
25வதுஆண்டு
குமுதினிப் படுகொலையின் நினைவறாநாள்.
சிங்கள இனவெறியரசின் கூலிப்படைகளால் கடல்ப் பெருவெளியில் கொன்றொழிக்கப்பட்ட எம் நெடுந்தீவகத்து உடன் பிறப்புகளினை நாம் இழந்து 25 வருடங்களாகின்றன. இலங்கையரசினால் வேண்டுமென்றே மறக்கடிக்கப்பட்டு கிடப்பிலே போடப்பட்டிருக்கும் இக்கோர மரணங்களின் மர்மங்களை இன்னமும் உலகம் கண்டு கொள்ளவில்லை. மனதை விட்டகலாத் துயரோடு எம் மண்ணின் மலர்களுக்கு கண்ணீரால் அஞ்சலிக்கின்றோம்.

இன்றைக்குப் போலிருக்கிறது அந்த அனர்த்தம்.
25 ஆண்டுகழிந்து விட்டது என்பதை நம்ப மறுக்கிறது மனம்.
கடல் வெளியில் பிணந்தின்னிப் பேய்களினால் அனாதரவாய்க் கிள்ளியெறிந்த எம் ஊரின் உறவுகளுக்கு எம் கண்ணீரைக் காணிக்கையாக்கத் துடிக்கின்றோம்.
எம்மிடமிருக்கும் கடைசிச்சொட்டுக் கண்ணீராலும்,
உங்கள் காலடியை நனைக்கத் துடிக்கின்றோம்.
இன்னமும்
மானிட இருத்தலை மறுதலித்தெறிந்து
சுடுகாடாய்க்கிடக்கிறது இத் தேசம்.
திரும்பும் திசையெங்கும் மரண வலி.
ஊருக்காய் உயிர் கொடுத்த உத்தமர்களே,
உங்களை எங்கள் மனதினுள் பத்திரப்படுத்துகின்றோம்.
இதைத் தவிர உங்களுக்கு உறுதியாகச் சொல்லவல்ல
வார்த்தைகள் எதுவும் இன்று எம்மிடம் இல்லை..

25வது ஆண்டு குமுதினிப் படகு படுகொலையின் நினைவு நாள் மே 15 ந் திகதியாகும். அன்றைய நாளில் இலண்டனிலுள்ள நெடுந்தீவிற்கான சம்மேளனங்கள் மாபெரும் நினவெழுச்சி நிகழ்வொன்றினை அங்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். அந் நிகழ்ச்சி தொடர்பான தகவல்கள் பின்னர் அறியத் தரப்படும்.
தகவல் கா. சாந்தலிங்கம் [இலண்டன்]
http://kumuthini.blogspot.com
1 comment:
Post a Comment