Friday, June 25, 2010

உலகத்தலைவர்களின் ஜி8 மற்றும் ஜீ20 .
எது மாற்றம்?

உலகத்தலைவர்கள் ஜி8 மற்றும் ஜீ20 மாநாடுகளையொட்டி ரொரன்றோ மாநகரை முற்றுகையிட்டுள்ள இத்தருணத்தில் கனடாவின் மூத்தகுடிகளின் வாரிசுகள் உரத்த குரலில் ஆர்ப்பாட்டம் நிகழ்த்துகின்றார்கள். மூன்றாவது உலக நாடுகளின் மக்களைவிட கேவலமான வாழ்வு எங்களுடையது. அதனை எந்த கனடிய அரசுகளும் கண்டுகொள்ளவல்லையென அவர்கள் கண்ணீர்மல்க தங்கள் கொடுமைகளை விபரிப்பதை எவரும் நின்று நிதானித்துக் கேட்கவில்லை. அவர்களின் மூதாதையரைகொன்று குவித்த எலும்புக்கூடுகளின் மேல்தான் உல்லாச மற்றும் சல்லாபங்களையும், ஜி8 மற்றும் ஜீ20 மாநாடுகளையும் இன்றைய கனேடிய அரசுகள் செய்கின்றன என்பதையும் எவரும் நிதானத்தோடு சிந்திப்பவர்களாயில்லை. தங்கள் இன்னல் கட்டுக் கடங்காநிலையில் பெரும்தெருவை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த தமிழர்களைப் போலவே இவர்களின் குரல்களும் ஓங்கி ஒலித்துப் பின் மறைந்தும்,மறந்தும் போகும். இதுவே உலக நியதியாயிருக்கிறது. அதுசரி மூலை முடுக்குகளிலும்,பட்டிதொட்டிகளெங்கும் நாள்தவறாமல் ஒலித்த எங்களின் தமிழ்க்குரல் உலகத்தலைவர்கள் ரொரன்றோ வந்துள்ள இந்த தருணத்தில் மட்டும் படுத்து விட்டதேன்?? உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை என்று நாங்கள் எதற்கும் சொல்லிகொண்டிருக்க முடியாது. அஞ்சுவதற்கு அஞ்சாமலிருப்பது பேதமையாகும். இந்தத் தருணத்திலாவது தமிழர்களை வழிநடாத்துகிற தமிழர்கள் உணர்ந்திருப்பது மனதிற்கு இதமளிக்கிறது.கனடிய அதிபர் அ[ம்ம்]மெரிக்க அதிபர் கரங்களுள்????
ஓடி..ஓடி..ஓடி..ஓடி
உட்கலந்த ஜோதியை
நாடி..நாடி..நாடி..நாடி..
நாட்களும் கழிந்து போய்
வாடி..வாடி..வாடி..வாடி..
மாண்டு போன மாந்தர்காள்
கோடி..கோடி..கோடி..கோடி
எண்ணிறைந்த கோடியே
என்று ஊருக்கு உரக்கக்கூறிய சிவவாக்கியரையோ
அல்லது அதன் பிறகு அற்புதமான அழகு தமிழில் பாடிய பாரதியின்
மோகத்தைக் கொன்றுவிடு பாடலாலோ கூட இந்த மண்ணில் எம்மாற்றமும் நிகழ்ந்து விடவில்லை.
மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று அந்நாளிலிருந்து இந்நாள் ஒபாமா வரை கூக்குரலிட்டும் எது மாற்றம் என்று கூட எவருக்கும் புரியவில்லை .


மீண்டும் ஒரு தரம் பாரதியின் அந்த அற்புதமான பாடல் இதோ!!!

மோகத்தைக் கொன்றுவிடு !!
மாகவி பாரதி
மோகத்தைக் கொன்றுவிடு -- அல்லா லென்றன்
மூச்சை நிறுத்திவிடு
தேகத்தைச் சாய்த்துவிடு -- அல்லாலதில்
சிந்தனை மாய்த்துவிடு
யோகத் திருத்திவிடு -- அல்லா லென்றன்
ஊனைச் சிதைத்துவிடு
ஏகத் திருந்துலகம் -- இங்குள்ளன
யாவையும் செய்பவளே!
பந்தத்தை நீக்கிவிடு -- அல்லா லுயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு
சிந்தை தெளிவாக்கு -- அல்லாலிதைச்
செத்த உடலாக்கு
இந்தப் பதர்களையே -- நெல்லாமென
எண்ணி இருப்பேனோ
எந்தப் பொருளிலுமே -- உள்ளேநின்று
இயங்கி யிருப்பவளே.

கள்ளம் உருகாதோ -- அம்மா
பக்திக் கண்ணீர் பெருகாதோ?
உள்ளம் குளிராதோ -- பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ?
வெள்ளக் கருணையிலே -- இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
விள்ளற் கா¤யவளே -- அனைத்திலும்
மேவி யிருப்பவளே!

2 comments:

Anonymous said...

Good work keep it up. Jega

Anonymous said...

It,s me nice blog really nice.aravinth

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter