மொத்தத் தமிழினமும் அழிகிற வேளையில் வாய் மூடி உட்கார்ந்திருக்கிறார்கள் ஆசாட பூதிகள்.

மட்டக்களப்பில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
மட்டக்களப்பு நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை மர்மமான காணாமல் போலிருந்த கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுஷிக்கா (வயது 8) இன்று காலை கிணறு ஒன்றிலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலை சென்றிருந்த போது மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார். இன்று காலை கல்வியங்காடு சேமக்காலைக்கருகில் உள்ள வளவு ஒன்றிலிருந்த கிணறு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்..
சடலம் இவரது தாயாரால்; அடையாளம் காணப்பட்டு தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவரது தந்தை எஸ். சதீஸ்குமார் (உடற்கல்வி ஆசிரியர்) 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இனந்தெரியாதோரால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல போயிருந்தார். இதே பாணியில் கடந்த மார்ச் 18ஆம் திகதி திருகோணமலை சென் மேரிஸ் வித்தியாலய முதலாந்தர மாணவி ஜூட் வர்ஷா காணாமல் போய் பின்னர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரணவிசாரணைகள் மட்டக்களப்பு நீதவான் ராமக்கமலனால் நடத்தப்பட்டதன் பின்னர் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வைத்தியபரிசோதனையை சட்ட வைத்திய அதிகாரி ரகுமான் மேற்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment