சுயம் இழக்கும் சூரியன்கள் !!!
அந்த நினைப்பையும் - அந்
நினைப்பின் உள் அர்த்தத்தையும்...
அப்படியே சொல்லி
வைக்க முடியவில்லை!
நினைப்பின் உள் அர்த்தத்தையும்...
அப்படியே சொல்லி
வைக்க முடியவில்லை!
அருவருப்பின் மேல்
படுத்துறங்கியும்...
அசிங்கத்தின் மேல்
கால் பொருத்தியும்...
எதை எடுக்க - நான்
நெடுந்தூரம் நடந்தேன்?
படுத்துறங்கியும்...
அசிங்கத்தின் மேல்
கால் பொருத்தியும்...
எதை எடுக்க - நான்
நெடுந்தூரம் நடந்தேன்?
தமிழன் என்றிருந்த
இன்பச் சுனையை
உலக வீதியெங்கணும்
உடைத்துச் சிதறி...
வெள்ளைப் பனியினுள்
வீசி எறிந்த
கொடிய பசாசு எது?
இன்பச் சுனையை
உலக வீதியெங்கணும்
உடைத்துச் சிதறி...
வெள்ளைப் பனியினுள்
வீசி எறிந்த
கொடிய பசாசு எது?
நீண்ட பளிங்கு
மண்டபங்களிடையே...
நீண்டு கனத்த
அங்கிகளோடு.....
புலம் பெயர் எலும்புகள்
பொறுக்கிச்...
சிதைமேல் எரியும்
மர்மம் தான் என்ன?
மண்டபங்களிடையே...
நீண்டு கனத்த
அங்கிகளோடு.....
புலம் பெயர் எலும்புகள்
பொறுக்கிச்...
சிதைமேல் எரியும்
மர்மம் தான் என்ன?
இன்னும்..இன்னும்..
அதிகமாய்ப் பேசவும்..
இன்னும்..இன்னும்..
அதிகமாய் எழுதவும்..
சொற்களும்..சொற்களிலான
மொழியின் தெளிவுமாய்...உன்
நம்பிக்கையான மொழியே
சிதைந்து போகிற நேரம்...
இப்போதெல்லாம் உன்
அதிஸ்டம் பற்றி
அன்னிய மொழிப்பலகையில்
வாசித்து மகிழ்கிறாய்...போ!
அதிகமாய்ப் பேசவும்..
இன்னும்..இன்னும்..
அதிகமாய் எழுதவும்..
சொற்களும்..சொற்களிலான
மொழியின் தெளிவுமாய்...உன்
நம்பிக்கையான மொழியே
சிதைந்து போகிற நேரம்...
இப்போதெல்லாம் உன்
அதிஸ்டம் பற்றி
அன்னிய மொழிப்பலகையில்
வாசித்து மகிழ்கிறாய்...போ!
கைகளை உயர்த்தி
வெள்ளத்துள் அடங்கும்
கடைசி நிமிடமும்....
கொலண்ட் தமிழர்
ஜேர்மன் தமிழர்
இலண்டன் தமிழர்
பிரெஞ்சுத் தமிழர்
கனடியத் தமிழர்
அமெரிக்கத் தமிழர் என்று
குறி சுட்டலைந்து
நிறத்துணி சுற்றும்
பேதமை உணர்வை - நான்
நியாயப்படுத்தேன்!
வெள்ளத்துள் அடங்கும்
கடைசி நிமிடமும்....
கொலண்ட் தமிழர்
ஜேர்மன் தமிழர்
இலண்டன் தமிழர்
பிரெஞ்சுத் தமிழர்
கனடியத் தமிழர்
அமெரிக்கத் தமிழர் என்று
குறி சுட்டலைந்து
நிறத்துணி சுற்றும்
பேதமை உணர்வை - நான்
நியாயப்படுத்தேன்!
இனி....
ஆசியக் கடைகளின்
மிளகாய்த்தூள் பைகளில்
நீண்டு பின் குறுகிய
புழுக்கொடியல் பொலித்தீன்
உறைகளில்.....
வற்றலாய்ப் போன
காய்கறிப் பொட்டலக்
கடதாசித் தாளில் - தமிழ்
நின்று நிலைத்து நீடு வாழலாம்.
ஆசியக் கடைகளின்
மிளகாய்த்தூள் பைகளில்
நீண்டு பின் குறுகிய
புழுக்கொடியல் பொலித்தீன்
உறைகளில்.....
வற்றலாய்ப் போன
காய்கறிப் பொட்டலக்
கடதாசித் தாளில் - தமிழ்
நின்று நிலைத்து நீடு வாழலாம்.
இது தவிர - அந்த
நினைப்பையும் - அந்
நினைப்பின் உள் அர்த்தத்தையும்
அப்படியே - என்னால்
சொல்லி வைக்க முடியவில்லை!!!
நினைப்பையும் - அந்
நினைப்பின் உள் அர்த்தத்தையும்
அப்படியே - என்னால்
சொல்லி வைக்க முடியவில்லை!!!
மா.சித்திவினாயகம்
1 comment:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment