Wednesday, June 10, 2009

பொப் ரே இலங்கைக்குள் நுழைய அனுமதி மறுப்பு:

தமிழரின் குரலென்று வர்ணிக்கப்படும்
கனடிய எம்.பி் பொப் ரே

இலங்கைக்குள் நுழைய அனுமதி மறுப்பு:
விமான நிலையத்தில் வைத்து திருப்பி

அனுப்பியது இலங்கை அரசு
[ புதன்கிழமை, 10 யூன் 2009, ]

கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் ரே இலங்கைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகளினால் நேற்று இரவு திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து தெரியவருவதாவது:

தமிழர்களுக்கு எதிரான இலங்கை இராணுவ தாக்குதலை கடுமையாக விமர்சித்து வந்த கனடா நாட்டு எம்.பி. பொப் ரே -வை கொழும்பு விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி, அவரை அடுத்த விமானத்திலேயே திருப்பி அனுப்பியது இலங்கை அரசு.

கனடாவின் லிபரல் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பொப் ரே. கடந்த 2002 - 03 ஆம் ஆண்டுகளில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முயன்ற நோர்வே அமைதி நடவடிக்கைக் குழுவுக்கான ஆலோசகராகவும் செயல்பட்டார்.

அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை இராணுவம் நடத்திய கொடூர தாக்குதலை மிக வன்மையாக கண்டித்து வந்த பொப் ரே , இது தொடர்பாக இலங்கை அரசை கடுமையாக விமர்சித்தும் இருந்தார்.

இதனால் அவரை விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக முத்திரை குத்தி எதிரியாக கருதி வந்தது இலங்கை அரசு.

இந்நிலையில், இன்று அவர் கொழும்பு வந்தார். அவர் இலங்கை வருவது குறித்து முன்கூட்டியே தகவல் அறிந்த இலங்கை அரசு பொப் ரே வை இலங்கைக்குள் அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.

அதன்படி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அவரை அதிகாரிகள் அங்கேயே தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து இலங்கை குடியேற்றத்துறை ஆணையர் அபேகோன் கூறுகையில், பொப் ரே இந்த நேரத்தில் இலங்கை வருவது நல்லதல்ல என்று உளவுத்துறை அரசுக்கு எச்சரித்ததால், அவர் அடுத்த விமானத்திலேயே வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.

இதேவேளை, கனடாவில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக சமீப மாதங்களில் பெரும் போராட்டங்களை நடத்தினர். ரொறன்ரோவில பிரமாண்ட பேரணியையும் அவர்கள் நடத்தினர்.

இதையடுத்து ஆத்திரமடைந்த சிங்கள இனவெறியர்கள் கொழும்பில் உள்ள கனடா நாட்டுத் தூதரகத்தை தாக்கினர். இதற்கு கனடா அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இதற்கு முன்னரும் சனல் 4 தொலைக்காட்சிக்காக செய்தி சேகரிப்பில், ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் இருவர் நாடு கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

பாரதி said...

நானும் அவரைச் சந்தித்திருக்கின்றேன்.
அருமையான உணர்வாளர்.ஆனாலும்
லிபரல்காரர்.நாமிருந்தால் அவர் வெல்லலாம் என்கிற வாஞ்சையும் கொண்டவர்.
சுப்ரமணி

Unknown said...

உண்மையில் உதவி செய்யக்கூடிய, தமிழருக்காகக் கதைக்கக்கூடியவர் அவர்.
அவருக்கு மட்டுமல்ல நோர்வே வெளிவிவகார மந்திரியையே வரவேண்டாம் என்றவர்கள் தானே இலங்கையரசு. பிணம் தின்னும் இப் பேயரசைத் தட்டிகேட்க எவருமின்றி தனித்துவிட்டோம் நாம்.அதற்கான வேலைத்திட்டத்தையும் வழிமுறைகளையும் எங்கல் மீட்பர்கள் வளர்க்காது போனது கவலைக்கிடம்.
ராஜி

டொல்பின் said...

நிறைய விடயங்கள் உங்கள் தளத்திலே,நன்றாக இருக்கிறது. இன்னமும் வளர வாழ்த்துக்கள்.. நானொரு பட்டாம் பூச்சியை இத்தோடு உங்களுக்கு விருதாக்குகிறேன்.
உங்கள் மின்னஞ்சலில் மேலதிக விபரங்கள்.
ரம்யா

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter