனான் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார். யுத்தத்தின் வெற்றிகள் பிரச்சினைகளின் தீர்வாக அமையாது என்பதை அரசாங்கம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டுள்ளவர்களின் இழப்புகளை ஈடு செய்வதன் ஊடாகவும் அவர்களை துரிதமாக மீள் குடியமர்த்தி சமாதானமான வாழ்வினை உறுதி செய்வதன் ஊடாகவுமே அதனை அடைய முடியும் என அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு அரசாங்கம் மேற்கொள்ளத் தவறினால் எஞ்சியுள்ள பிரச்சினைகள் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை தோற்றுவிக்கும் என எச்சரித்துள்ளார்.


பிரபாகரன் தொடர்பான மக்கள் தொலைக்காட்சி நிறுவகச் செய்தி இது..




இன்னிலையில் தமிழ்நெட் இணையம் புலிகள் தலைவர் உயிரோடு இருப்பதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.
LTTE leadership safe:
Tiger intelligence official
Head of International Secretariat of the Intelligence wing of the LTTE, Mr. Arivazhakan, who contacted TamilNet Friday categorically denied the reports that the LTTE leader Mr. Velupillai Pirapharan has been killed. Mr. Arivazhakan urged the global Tamil community not to trust the "engineered rumours," being spread by the Government of Sri Lanka and its military establishment. "Our beloved leader is alive," he said and added that the LTTE leadership will make contact with its people at a suitable time in future. "These rumours have been set afloat to confuse the global Tamil community which has been voicing support for the liberation of Tamil Eelam," he further said.Mr. Arivazhakan, who verified his identity through a senior reporter in Sri Lanka, did not reveal his location due to security reasons

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter