Thursday, June 25, 2009

இலங்கை நிலவரத்தை கருத்தில்கொண்டு குடிவரவு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியிருக்கும் கனடா
இலங்கையின் தற்போதைய மனிதாபிமான நிலவரத்தை கருத்தில்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான குடிவரவு நடவடிக்கையை கனடா தற்போது துரிதப்படுத்த ஆரம்பித்திருக்கிறது.
கனடிய பிரஜைகள், நிரந்தர வதிவிட உரிமையைக் கொண்டிருப்போர் மற்றும் இலங்கையில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை கொண்டிருக்கும் பாதுகாக்கப்பட்ட நபர்கள் (கணவன் அல்லது மனைவி, பொதுவான சட்ட ரீதியான பங்காளிகள், தங்கியிருக்கும் பிள்ளைகள், பெற்றோர்கள், பாட்டன், பாட்டி, நிராதரவான குடும்ப உறுப்பினர்கள்) ஆகியோர் தற்போதைய மனிதாபிமான நிலைவரத்தில் நேரடியாகவும் அல்லது குறிப்பிட்டத்தக்க அளவிலும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் கனடா பிரஜாவுரிமை, குடிவரவு பிரிவுக்கு அறிவிக்க முடியும்.
இது தொடர்பான அறிவிப்பை கனடிய குடிவரவுப் பிரிவு கடந்த 3 ம் திகதி அறிவித்திருந்தது.
இலங்கையின் நிலைவரம் தொடர்பான விடயங்களை ஆராயும் நிலையங்களும் கொழும்பில் உள்ள கனடிய உயர்ஸ்தானிகராலயமும் புதிய மற்றும் தற்போதுள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகளை துரிதமாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுசரணை வழங்குபவர்கள் திணைக்களத்துக்கு அறிவித்தால் கனடிய குடிவரவு பிரஜாவுரிமை திணைக்களம் தற்போதுள்ள குடும்ப மட்ட விண்ணப்பங்களை துரிதப்படுத்தும். இந்த குடும்ப உறுப்பினர்கள் இலங்கையின் நிலைவரத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுயமாக அடையாளப்படுத்தினால் இந்த விண்ணப்பங்களை துரிதமாக்கும் அதேவேளை, விண்ணப்பதாரியும் விண்ணப்பம் தொடர்பான தீர்மானத்தை கொழும்பில் உள்ள விசா அலுவலகமோ அல்லது அழைப்பு நிலையமோ கனடிய குடிவரவு பிரஜாவுரிமை நிலையங்களோ தீர்மானிக்கமாட்டாது.
தாம் அனுசரணை வழங்கிய உறவினர்கள் அல்லது தங்களில் தங்கியிருக்கும் நபர்கள் யாரேனும் இலங்கையில் தற்போது இருந்தால் அவர்கள் தற்போதைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்டிருந்தால் கனடாவின் அழைப்பு நிலையத்துக்கு அறிவிக்க முடியும். அனுசரணை வழங்குவோரும் கனடாவில் உள்ள விண்ணப்பதாரிகளும் கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகராலயத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தமது உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இடம்பெயர்ந்த குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளும் நடவடிக்கையை விசா அலுவலகம் மேற்கொள்ளாது. வடபிராந்தியத்தில் உள்ள முகாம்களுக்கு விசா அதிகாரிகள் செல்லமாட்டார்கள். அதேசமயம், நிரந்தர வதிவிட உரிமையுடைய விசா விண்ணப்பதாரிகள் இலங்கை அதிகாரிகளிடமிருந்து பயணச்சீட்டு அனுமதியை பெற்றுக்கொண்டு கொழும்புக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆயினும், இந்த நடவடிக்கைகளுக்கு விசா அதிகாரிகள் அனுசரணை வழங்க மாட்டார்கள்.
அனுசரணை வழங்கும் ஒருவர் கனடிய குடிவரவு பிரஜாவுரிமை திணைக்களத்துடன் தொடர்புகொண்டால் அனுசரணை வழங்கப்பட்ட விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனுசரணை விண்ணப்பாதரிகளும் தங்கியிருப்போரும் மருத்துவப் பரிசோதனைக்காக கொழும்பில் இருக்க வேண்டிய தேவையுள்ளது. தேவைப்பட்டால் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள்.
அதேசமயம், அவர்கள் குடிவரவு அகதி பாதுகாப்பு சட்டமூலத்தின் பிரகாரம் தேவைப்படுவனவற்றை நிறைவேற்றக்கூடியவர்களாக இருக்க வேண்டும். பாதுகாப்பு சோதனைகளும் இதில் உள்ளடங்கியிருக்கும். மனிதாபிமான மற்றும் பரிவிரக்கத்தன்மையான காரணிகளும் பரிசீலிக்கப்பட முடியும். அவை தொடர்பாக விசா அலுவலகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
கனடிய குடிவரவு அகதிகள் பாதுகாப்புச் சட்டமூலத்தில் தேவைப்படுவனவற்றை பூர்த்தி செய்யக்கூடிய இலங்கை விண்ணப்பாதாரிகளுக்கு விசா அதிகாரிகள் தொடர்ந்து நிரந்தர மற்றும் தற்காலிக வதிவிட விசாக்களை வழங்குவார்கள்.
இதேசமயம், விண்ணப்பம் தொடர்பாக எப்போது இறுதி முடிவு செய்யப்படும் என்பது குறித்து உத்தரவாதம் இல்லை. கனடிய குடிவரவு பிரஜாவுரிமைகள் திணைக்களம் நிலைமையை மிகவும் நெருக்கமாக அவதானித்து வருகிறது. மனிதாபிமான ரீதியாகவும் தளர்வுப் போக்குடனும் தொடர்ந்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த விண்ணப்பங்களை துரிதமாக பரிசீலனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அனுசரணையாளரிடம் கனடாவில் உள்ள நிரந்தர வதிவிடத்தைக் கொண்டிருக்கும் விண்ணப்பாதரிகளும் இலங்கையில் உள்ள தமது விண்ணப்பதாரிகள் குறித்து அறிவிக்க வேண்டும். அவர்கள் இலங்கை நிலைவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து தெரிவித்திருக்க வேண்டும். கனடிய குடிவரவு பிரஜாவுரிமை அழைப்பு நிலையத்துக்கு இது தொடர்பாக அறிவிக்க வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையின் பிரகாரம் விண்ணப்பதாரிகள் இடம்பெயர்ந்திருந்தால் விசா அலுவலகம் அவர்களுடன் தொடர்பை மேற்கொள்வது கடினமாகும். சாத்தியமானளவிற்கு துரிதமாக தாங்கள் இங்கே இருக்கின்றார்கள் என்பதற்கு விண்ணப்பதாரிகள் கொழும்பில் உள்ள விசா அலுவலகத்துக்கு அறிவிக்க வேண்டும்.


Sri Lanka Initiative



Applications for Family Class Members and Dependants of in-Canada Permanent Residence Applicants Affected by the Current Humanitarian Situation
Issue :In response to the situation in Sri Lanka, the Case Processing Centres (CPCs) and the Canadian High Commission in Colombo, Sri Lanka, will expedite the processing of new and existing applications from:
Canadian citizens, permanent residents and protected persons who have close family members in Sri Lanka (specifically, spouses, common-law and conjugal partners, dependent children, parents, grandparents and orphaned family members) who identify themselves as being directly and significantly affected by the current humanitarian situation and who notify Citizenship and Immigration Canada (CIC).
Current situation
If sponsors notify the Department, CIC will expedite the processing of existing family class applications for family members who self-identify as being directly and significantly affected by the situation in Sri Lanka. Staff at CPCs, the Call Centre, CIC local offices and the visa office in Colombo are not required to determine the degree to which an applicant is affected.
The onus for this initiative is on sponsors and in-Canada applicants to contact the Call Centre if their sponsored relatives, or dependants included for concurrent processing, reside in Sri Lanka and are directly and significantly affected by the current situation. They should seek to have these applications identified from the inventory at the CPCs. Sponsors and in-Canada applicants should also tell their relatives to contact the Canadian High Commission in Colombo.
The visa office cannot take the initiative to contact displaced family members. Visa officers will not have access to camps in the northern region. Individuals with permanent residence (PR) visa applications may receive travel passes from Sri Lankan authorities and may be allowed to travel to Colombo. However, visa officers cannot facilitate this process.
Once the sponsor has contacted CIC, the sponsored applicants will have a higher processing priority assigned to their applications. Sponsored applicants and dependants included for concurrent processing will need to be available in Colombo for medical examination and, if required, an interview. They will also need to meet the Immigration and Refugee Protection Act (IRPA) requirements, including the requirement for security screening. Humanitarian and compassionate factors can be examined and should be brought to the attention of the visa office for consideration.
Visa officers will continue to issue permanent and temporary resident visas to Sri Lankan applicants who meet the requirements of IRPA. In-Canada applications for extension of temporary resident status will be processed in the usual manner.
There can be no guarantee as to when an application will be finalized since many factors can influence the length of time required to process the application. CIC is closely monitoring the situation as it evolves and will continue its practice of responding in a flexible and humane manner and endeavor to complete these applications as quickly as possible.
Procedures
New sponsorship applications
New sponsorship applications should have “SRI LANKA” written on the mailing envelope. Such applications will be assigned a higher processing priority. Nevertheless, all sponsorship requirements must be met. Incomplete applications will be handled as usual.
The CPC will carefully consider self-identified requests from sponsors with relatives in Sri Lanka. It remains the sponsor’s and/or applicant’s responsibility to complete all the required steps (including being available for interviews, medical examination, etc.).
Existing applications at the CPCs or local offices
Sponsors and in-Canada permanent residence applicants must identify existing applications which include persons residing in Sri Lanka who have been directly and significantly affected by the situation, by notifying the CIC Call Centre.
They must provide information regarding their application and their relatives in Sri Lanka (including the HPM receipt number). This information will be forwarded to the appropriate CPC or inland local office, which will retrieve the application and take appropriate action.
Upon notification that the file has been forwarded to the visa office, the onus is on the sponsor or in-Canada applicant to inform the overseas relative(s) to contact the visa office (see below).
The in-Canada confirmation of PR appointments for protected persons “ready for landing” at the local offices, will be facilitated in order to expedite visa issuance to dependants in Colombo.
Applications at visa office in Colombo, Sri Lanka, for overseas assessment
Where possible, family class applicants who are in Sri Lanka, and whose sponsor has informed CIC that they are directly and significantly affected by the situation, should contact the visa office in Colombo (contact details are available at
www.srilanka.gc.ca).
The office will begin processing family class applications from applicants who contact the office. They will expeditiously review the PR applications of applicants who appear in person at the office.
All immigration requirements, including security and medical admissibility, must be met. Applicants must ensure that they are available for an interview, if necessary.
Relatives in Sri Lanka have been displaced
If applicants are displaced as a result of the situation, it is difficult for the visa office to contact them. Applicants should be informed to notify the visa office in Colombo of their new location as soon as possible.
Note: If an application has been identified by the sponsor and the visa office is unable to reach the family member(s) within 180 days, the application will be closed. The appropriate CPC will be notified of the file closure. For detailed instructions, pleaserefer to
OP 2, section 7.6 (for sponsorship applications) or OP 24, section 7.4 (for in-Canada PR applications).
Medical and security requirements
The safety and security of Canada remains CIC’s top priority. All immigration requirements, including security and medical criteria, must still be met.
Cases which require further investigation will be processed as usual. Visa officers must continue to follow established security screening protocols.
Processing fees
There is no fee exemption unless already prescribed by IRPA and its regulations.
Expiry of initiative
This initiative will be reviewed six months from the publication date of this bulletin. Unless a new bulletin extending the initiative is published within seven months of the date of this bulletin, it will expire seven months from the publication date.

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter