Friday, August 07, 2009

புலிகளின் புதிய தலைவர் திட்டமிட்டுக் கைது.

புலிகளின் புதிய தலைவர் திட்டமிட்டுக் கைது. இக் கைதின் பின்னணியில் வெளிநாட்டுஉளவு நிறுவனங்கள், மற்றும் புலியின் உள்துறையாளர்கள் சம்பந்தப்பட்டிருந்தனரா????


கே. பத்மநாதன் மலேசியா, கோலாலம்பூரில் கடத்தப்பட்டுள்ளார் !!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதன் நேற்று முன்தினம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து மலேசிய மற்றும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
நேற்று முன்தினம் புதன்கிழமை பிற்பகல் அளவில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 'மஜீத் இந்தியா' என்று குறிப்பிடப்படும் பகுதியில் உள்ள 'ரியூன்' (Tune Hotels) விடுதிக்கு ஒரு சந்திப்புக்காக சென்றிருந்தபோது செல்வராஜா பத்மநாதன் கடத்தப்பட்டுள்ளார்.
வெளிநாடு ஒன்றில் இருந்து அவரைச் சந்திப்பதற்காக மலேசியா சென்றிருந்த, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனின் சகோதரர் மற்றும் பா.நடேசனின் மகன் ஆகியோரைச் சந்திப்பதற்காகவே செல்வராஜா பத்மநாதன் அந்த விடுதிக்குச் சென்றிருந்தார். பிற்பகல் அளவில் குறிப்பிட்ட அந்த 'ரியூன்' விடுதிக்குச் சென்ற செல்வராஜா பத்மநாதன், அவர்கள் தங்கியிருந்த அறையில் அவர்களுடன் உரையாடியிருக்கின்றார்.
பின்னர் - பிற்பகல் 2:00 மணியளவில் - தனக்கு வந்த ஒரு செல்லிடப்பேசி அழைப்பை ஏற்று தனிமையில் உரையாடுவதற்காக அந்த அறையை விட்டு வெளியே சென்ற அவர் திரும்ப வரவில்லை. அதன் பின்னரே அவர் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி - செல்வராஜா பத்மநாதன் மலேசிய புலனாய்வுத்துறை அல்லது மலேசிய பாதுகாப்பு வட்டாரங்களின் ஒத்துழைப்புடன் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டதாகவே குறிப்புகள் உணர்த்துகின்றன.
அதே வேளையில் வேறு வெளிநாட்டு உளவுத்துறையின் ஆசீர்வாதமும், கூட இருந்தே குழிபறிப்போரின் அனுசரணையும் கூட இந்தக் கடத்தலுக்கு இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் தமிழர் வட்டாரங்களில் நிலவுகின்றது.
இருந்த போதும் - இந்தக் கடத்தலுடன் மலேசிய பதுகாப்பு மற்றும் புலனாய்வு வட்டாரங்களுக்கு இருக்கும் தொடர்பை மறைத்து திசை திருப்பும் நோக்குடனேயே இவ்வாறு தகவல் வெளியிடப்படுகின்றது என்றும் கருதப்படுகின்றது.
த்ற்போது கிடைத்த தகவல்களின்படி செல்வராஜா பத்மநாதன் அவர்கள் நேற்று வானூர்தி முலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.விடுதலைப்புலிகள் அமைப்பின் புதிய தலைவரான கே.பி. என்று அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றில் புதன்கிழமையன்று கைது செய்யப்பட்டதாக, இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ பிபிஸியிடம் தெரிவித்தார்.
மலேசியாவில் கடத்தப்பட்ட செல்வராஜா பத்மநாதன் கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்திய அமைச்சர் கேகலிய ரம்புக்வெல, சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பினர் உள்நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டதாக அனைத்துலக வரையறைகளுக்கு இசைவாக இந்த விவகாரத்தை கையாள்வர் எனவும் தெரிவித்தார். மலேசியாவில் கைது செய்யப்பட்டு நேற்று இரவு கொழும்பு கட்டுநாயக்க வானூர்தி நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட பத்மநாதன், கையில் விலங்கிலங்கிடப்பட்ட நிலையில் தலை முழுமையாக மூடப்பட்டவாறு வானூர்தியில் இருந்து அவசரமாக இறக்கப்பட்டு அருகில் காத்திருந்த கண்ணாடிகள் மறைக்கப்பட்ட ஜீப் ஒன்றில் ஏற்றப்பட்டு அவசரமாக அங்கிருந்து கடும் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதனை அவர் பதுங்கியுள்ள நாட்டில் வைத்து சுட்டுக்கொல்வதே தமது நோக்கம் என்றும் சூழ்நிலைகள் சரிவர அமையாததனால் அவரை கைது செய்து சிறிலங்கா கொண்டுவர வேண்டியதாகிவிட்டது என்றும் சிறிலங்கா படைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைபாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் பேச வல்ல அதிகாரி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.







Sri Lanka is capable of defeating LTTE terrorism wherever it emerges- Defence spokesperson on KP's arrest
Sri Lankan forces, intelligence units and other defence authorities are capable of defeating LTTE terrorism wherever or whenever it tries to reemerge, says government Defence Spokesperson, Minister Keheliya Rambukwella.
Speaking at a special media briefing held at the Media Centre for National Security (MCNS), Colombo; Minister said that LTTE's self claimed leader after V. Prabhakaran and the outfit's head for international terrorist activities Kumaran Pathmanadan alias KP was arrested outside the island yesterday (Aug 6) and brought into the country this morning (Aug 7).
The Minister underscored the importance of the arrest as the removal of the remaining LTTE leader who tried to overshadow the country's victory over terrorism.
" Though we have successfully defeated LTTE in the battle, a seed of doubt was left in the minds of average persons that there was a possibility for KP to resume the terrorist activities , owing to the connection he had with international terrorist network.", said the Minister.
The Minister further pointed out that there has been a clear attempt by some of the unpatriotic politicians to down play the forces victory over terrorism and to promote an idea that LTTE will make a comeback with KP's leadership.
"Our defence authorities have foreseen this situation, and proactively and determinedly taken action to defeat this and also taken the key LTTE remnant into custody", he said.
Also, he highlighted though the suspect was among the most wanted terrorist by many INTETPOL and various other foreign law enforcement agencies, it was the Sri Lankan authorities that finally located him.
Finally, the Minster pointed out the international support that Sri Lanka is currently having in her endeavor to curb terrorist activities. Though he did not divulge all the details of the arrest due to security reasons, he said that arrest was made a success due to the unreserved , and adequate support of the " international friends" of Sri Lanka
.

3 comments:

Anonymous said...

உடனடியாகவே தலைவராகப் புலிகள் தலைமைச்செயலகம் சர்வதேசப் பொலிஸார் தேடும் ஒருவரைப் போட்டது பெரிய தவறு. அதனைப் பலரும் சுட்டிக்காட்டியும் எவரும் கண்டுகொள்ளவில்லை.
சுபா

சுரேந்திரன் ராசா said...

தொலைநோக்குள்ள,ஆளுமையுள்ள நல்ல மனிதர் பத்மநாதன் அவரது கைது
கவலையளிக்கிறது.
இது அவரின் இணைய வலையிலிருந்து...........
சுரேன்

//சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் சிக்கியுள்ள ஈழத் தமிழர் தேசம் இராணுவ ஆக்கிரமிப்பு அகன்ற ஒரு சூழலில் – கொடிய யுத்தத்தினால் நிலை குலைந்து போன தமது வாழ்வினை மீளக் கட்டியமைத்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள ஒரு சூழலில் – எவ்வித அச்சமுமின்றி – ஆபத்துக்களுமின்றி அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக எழுதவும் பேசவும் விவாதிக்கவும் முடியக்கூடிய ஒரு சூழலில் மட்டுமே – தமது அரசியல் அபிலாசைகளை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும்.
நமது தாயகத்தில் மக்களின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பால் மட்டுமல்ல – சிறிலங்காவின் சட்டங்களுக்கூடாகவும் மறுக்கப்பட்டிருக்கிறது.
உதாரணமாக தமிழர் தேசத்தின் அரசியல் அபிலாசைகளான தேசியம், தாயகம் எனும் அடிப்படைகளோடு கூடிய சுயநிர்ணயத்தை அதன் முழுமையான அர்த்தத்துடன் – அதாவது ஈழத் தமிழ்த் தேசிய இனம் தனது அரசியல் தலைவிதியினைத் தானே தீர்மானிக்கக்கூடிய உரிமையே சுயநிர்ணய உரிமை எனும் அடிப்படையில் – தமக்கென ஒரு தனிநாட்டினை அமைத்துக் கொள்ள உரிமையுடையது என்ற கருத்தினை உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ ஒரு ’சிறிலங்காப்பிரசை’ வெளியிட்டால் – சிறிலங்காவின் அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச்சட்டத்தின் கீழ் இது தண்டனைக்குரிய ஒரு குற்றம்.
மேலும் தற்போதய சிறிலங்கா அரசு தான் இனத்துவ அரசியலை நிராகரிப்பதாகக் கூறுகிறது. சிறுபான்மை என எவரும் இலங்கைத்தீவில் இல்லை எனவும் கூறுகிறது.
சிங்கள இனத்தின் அரசியல் ஆதிக்கத்துக்குள் இலங்கைத்தீவினை அமிழ்த்திக் கொண்டு – பௌத்த நாடாகப் அரசியல் சட்டரீதியாகப் நாட்டைப் பேணிக்கொண்டு – சிறிலங்காவின் தேசியக்கொடியில் ’சிறுபான்மையினரான’ தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் இரு சிறிய கோட்டுத்துண்டுகளை ஒதுக்கிக் கொண்டு இவ்வாறு பேசுவது மிகப் பெரும் அபத்தம்.
இலங்கைத்தீவில் நாம் ஈழத் தமிழ் தேச மக்களாகிய நாம் ஒரு தேசம் (Nation) என்ற அங்கீகாரத்தைக் கோரினோம். அதற்காகப் போரிட்டோம். சிங்கள தேசத்தை அங்கீகரித்தவாறு – தமிழ்த் தேசத்திற்கு உரிய அங்கீகாரத்திற்காக அகிம்சை வழியிலும் ஆயுதம் தாங்கியும் ஈழத் தமிழர் தேச மக்களாகிய நாம் போராடினோம்.
சிங்கள அரசுகள் ஈழத் தமிழ் மக்களை தேசமாக அங்கீகரிக்கவில்லை. ஆனால் மகிந்த அரசுக்கு முன்னைய சிங்கள அரசுகள் தமிழரின் இனத் தனித்துவத்தை ஏற்றுக்கொண்டு ‘சிறுபான்மையினர்’ என்ற அடிப்படையில் நமது பிரச்சினைகளை அணுக முற்பட்டனர்.
இங்கு எண்ணிக்கையில் குறைந்த தேசிய இனம் என்பது வேறு. சிறுபான்மையினர் என்பது வேறு. இந்த வேறுபாட்டை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
சிங்கள தேசத்துடன் ஒப்பிடும் போது தமிழர் தேசம் ஆறு மடங்கு எண்ணிக்கையில குறைந்தது தான். ஆனால் ஈழத் தமழ் மக்கள் சிறுபான்மையினர் அல்லர். இலங்கைத்தீவின் வடக்குக்கிழக்குப் பகுதிகளை தமது தாயகமாகக் கொண்டு தமிழ் மொழி, தமிழ்ப்பண்பாடு அடிப்படையில் தனித்தவமாக வாழ்ந்து வரும் – சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய ஒரு தேசம்.
சிங்கள தேசத்திற்குரிய அனைத்துரிமைகளுக்கும் தன்னாட்சி உரிமைக்கும் தமிழர் தேசம் உரித்துடையது. இதனை முன்னைய சிங்கள அரசுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை எதிர்த்துத் தமிழர் தேசம் போராடியது.
ஆனால் தற்போதைய மகிந்த அரசு இன்னும் ஓர்படி மோசமாகப் போய் ஈழத்தமிழ் மக்களாகிய நாம் ஒரு தேசம் என்பதை நிராகரிப்பது மட்டுமன்றி – நமது இனத் தனித்துவத்தையே மறுக்கிறது. சிறுபான்மை என இங்கு எவரும் இல்லை. நமது நாடு சிறிலங்கா – நாம் அனைவரும் சிறிலங்கரே – எனக் கூறுகிறது. இதுவே மகிந்த அரசின் கொள்கைப் பிரகடனம்.
சிறிலங்கா சிங்கள தேசத்திற்குரிய. அடையாளம். தமிழர் தேசத்திற்குரியது அல்ல. நாம் ஈழத் தமிழர். சிறிலங்கர் அல்ல. இது ஒவ்வொரு ஈழத் தமிழருக்குள்ளும் ஆழ உறைந்திருக்கும் அடையாள நியமம்.
இதனை மறுதலித்து மகிந்த அரசு செய்ய முனையும் சிறிலங்கா தேச நிர்மாணத்தை நான் வலிந்த தேச நிர்மாணம் (Forced Nation Building) என வகைப்படுத்த விரும்புகிறேன்.
உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ltte.ir@gmail.com
நன்றி. மீண்டும் நாம் அடுத்த வாரம் சந்திப்போம்.

என்றும் அன்புடன்
கேபி
01.08.2009

uththaman said...

கே பி யின் கைது ஒரு நாடகமுங்கோ.
கே பிக்கு ரோ மற்றும் சூழவுள்ள அனைத்துப் பினாமிகளின்ர தொடர்புகளும் இருந்துதுங்கோ.அண்மைக்காலத்தில கே பீ விட்ட அறிக்கைகளும் அவரின் நேர்காணல்கள் இடம் பெற்ற இந்திய மற்றும் உலகப் பத்திரிகைகளையும் பார்த்தால் அவை ஒருபோதும் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு தந்தவர்களின்
பத்திரிகைகள் அல்ல என்பது புரியும். அவருடன் படித்த உலக வாழ் அறிவுஜீவிகளும் புலிக்கு ஆதரவாளர்கள் அல்ல. இப்படியிருக்கையில் இவ்வளவு நாளும் தப்பியிருந்த கேபி இப்போ பிடிபட்டது திட்டமிட்ட நாடகம்.இனி அவர் வெளிவரும் போது பல உண்மைகள் வெளிவரும்.
எக்ஸில் உத்தமன்

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter