Saturday, June 05, 2010

கோயம்புத்தூரில் நடைபெற இருப்பது செம்மொழிக்கொலை!!

கோயம்புத்தூரில்
நடைபெற இருப்பது செம்மொழிக்கலையா?
செம்மொழிக் கொலையா???

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் 2010 இல் நடைபெற இருந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஈடாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து இருக்கிறார். இந்த மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாட்டையும் சேர்த்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்கள் பெரும் அழிவைச் சந்தித்து, வதை முகாங்களில் இருக்க உலகத் தமிழாராய்ச்சி அல்லது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பொருத்தமானதா என்று கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் கேள்வி விடுத்துள்ளது. "பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட்ட போது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா" என்று மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி விமர்சித்துள்ளார்

தமிழறிஞர்களின் சுயநலம்
தமிழர்களாக இருந்ததால், பல்லாயிரக்கணக்காணவர்கள் கொல்லப்பட்ட, சிறைபட்ட சூழலில் மொழியைக் கொண்டாடுவது தமிழறிஞர்களின் சுயநலம் ஆகும். முதலில் எதிர்ப்புப் தெரிவித்த பல அறிஞர்கள் பின்னர் சேர்ந்து கொண்டதும் தமது சுயநலத்தை முதற்கொண்டே. "தமிழினத்திற்கு எதிரான அரசியல் முன்னிறுத்தப்படும் சூழலிலும் தமிழறிஞர்கள் தமிழுக்கு நன்மை என்ற வாதத்தை முன்வைப்பது எவ்வளவு அபத்தமானது
.

இம் மாதம் கோயம்புத்தூரில் நடைபெற இருக்கும் செம்மொழி நாட்டில் தமிழ் மொழியின் எழுத்துகளைச் சீர்த்திருத்தம் செய்யப் போவதாகவும், அதன்படி இ, ஈ, உ, ஊ ஆகிய எழுத்து வரிசைகளில் உள்ள 72 உயிர்மெய் எழுத்துகளை அகற்றி விட்டு மொழியை இலகுவாக ஆக்குவதற்கு செம்மொழி மாநாடு அவசியம் என்று சொல்லப்படுகிற இவ்வேளை கணணியில் வெளிவந்துள்ள மலேசிய நண்பனின் மாநாடு பற்றிய கீழ்வரும் கருத்துக்கள் கவனிக்கத் தக்கதொன்றாகும்.

மொத்தத்தில் தமிழில் உள்ள 246 எழுத்துகளையும் எடுத்து விட்டு 72 எழுத்து களாக மாற்றப் போகிறார்கள். இது தான் கதை. இ, ஈ, உ, ஊ ஆகிய நான்கு எழுத்து வரிசைகளில் 72 உயிர்மெய் எழுத்துகள் உள்ளன. அந்த 72 உயிர்மெய் எழுத்துகளையும் அப்படியே மாற்ற வேண்டும் என்று சிலர் திட்டம் தீட்டி செயல் படுத்தி வருகிறார்கள்.சி, சீ, சு, சூ, தி, தீ, து, தூ, பி, பீ, பு, பூ போன்ற எழுத்துக்கள் எதிர்காலத்தில் உலகளாவிய நிலையில் பெரும் பிரச்னை கொடுக்கப் போகிறதாம். அதனால் அவற்றை மாற்ற வேண்டும் என்கிறார்கள். அதோடு விட்டால் பரவாயில்லை. நான்கு புதிய எழுத்துக்களையும் கொண்டு வருகிறார்கள். அவை மத்திய கிழக்கு நாடுகளின் புழக்கத்திற்கு கொண்டு போகின்றன. அந்தப் புதிய எழுத்துகள் ஜிலேபி வடிவத்தில் ரொம்ப அழகாக இனிப்பாகவும் இருக்கின்றன.
குழந்தைகளுக்கு மிட்டாய் ஜிலேபி என்றால் பிடிக்கும் இல்லையா. அதனால் அந்த எழுத்துகளையும் பார்த்துச் சிரித்துக் கொண்டே படிப்பாரகள் என்று அப்படி வடிவம் அமைத்து இருக்கிறார்கள்.சீர்திருத்தம் செய்யப் படும் தமிழின் உகர எழுத்துகளை இடமிருந்து வலது புறமாக அராபிய ஜாவி எழுத்துகளைப் போல எழுத வேண்டி வரும். சொல்லப் போனால் தமிழின் 246 எழுத்துகளை புதிய வடிவத்தில் 72 எழுத்துகளுக்குள் அடக்கி விட வேண்டும் என்று சொல்கிறார்கள். இரண்டாயிரம் எழுத்துகளை வைத்து இருக்கும் சீனர்களே அமைதியாக இருக்கிறார்கள். 246 எழுத்துகளை வைத்து இருக்கும் நாம் ஏன் அய்யா இப்படி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். புரியவில்லை. தமிழ் எழுத்துகள் செய்த பாவம் என்ன என்றும் தெரியவில்லை.
ஒரே அடியாக 246 எனும் எண்களின் நடுவில் இருக்கும் 4ஐ பிடுங்கி விட்டால் ரொம்ப நல்லா இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. சீர்திருத்தமும் செம்மையாக இருக்கும் இல்லையா. அதைவிட 26 ஆங்கில எழுத்துகளை அப்படியே தமிழுக்கு கொண்டு வந்து அம்மா என்று எழுதுவதற்குப் பதில் AMMA என்று ரோமானிய வடிவத்தில் எழுதி விடுவதே நல்லது என்பது என்னுடைய கருத்து. தமிழ் எழுத்துகளே தேவை இல்லை. ரொம்ப சிம்பளாகப் போய் விடும். செத்துப் போன நீரோ திரும்பி வந்து பிடில் வாசிக்கட்டுமே.ஆக, அந்தத் திட்டத்தை செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றம் செய்யப் போகிறார்கள். சபாஷ் சரியான போட்டி! மாற்றுங்கள் என்று சொல்லிக் கொண்டு மலேசியாவில் இருந்தும் சிலர் போகிறார்கள். பாவம், அவர்களைக் குறைச் சொல்லக் கூடாது. அவர்களில் சிலர் கஷ்டப் பட்டு எழுதிய நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் எல்லாம் எதிர்காலத்தில் யாராலும் படிக்க முடியாமல் போகப் போகிறது. ஏன் என்றால் புதிய தமிழ் எழுத்துகள்தான் செல்லுபடி ஆகும். அப்புறம் எழுதியதை எல்லாம் புதிதாக மாற்ற வேண்டி இருக்கும். புதிய புத்தகங்களை அச்சிடுபவர்களின் இல்லங்களில் குபேர சாமியாரின் சொல் வாக்குதான் செல்வாக்காக இருக்கும். வாழ்க செம்மொழி மாநாட்டின் செம்மல்கள்.அல்லது கும்பல்கள்.

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter