Sunday, July 26, 2009

எஞ்சியுள்ள தமிழர்களுக்கும் இடி???


வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள அரச உத்தியோகத்தர்களை புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
[ ஞாயிற்றுக்கிழமை, 26 யூலை 2009, ]
வன்னியில் இருந்து இடம் பெயர்ந்த மக்களை தங்க வைத்திருக்கும் தடைமுகாம்களில் தங்கி இருக்கும் வன்னிப் பகுதி அஞ்சல் அதிபர்கள் மற்றும் கிராம சேவகர்களை இலங்கை இராணுவப் புலனாய்வுப்பிரிவினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழு உறுப்பினர்களும் தனித்தனியாக அழைத்துச் சென்று விசாரணை செய்கின்றனர்.
அவர்களின் கிராம மக்கள் பற்றிய விபரங்களையும் மற்றும் மாவீரர், போராளி குடும்ப விபரங்களையும் மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனப் பிரிவிற்கு உதவிய படப்பிடிப்பாளர்கள் பற்றிய தகவல்களையும் சேகரிப்பதாகவும், மேலும் இறுதிக்கட்டப் போரில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட புகைப்படங்களில் உள்ளவர்களின் சாயலை ஒத்தவர்களை இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர், மக்களை வைத்திருக்கும் தடைமுகாம்களுக்குச் சென்று அந்த முகாமில் உள்ள சகல குடிசைகளுக்கும் சென்று அந்தப் புகைப்படங்களில் உள்ளவர்களை கைது செய்து வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மற்றும் கடந்த கிழமைஇராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆவணத்தொகுதியில் செய்மதி தொடர்பாடல் புத்தகங்களும் மொழி பெயர்க்கப்பட்டு காணப்படுவதாகவும், அந்தப் புத்தகங்களுக்கும் கொழும்பு வெள்ளவத்தை நேல்சன் பிலேசில் வசிக்கும் ஒருவருக்கும் தொடர்புள்ளதாகவும் அந்நபரைத்தேடி இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அவரது வீட்டிற்கு சென்று அவரை தேடி உள்ளதாகவும், அவர் தலைமறைவாகி வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவருகின்றது
.

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter